அபயகரம் அளிக்கும் இசை நிகழ்ச்சி

.
சென்னையில் இருந்து பாரம்பரிய(Classical)  மற்றும் சங்கம இசை (Fusion Music) வழங்கிப் பிரசித்தி பெற்ற சங்கீதக் குழுவின் இசை நிகழ்ச்சி அவுஸ்திரேலியாவில் முதல்முதலாக வருகிற ஏப்பிரல் மாதம் 24ஆம் திகதி மாலை 6மணிக்கு UWS, Rydalmere, Parramatta Campus y; Sir Ian and Nancy Turbot அரங்கில் நடைபெறவுள்ளது. வரையறுக்கப் படாத இசையை இரசித்து மகிழ்வதற்கு இது ஓர் அரிய சந்தர்ப்பமாகும்.

இந்த நிகழ்வினைத் தொடர்ந்து “இராஜ நர்த்தகி” என்னும் நாட்டிய நடனத்தை கார்த்திகா நடனக் குழுவினர் அளிக்கவுள்ளனர்.



“மூன்று …சங்கீதத்திற்கே” …ஓர் அறிமுகம்!
(தமிழாக்கம்: கலாநிதி இளமுருகனார் பாரதி)


சடப்பொருளும் சத்தியும் இணைவதன் மூலம் படைத்தலின் அமைப்பு மூன்று பரிமாணங்களை உள்ளடக்கிய பிரபஞ்ச தளமாக/லயமாக வெளிப்படுத்தப்படுகின்றது.  இந்த லயமானது(rhythm) சுழற்சிபெறும் படைத்தல் - காத்தல் - அழித்தலின்; பின் புதுப்பித்தல் - என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.  இந்த மூன்றும் பிரம்மா, விட்டுணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றது.

“மூன்று” என்பது நீக்கமறக் காலத்தின் பிரிவுகளிலும், நூல்களின் கால அளவுகளிலும், வேதாகமத்தில் தெளிவுபடுத்தப்பட்ட மனிதனின் தன்மைகளிலும், மூச்சு வகைகளிலும், வாழ்க்கையின் நிலைகளிலும், முற்றும் மாறுபடும் ஓசையுடைய தெய்வீக ஓம் என்னும் எழுத்திலும் பரந்துள்ளது.

மூன்று இசைக் கலைஞர்கள் படைத்த பாடல் தொகுப்பு
-(“Three 4 the Music” -Album )

“சங்கீதத்திற்காக …மூன்று” என்ற பாடல் தொகுப்பானது ஓரளவு பாரம்பரிய இசையுடன் மருவிய “சங்கம இசை” -(Fusion Music) கொண்டதாகும். இது சத்தி வாய்ந்த ஆற்றல்மிக்க பல்துறை அறிவிற் சிறந்தவர்களென நிரூபணமான மூன்று இசைக் கலைஞர்களின் கூட்டுத்திறமையைக் காட்டுகிறது, இந்தப் பாடல் தொகுப்பு பாரம்பரிய கர்நாடக சங்கீத இசைக் கருவிகளான வயலின், புல்லாங்குழல், மிருதங்கம் போன்றவை ஊடாக வெவ்வேறு இசைப் படைப்புகளைப் பிரதிபலிக்கின்றது.


இந்தக் கலைஞர்களின் இசைப் பயணம்!

இந்தப் பாடல் தொகுப்பில் பங்கேற்றிருக்கும் இசை மேதைகள் வேறுபட்ட பின்னணிகளைச் சார்ந்ததுடன் வயது, அனுபவம், மற்றும் அவர்களின் இசைக்குரிய பாணி ஆகியவற்றிலும் மாறுபட்ட பரிமாணத் தன்மை கொண்டவர்கள், பரஸ்பர நல்லிணக்கத்துடன் கலைஞர்கள தமக்கிருக்கும் சங்கீதத் திறமையை ஒருங்கிணைக்கும் வண்ணம் அவர்களுக்கு இயற்கையாக ஏற்பட்ட உந்துதலால் இந்தப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடகர்கள் தனிப்பட்ட வகையில் சங்கீதத்தில் புதிய படைப்புகளைக் கண்டுபிடிப்பதிலும் மற்றைய இந்திய பாடகர்களுடன் ஒப்பீடு செய்வதிலும் மகிழ்ச்சி அடைபவர்கள்.  உள்நாட்டு மற்றும் சர்வதேச இசைக் கச்சேரிகளில் பங்கேற்று வருவதோடு தங்களிடையே கருத்துப் பரிமாற்றங்கள் செய்வதன் வெளிப்பாடு இந்த மூவரையும் புதுமை படைக்கத் தூண்டியது. இதனை அடுத்துத் தொடரப்பட்ட கிழமைகளில் இவர்களிடம் ஏற்பட்ட கருத்துப் பரிமாற்றம், வியத்தகு கற்பனை வளம், உருவாக்கும் திறன், திருத்தமோ மாற்றமோ செய்யும் ஆற்றல் மற்றும் ஒத்தியக்கம் ஆகியவற்றால் இந்தப் பாடல் தொகுப்பு நல்ல வடிவம் பெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற நீண்ட ஒத்திகையுடன் கூடிய நுண்ணிய மாற்றங்கள் “சங்கீதத்திற்காக …மூன்று” என்ற இந்தத் தொகுப்பைச் சிறப்பாக உருவாக்கியது. 2008ஆம் ஆண்டு மேற்கு ஆபிரிக்காவிலும் இதைத் தொடர்ந்து இந்தியாவிலும் வெளியிடப்பட்ட இப்பாடல் தொகுப்பானது பாரம்பரிய (Classical Music) மற்றும் சமகால இசைத் (Contemporary Music) திறனாய்வு வல்லுநர்களின் மிகமிஞ்சிய பாராட்டைப் பெற்றது. ஒத்தசை, குரலேற்றத் தாழ்வு (ஒலி அலை எழுச்சி- தாழ்வு),

இணக்கப்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது “சங்கீதத்திற்காக …மூன்று” என்ற பாடல் தொகுப்பு. இவற்றிற்கு இலக்கணமாகத் திகழும் மேற்கத்திய சாஸ்த்திரிய இசையில் உயர்மேதைகள் “மொசாட்” (Mozart), “பச்” (Bach), “வீதோவன்” (Beethoven)ஆகியொரையும் இவர்களுக்குச் சரிநிகர் வல்லுநர்களாக இந்தியாவில் திகழ்ந்த தியாகராஜா, தீட்சிகர், சியாம சாஸ்திரி ஆகியோரையும் “சங்கீத மும்மூர்த்திகள்” எனச் சங்கீத உலகம் கௌரவமாகக் குறிப்பிடுகிறது.

“சங்கீதத்திற்காக ...மூன்று“ ஒரு முளுமையான படைப்பு

தாளலயம், இசை இணக்கப்பாடு, மற்றும் இன்னிசை ஆகியவற்றின் பல்வேறு தன்மைகளைக்கொண்ட படைப்பு வகைகளில் சங்கீதம் மூன்று பரிமாணங்களில் வெளிப்படுகிறது. “சங்கீதத்திற்காக ...மூன்று“ என்ற முளுமையான இப்படைப்பில் இம்மூன்றும் ஒன்றாகச் சங்கமிக்கின்றது.

வித்தியாசமான சங்கீதப் படைப்புகளிடம் ஒற்றுமைப்பாட்டைக் கண்டுபிடிப்பதும் சங்கீதமே!. பலதரப்பட்ட சங்கீதத்தில் நுண்ணியமாக ஒருமைத்துவத்தை இக்கலைஞர்கள் வெளிக்கொணர்கிறார்கள்.

இந்தப் பாடல் தொகுப்பில் வரும் தடங்கள் (Tracks) நவீன வடிவமைப்பாகத் தரப்பட்டுள்ளன. அதில் உள்ளடக்கப்பட்டுள்ள கூறுப்பாகங்கள் சாகித்தியங்களுக்குத் தனித்துவத்தைக் கொடுக்கின்றன. கலக்கப்பெற்று, உருமாற்றமடைந்து எல்லாவற்றையும் தாண்டிச்சென்று பரிமாற்றமடையப் பெற்ற இந்தச் சங்கீதம் கேட்போரை மெய்மறக்கும் நிலைக்கு இட்டுச் செல்கின்றது. அதே நேரம் அவரை அந்தப் புதுச்சுவையைத் துய்த்து மகிழவும் வழிவகுக்கிறது. இதில்வரும் ஒவ்வொரு தடமும் முனைப்பாகியதாக அமைந்து தனிப்பட்ட முறையிலும் ஒட்டுமொத்தமாகவும் பாரம்பரிய மற்றும் சமகால இசை இயல்புகளைப் பிரதிபலிக்கின்றது. கூட்டுச்சேர்ந்துள்ள மூலப் பொருள்களால் இது உண்மையாக உலகப்புகழ் பெற்ற படைப்புகள் வரிசையைச் சேர்கிறது. வேறு படைப்புகளான ராப் (Rap). சீன(Chinese). ஐரிஸ்(Irish). பேர்சியன் (Persian) இசைக் கூட்டுப்பொருள்கள் கலக்கப்பட்டு மிகவும் கவனமாகப் பாரம்பரிய இசையின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடமும் வித்தியாசமான மனநிலையை உண்டுபண்ண வல்லது. இந்தப் பாடல் தொகுப்பிலிருந்து மட்டுமன்றி இமூவரும் இங்கே நடைடிபெறவிருக்கும் கச்சேரிக்காகப் புதிதாக இயற்றப்பட்ட சாகித்தியங்களையும் தரவவுள்ளார்கள்.

“கீதத்திற்காக ...மூன்று“ என்ற பாடல் தொகுப்பு D A சிறிநிவாஸ் (மிருதங்கம்- வாய்ப்பாட்டு), இராகவேந்திர ராவ் (வயலின் - வாய்ப்பாட்டு). நவின் ஐயர் (புல்லாங்குழல்-வாய்ப்பாட்டு)  ஆகிய மூன்று ஆளுமைமிக்க கலைஞர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றது. தங்கள் தங்களுடைய துறையில் வல்லமை பெற்ற இவர்கள் தங்களுக்கிடையில் உள்ள கருத்துவேறுபாடு, வயது வித்தியாசம், சங்கீத அனுபவம், கலைஞர்களுக்கே உரிய தற்பெருமை ஆகிய எல்லாவற்றையும் மறந்து இந்தமுயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தப் படைப்பு இக்கலைஞர்களுக்கு இசை நுட்பங்களைப் பரிமாற்றம் ஒரு மாதிரியான இசைப்பயணமாக அமைந்துள்ளது. இந்தப் படைப்பு அவர்களின் தனித்துவப் பாணியினை வெளிப்படுத்தல், இசைவுடன் சேர்வதில் முன்னேற்றம், சேர்ந்து உழைப்பதில் தடையில்லா விருப்பம், புதுமைப் படைப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் ஆகியவற்றிற்குச் சான்று பகர்கின்றது. நுண்ணியமானதும் திடகாத்திரமானதும் புதுமையானதும் ஆகிய மூன்று பரிமாணங்களையும் உள்ளடக்கி நிற்கிறது. அதன் எளிமை சங்கீதத்திற்கு ஓர் சங்கீதமாக விளங்குகின்றது.



நடன நிகழ்ச்சி – "இராஜ நர்த்தகி" என்னும் நடனநிகழச்சி நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசன் அவர்களால் தயாரிக்கப்பட்டது. இவர் வழுவூர் இராமையாப்பிள்ளை அவர்களின் மாணவி ஆவர். சிட்னி பார்வையாளர் இவருடைய பழைமைவாய்ந்த இலக்கியஞ் சார்ந்த பல நடனப் படைப்புகளை இவர் அளித்துவந்த பரதநாட்டிய நிகழ்ச்சிகளின் மூலம் கண்டுகளிக்கும் வாய்ப்புப் பெற்றவர்கள். இவரின் ஆக்கத்திறனும் நாடக அமைப்புச் செயலாற்றலும் நடனக்கலை மீது இவர் கொண்ட ஆழ்ந்த அறிவைப் பிரதிபலிக்கின்றது.


No comments: