மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

.


46. இரண்டும் கிளிகளும் சூழ்நிலையும்
ஒரு மரத்தில் இரண்டு கிளிகள் இருந்தன: சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் இரண்டும் இரட்டைக் கிளிகள்! ஒரு வேடன் அவற்றைக் கண்ணி வைத்துப் பிடித்தான்: பிடித்தவன் அதனை விற்றுவிட்டான். ஒரு கிளியை கீழ்மைக் குணம் நிறைந்த, கொடூரமான கசப்புக் கடைக்காரனுக்கும், மற்றொரு கிளியை வேதங்களைக் கற்பிக்கும் ஆசிரமம் ஒன்றை நடத்தி வரும்

முனிவர் ஒருவருக்கும்
விற்றுவிட்டான்.




 சில ஆண்டுகள் கழிந்தன. ஒரு கிளியானது மிகவும் கீழ்த்தரமான சொற்களைப் பேசியதைக் கண்டு வியப்படைந்தான்! மற்றொரு கிளியோ, கேட்பவரைக் கவருகின்ற, இனிமையான, இசை ததும்பும் குரலில் தலைவாரம் இறைவனின் திருவிளையாடல்களை ஓதிக் கொண்டிருந்தவனைக் கண்டு அதிசயித்துப் போனான். ‘சூழலின் விளைவு’ இத்தகையாகும்! எனவே, ‘சத்-சங்கத்தை’த் தேடி அதனையே பெற்றிடுங்கள்!


47. மனிதன் - பொருள்

‘ஹ்யூமன்’ ( Human - மனிதன்) என்ற சொல், பொருள் ஆழம் மிக்கது.

ஹெச் (H) என்பது உயர்ந்த மனித மதீப்பீடுகளைக் குறிக்கின்றது. (High Human Values - H)
யு (U) என்பது, மனிதனின் புனிதத் தன்மையைப் புரிந்து கொள்ளுதல் என்பதனைக் குறிக்கின்றது. (Understanding of human sanctity - U)
எம் (M) என்பது, ஒருவனுடைய கடமையைச் செய்வதில் கருத்தாய் இருப்பது என்பதைச் சுட்டுகின்றது. (Mindful of one's Duty = M)
ஏ (A) என்பது, ஆனந்தம் என்பதைக் குறிக்கின்றது (Aanandham = A)
என் (N) என்பது, கடவுளின் திருநாமம் ஆகும். (Name of God = N)


48. பேசினால் போதுமா?

ஓளியின் சிறப்பைப் பற்றி ஓங்கிப் பேசினால் உலகின் இருள் விலகுமா? அமிழ்தத்தைப் புகழ்வதனால் நோயாளியின் நோய் தீருமா? செல்வத்தின் சிறப்பினைக் கேட்பதால் இரப்போனின் வறுமை ஒழியுமா? அறுசுவை உணவின் சுவைகளை விளக்குவதால் ஆறாப் பசி நீங்குமா?

‘டன்’ கணக்காக நற்போதனைகளைக் கேட்பதைவிட, அந்தப் போதனையில் ஓர் ‘அவன்சு’ அளவாவது வாழ்வில் கடைப்பிடிபபதுதான் மிகச் சிறந்தது.

49. ஐந்து ககரங்கள்

எண்ணம், சொல், செயல் ஆகியவற்றின் ஒருமைப்பாட்டிற்கு - இணக்கத்திற்கு – அடித்தளம் ஐந்து ககரங்கள் ஆகும். (ககரம் - ககரத்தில் தொடங்கும் சொற்கள்)

1. கடமை (Duty)
2. கடவுள் பக்தி (Devotion)
3. கட்டுப்பாடுடன் கூடிய ஒழுங்கு (Disipline)
4. கூர்ந்து நோக்கிப் பிரித்தறிதல் (Discrimination)
5. கடும் மன உறுதி (Determination)

நம்முள் மாற்றத்தினை ஏற்படுத்த உதவுவன இந்த ஐந்துதான்!

50. உணவு

உணவு எப்படியோ, அப்படித்தான் மனம்!
மனம் எப்படியோ அப்படித்தான் எண்ணம்!
எண்ணம் எப்படியோ, அப்படித்தான் ஓழுக்கம்!
ஓழுக்கம் எப்படியோ, அப்படித்தான் உடல்நலம்!

No comments: