.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைக்கு இந்தியா அண்மைய நாட்களில் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்து உள்ளது என கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் தெரிய வந்து உள்ளது.
1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் சில சரத்துக்கள் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இச்சரத்துக்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை இலங்கை அரசால் இழைக்கப்பட்டு வருகின்ற அவமானமாகவே கருதுகின்றது இந்தியா.
இச்சரத்துக்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்பது இந்தியாவின் நம்பிக்கை.
குறிப்பாக இவ்வொப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகாரப் பரவலாக்கல் முறைமை , மாகாண சபைகள் முறைமைகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வடக்கு, கிழக்கு மாகாண தமிழர்களின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று இந்தியா ஆணித்தரமாக விசுவாசிக்கின்றது.
இந்நிலையில் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகார பரவலாக்கல் முறைமை, மாகாண சபைகள் முறைமை ஆகியவற்றை நடைமுறைப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தியோகபூர்வமாக இலங்கையை கோரி உள்ளது.
இவ்வொப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பேச வர வேண்டும் என்று இலங்கை மீது இந்தியா கடும் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது என்று அரசியல் அவதானிகள் நம்புகின்றனர்.

ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் என்று வழங்கப்பட்ட வாக்குறுதி ஒன்றின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் வெற்றியில் இலங்கைக்கு இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்கி இருந்தது என்று கூறப்படுகின்றது.
நன்றி TAMILCNN.COM
No comments:
Post a Comment