உறவின் சிதைவு - மஷூக் ரஹ்மான்

                                                                                  கட்டுரை – 6    மஷூக் ரஹ்மான்



இன்டர்நெட்! வரமா? சாபமா? என்ற கேள்வி பலமான கலச்சார அடிப்படை மிகுந்த இந்தியாவில் ஒரு முக்கிய கேள்வியாக இருந்து வருகிறது. 
நான் சில காலம் ஒரு இன்டர்நெட் கஃபே நடத்தி வந்தேன். அப்பொழுது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை இங்கே நினைவுகூர விரும்புகிறேன். வருடம் 2002! முதன்முதலாக சென்னையில் நில அதிர்வு ஏற்பட்ட நாள்… அன்று என் கடையில் வழக்கம்போல முழு கூட்டம்! திடீரென்று நிலத்தில் ஒரு பேரதிர்வு! நான் சட்டென்று புரிந்து கொண்டு உள்ளே இருந்த வாடிக்கையாளர்களை வெளியேறுமாறு சொல்ல… அப்போது நிகழ்ந்தது நில அதிர்வைவிட பேரதிர்ச்சியாக இருந்தது




ஒரு வாடிக்கையாளர்கூட தங்கள் இருக்கையை விட்டு நகர்வதாக இல்லை! இதில் முக்கியமான பொருள் என்னவென்றால்… அவர்கள் அனைவரும் கேளிக்கைக்hக இணையத்தைப் பயன்படுத்தும் இளைஞர்கள்.
சரி! இப்போ விஷயத்திற்கு வருகிறேன்! உயிர்போகும் அளவிற்கு ஒரு சம்பவம் நிகழ்கையிலும் விளையாட்டாக அதை எடுத்துக் கொள்கின்ற இவர்கள் தம் பார்வையை தவறான திசையில் ஆழமாகப் பதித்து விடுவது மிகுந்த வேதனைக்குரியதாக இருக்கின்றது.
இது துவக்கம்! மேலும் நான் ஊhயவவiபெ செய்யும் பழக்கம் உடையவன்தான்… சென்னை போன்ற நகரத்தில் ஊhயவவiபெ தனக்கான இடத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கிய நேரம் அது. ஊhயவவiபெ செய்பவர்கள் பெரும்பாலும் காதல் எண்ணத்தோடு எதிர் பாலரைத் தேடுகின்றனர். ஆனாலும் அன்று அதுவும் கண்ணியத்தோடு நடந்தது.
இன்று ஊhயவவiபெ சழழஅ ல் நுழைந்தாலே ஆபாசப் பேச்சுக்கான அழைப்புகள்…ஓரினச்சேர்;க்கையாளர்களின் ஈனக் கூப்பாடு… இன்னும் சிலபடி மேலே போய்…தத்தம் தாய்இ சகோதரிஇ மனைவி பற்றி (inஉநளவ) வக்கிரமாகப் பேச அந்தந்த தனிநபர்களே அழைப்பு விடுக்கும் அசிங்கங்கள் அரங்கேறுவது உடனடியாக ஒழிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
சேட்டிங் செய்யும் நபரின் முகம் பின்னணி இன்னும் அவரின் குணம் இவை பொய்;யான பெயர்களில் பேசுவதன் மூலம் மறைக்கப்பட ஏதுவாக இருப்பதால் யாரும் தமக்குள் இருக்கும் வக்கிரங்களை தங்கள் மானத்திற்கு கேடு வராமல் தங்கள் முகத்தைக் காட்டிக் கொள்ளாமல் தணித்துக் கொள்ள விழைகின்றனர். இதில் வயது வரம்பின்றி விடலைப் பருவத்தினரும் சீரழிக்கப்படுகின்றனர். தம் குடும்பத்தின் மீதும்..தன்மீதுமே அக்கறை மதிப்பு இல்லாதவர்களே இப்படி அசிங்கங்களில் ஈடுபடுகின்றனர் என்பது என் கருத்து!
சிந்தியுங்கள்! உங்கள் குழந்தைகளை நீங்களே தவறானவர்களாக்கும் குற்றத்தின் விளிம்பில் இருக்கின்றீர்கள். இளைய தலைமுறைத் தாய்மார்கள் தங்கள் உடை விஷயத்திலும் குழந்தைகளிடம் கொள்ள வேண்டிய இடைவெளியும் சரியாக அமையும்படிப் பார்த்துக் கொள்ளவும்.
பெற்றோர்களே! அதிக நேரம் தங்கள் குழந்தைகள் இன்டர்நெட்டில் இருந்தால் தாங்களும் அருகே அமருங்கள்! அவர்களின் கேளிக்கை…பொழுதுபோக்கில் பங்கெடுத்து அதிலும் அவர்களுக்கு வழிகாட்டுங்கள். மாறிவரும் சமுதாயத்தில் நம் பொறுப்புகளும் கடமைகளும் இன்னும் விழிப்புணர்வும் அதிகம் தேவை! நல்ல நூல்களை தாங்களும் படித்து அவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

விழிப்புடன் இணைவோம்!
ஒளிமயமான சமுதாயத்தை உருவாக்குவோம்



No comments: