உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

.
இலங்கையுடனான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றியீட்டியது


இலங்கையுடனான பரபரப்பான உலகக் கிண்ண ‘ஏ’ பிரிவுப் போட்டியில் பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி 11 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் களமிறங்கிய பாக். அணி ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியது.






குறிப்பாக மத்திய வரிசையில் வந்த அனுபவ வீரர்களான யூனிஸ்கான், மிஸ்பா உல் ஹக் ஆகியோர் 4ஆவது விக்கெட்டுக்காக 108 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதில் யூனிஸ்கான் 76 பந்துகளில் 4 பெளண்டரிகளுடன் 72 ஓட்டங்களைப் பெற்றதோடு மறுமுனையில் மிஸ்பா உல் ஹக் 91 பந்துகளுக்கு 6 பெளண்டரிகளுடன் 83 ஓட்டங்களைக் குவித்தார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களுக்குள் 7 விக்கெட்களை இழந்து 277 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை சார்பாக எவரும் குறிப்பிடத்தக்க அளவில் பந்துவீசவில்லை. எனினும் திஸ்ஸர பெரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்நிலையில் சவாலான இலங்கை நோக்கி பதிலெடுத்தாடிய இலங்கை அணிக்கு டில்ஷான், தரங்க ஆகியோர் அரைச்சதம் இணைப்பாட்டத்தை (76) பெற்றனர். எனினும் 96 ஓட்டங்களைப் பெறுவதற்குள் முதல் 4 விக்கெட்டுகளை பறிகொடுக்க இலங்கை அணி இக்கெட்டுக்குள்ளானது.

இந்நிலையில் மத்திய வரிசையில் இணைந்த அணித் தலைவர் சங்கக்கார, சாமரசில்வா ஆகியோர் நிதானமாக செயல்பட்டு ஓட்டங்களை அதிகரித்தனர். இருவரும் இணைந்து 73 ஓட்டங்களைப் பெற அணியின் மொத்த ஓட்டங்கள் 169 ஆக அதிகரித்தது.

இதனிடையே அணியின் ஓட்டவேகத்தை அதிகரிக்க முயன்ற சங்கக்கார 61 பந்துகளில் 2 பெளண்டரி களும் ஒரு சிக்ஸரும் அடங்கலாக 49 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வெளியேறினார்.

தொடர்ந்து வெற்றிக்காக போராடிய சாமர சில்வாவினால் சோபிக்க முடியவில்லை. 78 பந்துகளுக்கு முகம்கொடுத்த சில்வா 5 பெளண்டரிகளுடன் 57 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வெளியேறினார்.

கடைசி நேரத்தில் நுவன் குலசேகர 14 பந்துகளில் 2 பெளண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கலாக 24 ஓட்டங்களைப் பெற்றாலும் அது இலக்கை எட்டப் போதுமானதாக அமையவில்லை.

இதனால் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 266 ஓட்டங்களையே பெற்றது.

பாக். அணியின் வெற்றிக்காக மீண்டுமொருமுறை தனது அபார பந்துவீச்சை வெளிக்காட்டிய அப்ரிடி 10 ஓவர்களுக்கும் 34 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.



இங்கிலாந்து - இந்திய அணிகள் மோதிய போட்டி; வெற்றி தோல்வியின்றி முடிவு

ஆட்டநாயகன் ஸ்டோரஸ்

இங்கிலாந்து - இந்திய அணிகள் மோதிய போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 338 ஓட்டங்கள் பெற்றது.

இங்கிலாந்து அணி 339 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனப் பதிலெடுத்தாடிய அவ்வணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக அணித் தலைவர் ஸ்டோரஸ், பீட்டர்சன் ஆகியோர் களமிறங்கினர்.

பீட்டர்சன் 31 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஸ்டோரஸ் 158 ஓட்டங்களையும், ரொட் 16 ஓட்டங்களையும், இயன் பெல் 69 ஓட்டங்களையும் கொலிங்வூட் ஒரு ஓட்டத்தையும், பிரேயர் 4 ஓட்டத்துடனும், யாடி 13 ஓட்டங்களையும், பிரெஸ்ஸன் 14 ஓட்டங்களையும் சுவான் 15 ஓட்டங்களையும் சஷாட் 6 ஓட்டங்களையும் ஆட்மிழக்காமல் பெற்றனர்.

பந்து வீச்சைப் பொறுத்தவரை சஹிர்கான் 3 விக்கெட்டையும், பட்டேல், சவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் ஹர்பஜன் சிங் 1 விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

இங்கிலாந்துடனான உலகக் கிண்ண ‘பி’ பிரிவு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 338 ஓட்டங்களை குவித்தது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணத் தொடரின் 11ஆவது போட்டி பெங்களூர் சின்னசாமி அரங்கில் நேற்று நடைபெற்றது.

இதில் இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

பங்களாதேஷ¤டனான முதல் போட்டியில் சோபிக்கத் தவறிய வேகப் பந்துவீச்சாளர் சாந்தகுமார் ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டு சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் செளலா சேர்க்கப்பட்டார்.

மறுபுறத்தில் இங்கிலாந்த அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவட் பிரோட் சுகவீன முற்றுள்ளார்.

இதனால் அவருக்கு பதில் அஹ்மட் ஷஹ்ஷாட் சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோன்று மத்திய வரிசை வீரர் ரவி போப்பரா நீக்கப்பட்டு சுழற்பந்துவீச்சாளர் மைக்கல் யாடிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்திய அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 338 ஓட்டங்களைக் குவித்தது.

இதில் இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த காம்பீர், சச்சின் ஜோடி 134 ஓட்டங்க ளை இணைப் பாட்டமாகப் பெற்றது. இதில் காம்பீர் 61 பந்துகளுக்கு 51 ஓட்டங்களைப் பெற்றதோடு, சச்சின் 115 பந்துகளுக்கு 120 ஓட்டங்களைக் குவித்தார்.

தவிர, யுவராஜ்சிங், ஷெவாக் ஆகியோர் முறையே 58, 35 ஓட்டங் களைப் பெற்றனர்.

இங்கிலாந்து சார்பில் டிம்பிரெஸ்னன் 5 விக் கெட்களை வீழ்த்தினார்.






ஸிம்பாப்வே 175 ஓட்டங்களால் வெற்றி

ஆட்டநாயகன் தைபு

கனடா அணியுடனான லீக் போட்டியில் ஸிம்பாப்வே அணி 125 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

கனடா அணி 299 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனப் பதிலெடுத்தாடிய அவ்வணி 42.1 ஓவர்களில் சகல விக்கெட்டையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

கனடா அணி சார்பாகத் துடுப்பாட்டத்தில் குணசேகர, சுக்கரி, ஹஸ்ஸார ஆகியோர் முறையே 24, 26, 20 ஓட்டங்களைத் தவிர மற்றையவர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சைப் பொறுத்தவரை பிரைஸ், கீரிமர், தலா 3 விக்கெட்டையும், லம், உட்சேயா ஆகியோர் 2 விக்கெட்டையும் பதம் பார்த்தனர். ஆட்டநாயகனாக தைபு தெரிவானார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி 298 ஓட்டங்களைப் பெற்றது

நாக்பூரில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஏ பிரிவு ஆட்டத்தில் சிம்பாப்வே - கனடா அணிகள் விளையாடி வரு கின்றன.

பூவா தலையா வென்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரர் டெய்லர் டக் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் சார்லஸ் காவெனடரி 4 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தார்.

இதைத் தொடர்ந்து இணை சேர்ந்த தைபு- கிரெய்க் எர்வின் அபாரமாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 181 ஓட்டங்கள் குவித்தது. 85 ஓட்டம் எடுத்திருந்த போது கனடா வீரர் பாலாஜி ராவ் பந்தில் எர்வின் ஆட்டம் இழந்தார்.

பின்னர் வந்த சிகும்புரா 5 ஓட்டங்களில் வெளி யேறினார் ஒரு பக்கம் அபாரமாக விளையாடி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தைபு 98 ஓட்டங்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை ஏமாற்றினார். 99 பந்தில் 98 ஓட்டங்கள் குவித்த தைபு 9 பவுண்டரிகளை விளாசினார்.

பின்னர் வந்த சிகும்புரா (05), வில்லியம்ஸ் (30) கிரெக் லேம்ப் (11) உத்செயா (22), கிரேம் கிரீமர் (26) ஆகியோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர். ராய் பிரைஸ் (10), சிபி ம்போஃபு (03) ஆகியோர் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் சிம்பாப்வே அணி 9 விக்கெட்டுகளை இழந்து 298 ஓட்டங்கள் குவித்தது.

கனடா தரப்பில் பாலாஜி ராவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குர்ரம் சோஹான், ஹர்வீர் பைத்வான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ரிஸ்வான் சீமா 1 விக்கெட்டும் கைப் பற்றினர்.

இலங்கை அணி கென்யாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது


கென்யாவை வீழ்த்திய இலங்கை அணி உலகக் கிண்ண அரங்கில் 2 ஆவது முறையாக 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக இலங்கை அணி 2003 இல் கனடாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

உலகக் கிண்ண வரலாற்றில் அதிகபட்சமாக நியூசிலாந்து அணி மூன்றுமுறை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மேற்கிந்தியா,இங்கிலாந்து,பாகிஸ்தான்,தென்னாபிரிக்கா,அவுஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் தலா 2 முறையும் இந்தியா ஒருமுறையும் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளன.

ஹாட்ரிக் மலிங்கா;உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டாவது முறையாக "ஹாட்ரிக்' சாதனை படைத்து அசத்தினார் லலித் மலிங்கா.  கொழும்பில் நடந்த கென்யாவுக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் வேகத்தில் மிரட்டிய இவர் மொத்தம் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் 42 ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் டான்மே மிஸ்ராவை(0) எல்.பி.டபிள்யூ.முறையில் வெளியேற்றினார் மலிங்கா.பின் 44 ஆவது ஓவரின் முதல் இரண்டு பந்தில் ஒன்கொண்டா (0),ஷேம் நிகோசே(0) உள்ளிட்டோரை அடுத்தடுத்து "கிளீன்'போல்டாக்கினார்.இதன் மூலம் உலகக் கிண்ண அரங்கில் இரண்டாவது முறையாக (2007,2011)"ஹாட்ரிக்'சாதனை படைத்த முதல் வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார்.

முன்னதாக 2007 இல் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இது இலங்கை சார்பில் உலகக் கிண்ண அரங்கில் பதிவு செய்யப்பட்ட மூன்றாவது "ஹாட்ரிக்'என்ற பெருமை பெற்றது.முன்னதாக சமிந்த வாஸ் (எதிர்பங்களாதேஷ் 2003)மலிங்கா(2007,எதிர்தென்னாபிரிக்கா)உள்ளிட்ட இலங்கைப் பந்துவீச்சாளர்கள் இச்சாதனை படைத்திருந்தனர்.

இது இம்முறை பதிவு செய்யப்பட்ட இரண்டாவது "ஹாட்ரிக்'விக்கெட் முன்னதாக மேற்கிந்தியாவின் ஜெமர் ரோச் நெதர்லாந்துக்கு எதிராக "ஹாட்ரிக்'விக்கெட் வீழ்த்தினார்.

இது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அரங்கில் மலிங்காவின் சிறந்த பந்துவீச்சு.முன்னதாக கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் வீழ்த்தினார்.




அயர்லாந்திடம் தோற்றதால் அதிர்ச்சியடைந்துள்ளது இங்கிலாந்து அணி
அயர்லாந்திடம் தோற்றதால் அதிர்ச்சியடைந்துள்ளதாக இங்கிலாந்து அணிக் கப்டன் ஸ்ட்ராஸ் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது.  முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 327 ஓட்டங்கள் குவித்தது.  டிராட் 92 ஓட்டமும் பெல் 81 ஓட்டமும் எடுத்தனர். மூனி 4 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் விளையாடிய அயர்லாந்து ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்கள் (24.2 ஓவர்) என்ற நிலையிலிருந்தது.  இதனால் இங்கிலாந்து எளிதில் வெற்றி பெறுமென்று அனைவராலும் எதிர்பாக்கப்பட்டது.  6 ஆவது வீரராகக் களமிறங்கிய கெவின் ஒபிரையின் ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.   அவர் இங்கிலாந்து பந்தை நாலாபுறமும் சிதறடித்தார். 50 பந்தில் சதமடித்து சாதனை படைத்தார்.

உலகக் கிண்ணத்தில் குறைந்த பந்தில் சதமடித்தவர் என்ற சாதனை பெற்றார்.   அவர் 63 பந்தில் 13 பவுண்டரி,6 சிக்ஸருடன் 113 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அயர்லாந்து 49.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 329 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட்டால் வெற்றி பெற்றது. கெவின் ஓபிரையன் ஆட்டநாயகனாகத் தேர்வு பெற்றார்.

பாகிஸ்தான் அணி 46 ஓட்டங்களால் வெற்றி

ஆட்டநாயகன் அப்ரிடி


பாகிஸ்தான் அணியின் தலைவர் சஹீட் அப்ரிடியின் அபார பந்து வீச்சினால் பாக். அணி 46 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. கனடா அணி சகல விக்கெட்டையும் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது.

கனடா அணி 185 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக குணசேகர, குமார் ஆகியோர் களமிறங்கினர். குமாரும், குணசேகரவும் நிதானமாக ஆடியபோது குணசேகர 8 ஓட்டங்கள் பெற்றபோது உமர் குல்லின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து சென்றார்.

பின்னர் குமாருடன் ஜோடி சேர்ந்த சுக்காரி நிதானமாக விளையாடியபோதும் குமார் 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். சுக்காரியுடன் ஜோடி. சேர்ந்த அணித் தலைவர் பகாய் இருவரும் இணைந்து மெதுவாக ஓட்ட வேகத்தை அதிகரிக்க நினைக்கையில் பகாய் 16 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் சுக்காரியுடன் ஜோடி சேர்ந்த ஹன்சரா இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்காக 60 ஓட்டங்கள் பெற்றபோது சுக்காரி 27 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஹன்சாரியுடன் 5வது விக்கெட்டுக்காக இணைந்த றிஸ்வான் சீமா 4 ஓட்டத்துடனும் ஷக்காரி 44 ஓட்டங்களுடனும், கோர்டன் 9 ஓட்டத்துடனும், பய்டவன் ஓட்டம் எதுவும் பெறாமலும் குர்ஆம் சுஆன் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாலாஜி ஒரு ஓட்டத்துடனும் ஒலின்டோ ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பந்து வீச்சைப் பொறுத்தவரை பாகிஸ்தான் அணியின் தலைவர் அப்ரிடி 5 விக்கெட்டையும், ரஷாக், குல், றியாஸ், அஜ்மல் தலா ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக அப்ரிடி தெரிவானார்.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில்  நடைபெற்ற பாகிஸ்தான்- கனடா அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என்றார். அதற்கு அமைவாக பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் சகலவிக்கெட்டு களையும் இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணியின் ஆரம்பத்துப்பாட்ட வீரர்களாக ஹாபிஸ், சஷாட் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக கனடா பந்துவீச்சாளர்களின் பந்துகளை அடித்து ஆடினாலும் ஹாபிஸ் 11 ஓட்டங்கள் பெற்றிருந்த போது ஆட்டமிழந்த வெளியேறினார்.

பின்னர் சஷாட்டுடன் ஜோடி சேர்ந்த விக்கெட் காப்பாளர் கம்ரான் அக்மல் சஷாட் இருவரும் நன்றாக ஆடிக்கொண்டிருந்த போது ஷசாட் 12 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். அப்போது பாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கை 42 ஆகும்.

பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் சற்று தடுமாற்றமாக ஆடினாலும் கம்ரன் அக்மலுடன் ஜோடி சேர்ந்த சிரேஷ்ட வீரர் யூனுஸ்கான் நிதானமாக ஆடினாலும் அவராலும் கனேடிய பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் 6 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி ஒரு ஓவருக்கு 4 ஓட்டங்களைக் கூட பெற முடியாமல் தடுமாறியது.

கம்ரன் அக்மலுடன் ஜோடி சேர்ந்த மிஸ்பா உல்ஹக் சற்று வித்தியாசமான முறையில் ஆடினாலும் மறுபக்கம் நின்ற கம்ரன் அக்மல் 16 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

மிஸ்பா உல் ஹக்குடன் ஜோடி சேர்ந்த உமர் அக்மல் 48 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். பின்னர் அணித் தலைவர் அப்ரிடி மிஸ்பா உல் ஹக்குடன் ஜோடி சேர்ந்து அணியின் ஓட்ட வேகத்தை உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் மறுமுனையில் நின்ற மிஸ்பா உல் ஹக் 37 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் அணித்தலைவர் அப்ரிடியுடன் ஜோடி சேர்ந்த அப்துர் ரஷாக் 8 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் அப்ரிடி 20 ஓட்டங்களுடனும் றியாஸ், அஜ்மல் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து சென்றனர். உமர் குல் 2 ஓட்டங்களுடன் இருந்தார்.

பந்து வீச்சைப் பொறுத்த வரை கனடா அணி சார்பாக பய்டவின் 8 ஓவர்கள் பந்து வீசி 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டையும், றிஸ்வான், பாலாஜி ஹன்சரா, ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் ஒஸ்ன்டின் ஒரு விக்கெட்டையும்  பதம் பார்த்தனர்.



தென்னாபிரிக்க அணி 231 ஓட்டங்களால்  வெற்றி


மொகாலியில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தென் ஆபிரிக்காவின் 351 ஓட்டங்களை எதிர்த்து இலக்கைத் துரத்திய நெதர்லாந்து அணி 34.5 ஓவர்களில் 120 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது. தென் ஆபிரிக்கா 4 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.

இந்தப் போட்டியில் 231 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்கா வென்றதன் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 4வது பெரும் தோல்வியைச் சந்தித்தது நெதர்லாந்து.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி ஏ. பி. டீவிலியர்ஸின் அபாரமான 134 ஓட்டங்களுடனும், அம்லாவின் 113 ஓட்டங்கள் மற்றும் கடைசியில் ஜே. பி. டுமினியின் 15 பந்துகளில் 40 ஓட்டங்களாலும் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ஓட்டங்கள் எடுத்தது.

இலக்கைத் துரத்தக் களமிறங்கிய நெதர்லாந்து அணியில் தென் அபிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்கும் விதமான துடுப்பாட்டம் கூட காட்டப்படவில்லை.

துவக்க வீரரும் விக்கெட் கீப்பருமான பரேசி மட்டும் 66 பந்துகளில் 5 பவுண்டரிகளில் 44 ஓட்டங்கள் எடுத்து அதிக பட்ச ஓட்ட எண்ணிக்கையை எட்டினார்.

இங்கிலாந்துக்கு எதிராக சதம் எடுத்த டஸ்காதி 23 பந்துகள் சந்தித்து 11 ஓட்டங்கள் எடுத்து டேல் ஸ்டெய்ன் பந்தில் எல். பி. டபிள்யூ. ஆனார்.

கடைசி 8 விக்கெட்டுகளை 39 ஓட்டங்களில் இழந்தது நெதர்லாந்து. தென் ஆபிரிக்க அணியில் தன் முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுக்களை எடுத்து அசத்திய லெக் ஸ்பினர் இம்ரான் தாஹிர் இந்தப் போட்டியிலும் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

கலிஸ், பீட்டர்சன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஸ்டெய்ன், டுமினி தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.








No comments: