சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா மார்ச் மாதம் 11 ம் திகதி ஆரம்பமாகும்

.


வளம்மிக்க அவுஸ்திரேலியா நாட்டின், சிட்னி மாநகரிலுள்ள வைகாசிக் குன்றில் அமர்ந்துள்ள அருள்மிகு சிட்னி முருகப்பெருமானுக்கு விகிர்தி வருஷம் உத்தராயண மாசி மாதம் 27ம் நாள் (11-03-2011) வெள்ளிக்கிழமை பூர்வபக்ஷ ஷஷ்டித் திதியம் கார்த்திகை நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபதினத்தில் வருடாந்த திருவிழா ஆரம்பமாகும். தொடர்ந்து 11 நாட்கள் கோயில் விழாக்கோலம் பூண்டு விளங்கும்!


விஷேட போக்குவரத்து வண்டி காலை 8.30 மணியிலிருந்து 3.00 மணி வரை கொடியேற்றம்(11-03-2011), தேர் (19-03-2011) மற்றும் தீர்த்தம் (20-03-2011) தினங்களில் வெஸ்ட்மீட் புகையிரநிலையத்திலிருந்து சிட்னி முருகன் கோயிலுக்கும் பின்னர் திரும்பிச் செல்லவும் அடியார்களின் வசதிக்காக சைவமன்றத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பொதுவான போக்குவரத்து வண்டி T80 பரமற்றாவிலிருந்து கோயில் வழியாக தினமும் செல்கின்றது.

இக்கோயிலில் திருவிழா நாட்களில் தினமும் மதிய பூசைக்கு பின்னர் அன்னதானம் வழங்கப்படும்.

இத் திருவிழா தினத்தில்  அவுஸ்திரேலியதமிழ்முரசு தினமும் திருவிழா படங்களுடன் செய்திகளையும் தாங்கி  வெளிவர   இருக்கிறது   என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகிறோம்.

1 comment:

kirrukan said...

[quote]இக்கோயிலில் திருவிழா நாட்களில் தினமும் மதிய பூசைக்கு பின்னர் அன்னதானம் வழங்கப்படும்.[/quote]


இரவு பூஜைக்கு பின்பு பிரசாதமும் வழங்கப்படும் ...அதை போடவேணும் முரசு..

அப்ப சிட்னியில் 11 நாள் அரைவாசிபேர் வீட்டை சமைக்க மாட்டினம் என்று சொல்லுங்கோ......அப்படியே தாயகத்துக்கும் ஒரு 11 நாள் முருகனின்ட பெயரில் அன்னதானம் கொடுத்தால் சனம் சந்தோசப்படும் ...அதை விட சிட்னி முருகன் இன்னும் சந்தோசப்படுவார்....

அது சரி பூணைக்கு மணிகட்டுறது யார்? கொமிட்டிக்காரரை சொன்னேன்......