நிதி சேகரிப்பு நிகழ்வு 22/04/2011
அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியத்தின்
9ஆவது ரேடியோதோன் (Radiothon)
அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியத்தின் வருடாந்த ‘ரேடியோதோன்’ வருகிற பெரிய வெள்ளித் தினத்தில் (22 ஏப்பிரல் மாதம் 2011) காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை இடம்பெறும். இந்த நிகழ்வு 24 மணிநேர இன்பத்தழிழ் ஒலி வானொலி, 3CR தமிழ்க் குரல் வானொலி ஆகியவற்றினூடாக நடைபெறும்.
கடந்த 10 வருடங்களாக எமது தமிழ் மக்களுக்கு சேவையாற்றி வரும் இந்த நிதியம், இதுவரை 2.5 மில்லியன் டொலர்களை சேகரித்து எமது மக்களின் மருத்துவத் தேவைகளுக்காக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மே மாதம் 2009 முடிவடைந்த வன்னிப் போரின் பின்னர், அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம் மாதத்திற்கு ஒரு மருத்துவ திட்டம் என்ற வகையில் இதுவரை 24 திட்டங்களை நிதிவழங்கி நிறைவேற்றியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 10 மருத்துவ திட்டங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கான நிதியுதவியை நாடி நிற்கின்றது மருத்துவ உதவி நிதியம்.
நீங்களோ, உங்கள் குடும்பத்தினரோ அல்லது நீங்கள் சார்ந்த அமைப்பு மூலமாக நிதியத்தின் திட்டம் ஒன்றுக்கான நிதியை வழங்கமுடியும். இதன்மூலம் அந்த திட்டத்தை நிறைவேற்றிய பேருதவியைச் செய்தவர்களாவீர்கள்.
மேலதிக விபரங்களுக்கு நிதியத்தின் இணையத்தளத்தை பாhக்கவும்: http://www.ausmedaid.org.au/
நிதியத்துடன் தொடர்பு கொள்ள அழுத்த வேண்டிய தொலைபேசி:
1300 990 828
இந்த நிதிசேகரிப்பு நிகழ்விற்கு உங்கள் ஆதரவை நாடி நிற்கின்றோம். நீங்கள் காசோலையாகவோ, அல்லது வங்கி அட்டைகள் (credit cards) மூலமாகவோ அல்லது பேபால் (Paypal), காசாகவோ உங்கள் அன்பளிப்பை வழங்கலாம்.
இப்படிக்கு
டாக்டர். வே மனோமோகன் (தலைவர்)
டாக்டர். பொ. கேதீஸ்வரன்(தலைவர், NSW கிளை)
3 comments:
டாக்டர். வே மனோமோகன் why your ரேடியோதோன் in one radio ? Do you want to send this money to Christians in down south of SriLanka?
Dr .Manomohan is a christian and carries bible . I donot how he has changed as Hindu ?
Information for Rajah and Rani,
The christians are swear on holy wine, their promises to Jesus will kept until their death and even the soul go to the heaven.Their sympolic holy wine is blood.
If oyu look srilanka politics, the problem creaters were SWRD, JR . They half christian and buddist.
Post a Comment