16. முட்டாள்தனமான செயல்
‘தேர்வுகளில் (Exams) வெற்றி பெறுவது’ பற்றித் தேவைக்கு அதிகமான மதிப்பினைக் கொடுக்காதீர்கள். அவ்வாறு மிக அதிகமான மதிப்பினை அதற்குக் கொடுத்தீர்களானால், நீங்கள் தேர்வுகளில் தோல்வி அடைந்துவிட்டீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்பொழுது மிகக் கடுமையான ‘சோர்வு அழுத்தத்’திற்கு (டிப்ரஸன்) ஆளாகிவிடுவீர்கள்! தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மிக அதிக அளவிலான மாணவர்கள் ‘தற்கொலை’ செய்து கொள்ளும் செய்தியினை நாம் கேட்கின்றோம். அன்பு மிக்க குழந்தைகளே! இதுபோன்ற ‘முட்டாள்தனமான செயல்’களைச் செய்யாதீர்கள். ஒரு வேளை, தோல்வி என்பது வந்துவிட்டால் அதனை ‘மேலும் முயற்சி செய்ய வேண்டும்’ என்பதற்குரிய து}ண்டுகோலாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏன் நான் தோல்வி அடைந்தேன்? என்று ஆராய்ந்து பாருங்கள், அந்த அனுபவத்தில் இருந்து லாபம் ஒன்றைப் பெறுங்கள். இதை விட்டுவிட்டு, அதுபோன்ற முட்டாள்தனமான செயல்களில் இறங்கி, நீங்களே உங்களை அழித்துக் கொண்டால், நினைவில் வையுங்கள், உங்களின் அந்தச் செயல் என்னைப் பெரிதும் துன்பத்திற்குள்ளாகும்!
17. தேர்வுக்குப் படிக்கும் முறை
நீங்கள் எல்லாம் தேர்வுகளுக்கு மிக மும்மரமாகத் தயார் செய்வதில் ஈடுபட்டுள்ளீர்கள். பலர் தேர்வுக்கு முன்னர்தான் பாடப்புத்தகங்களைக் கையில் எடுக்கவே ஆரம்பித்துள்ளார்கள். இந்தக்காலத்தில் இதுதான் பொதுவாக எங்கும் காணப்படும் போக்காக உள்ளது. ஓராண்டின் ஒன்பது மாதங்களிலும் நீங்கள் எல்லாவிதமான குப்பைக்கூளங்களையும், பயனற்றவைகளையும் படிப்பதில் செலவழிக்கின்றீர்கள். அடுத்து எஞ்சியுள்ள இரண்டு அல்லது மூன்று மாதங்களில்தான் உண்மையிலேயே மிகவும் தேவைப்படுவனவற்றைக் கருத்து}ன்றிப் படிக்கின்றீர்கள். இது சரியானது அன்று! இது மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது. உங்களில் மூளையில் எல்லாவகையான தேவையற்ற மற்றும் அற்பமான செய்திகளைத் திணித்து வைத்துக் கொள்கின்றீர்கள்! உங்களுக்குச் சற்று ஒய்வு நேரம் கிடைக்கின்றபோது வேண்டுமானால் அத்தகைய புத்தகங்களைப் படிக்கலாம்.நு}ல்கள் இந்த உலகில் மர்மங்களை அறிந்து கொள்ள உதவும். உலகு பற்றிய அறிவுபூர்வமான பாராட்டினை வளர்த்திட உதவிடும்! ஒரு மகிழ்ச்சி நிறைந்த அமைதியான வாழ்க்கை வாழ்நதிட, மனநிறைவான வாழ்வு வாழ்ந்திட நல்ல கல்வியானது தேவை. அறத்தை (தருமத்தை) அடிப்படையாகக் கொண்ட கல்வியானது மிகமிகத் தேவை!
18. தைரியம்
தேர்வு எழுதும் அறையிலாயினுஞ் சரி, வெளியில் ஆயினும் சரி, நீங்கள் உங்கள் தைரியத்தை இழக்க வேண்டாம். தைரியம் (அஞ்சாமை) என்பது புலமை என்னும் பயிரைச் செழிப்பாக வளரச் செய்யும் உரம் போன்றது. எரு போன்றது! பயிர் வளரும் வயல் நன்றாக இருக்கலாம் என்றாலும் எருவிடுதல் (உரம் போடுதல்) என்பதும் தேவைப்படும் ஒன்றுதானே!
19. தைரியத்தைப் பெற!
ஒரு காந்தமானது இரும்பை மட்டுமே ஈர்த்துக் கொள்ளும் தன்மையது. அது போல், ஒரு மாணவனும் யார் அவனுடைய கல்விக்கு உதவுகின்றார்களோ அவர்களை மட்டுமே தன்பால் ஈர்த்துக் கொள்வான். அது போன்ற செயல்கள் மட்டுமே அவனுக்கு ஆனந்தத்தினை அளிக்கும். தைரியத்தைப் தரும். மகிழ்ச்சியைக் கொடுக்கும். எதனையும் எதிர்கொள்ளும் துணிவையும் ஈயும்!
20. தேர்வு எழுதும் முறை
தேர்வுகளைக் கண்டு அச்சம் கொள்ளாதீர்கள். என்ன ஆகுமோ? என்று திகிலை வளர்த்துக் கொள்ள வேண்டாம். அங்கே (தேர்வு எழுதும் அறையில்) ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு உள்ள கேள்விகளுக்கு உங்கள் பதில்களை நீங்கள் எழுதி ஆகவேண்டும். நல்லது! ஒரு சில மாணவர்கள் எடுத்த எடுப்பில் முதல் கேள்வியில் இருந்து எழுத ஆரம்பித்து வரிசையாக எஞ்சியுள்ள கேள்விகளுக்கும் விடை எழுதுவார்கள்! ஆனால், எழுத ஆரம்பிக்கும் முன் ஒரு சிறிது நேரம் இடைநிறுத்தி அந்த கேள்வித் தாள் முழுவதையும் படித்துப் பார்க்க வேண்டும். அதன்பின், அந்த கேள்வித்தாளில் உள்ள எந்தக் கேள்விக்கு, முழு நம்பிக்கையோடு சரியாக விடை எழுத முடியும் என்று தோன்றுகின்றதோ அத்தகைய கேள்விகளுக்குத்தான் முதலில் பதில் எழுதத் தொடங்க வேண்டும். இதுதான் எப்பொழுதுமே நல்லது! இவ்வாறு செய்வது, பின்னால் பதில் எழுத உள்ள கடினமான வினாக்களுக்குச் சிறப்பாகப் பதில் எழுதும் நல்ல திறனை உங்கள் மூளைக்குத் தந்து து}ண்டிட உதவும்.

தொடரும்
No comments:
Post a Comment