“கிருஷ்ண ஜயந்தி”.
ஹரே கிருஷ்ணா! மீண்டும் இந்த வாரம் உங்களை சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி. கடந்த சில வாரங்களாக பல  பாகவதர்களின்  கதைகளை அனுபவித்து வந்தோம். எல்லா பாகவதர்களின் சிந்தனையை ஈர்த்த அந்த பகவானின் அவதார  காரணத்தையும், பெருமையையும்  நாம் அனுபவிக்கவேண்டாமோ?“ஒருத்தி மகனாய் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர்ந்த அந்த கண்ணனின் கதையை நீங்கள் அறியாதது இல்லை. இருந்தாலும் எத்தனை முறை கேட்டாலும் , சொன்னாலும், அவன் நினைவு நமக்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்துவது உண்மை. ஆகையால் இந்த வாரம் அவன் பிறந்த நாளை(ஸெப்டெம்பர் 2 ஆம் தேதி) முன்னிட்டு அவன் அவதார சிறப்பை படித்து மகிழ்வோம்.
பகவான் அவதார காரணம் என்ன?
கண்ணன் கீதையில்
பரித்ராநாய சாதுனாம்  வினாசாய சதுஶ்க்ருதாம்
தர்மஸம்ஸ்த்தாபனார்தாய ஸம்பவாமி யூகே யூகே [4. 8]
அர்த்தம்: பக்தரை காத்து, கொடியவரை அழித்தும், தருமத்தை நிலை நிறுத்துவதற்காகவும் யுகம்தோரும் நான் தோன்றுகின்றேன்.
ஸ்ரீ கிருஷ்ணர் வாசுதேவருக்கும் தேவகிக்கும் 8வது மைந்தனாக இந்த பூலோகத்தில்  அவதரித்தார். வானில் தோன்றிய ஆசீரீரை கேட்ட, கம்ஸன் தேவகியின்  8வது குழந்தையை கொல்ல  தன்  சகோதரி  தேவகி, வாசுதேவர், அவன் தந்தை எல்லோரையும் சிறை வைத்தான். கம்ஸன் மிக கொடியவன்.  8 வது குழந்தை தான் அவனை  கொல்லும்  என்று தெரிந்தும் அவன் தேவகிக்கு பிறந்த முதல் 6 குழந்தையையும் சிறிதும் இரக்கமின்றி பிறந்த உடனே கொன்றான். 7வது குழந்தை “பலராமன்” யோகாமாயையின் மஹிமையால் தேவகியின் கர்பத்தில் இருந்து ரோஹினியின் கர்பத்துக்கு மற்றப்பட்டான். தேவகியின் கர்பம் கலைந்து விட்டது என்று கம்ஸன் தவறாக புரிந்து கொண்டு நிம்மதி அடைந்தான். பிறகு தேவகி 8வது குழந்தையை கர்பகமாக இருப்பது தெரிந்த அவன் நிம்மதி அற்று, உள்ளே பயந்தும் சதா சர்வ காலமும் கிருஷ்ணனையே கொல்ல நினைத்து திட்டம் தீட்டி வந்தான்.
அது ஒரு பக்கம் இருக்க, இங்கு சிறை சாலையில் அந்த பகவானின் அவதாரத்தை குறிப்பது போல் நல்ல சகுணங்களும், நல்ல நேரம், உன்னத நக்ஷத்திரமான "ரோஹிணி", மற்றும் குயிலின் காணம் , மயிலின் ஆட்டம், நறுமணம் வீசும் பூக்கள் மலர்ந்தும், வண்டுகள் ரீங்காரமி ட்டும், தேவர்களும், தேவ ரிஷிகளும் பூமாரி பொழிந்து ம் அந்த பகவானை  வரவேற்றனர்.
பகவான் சரியாக நடு ராத்திரிக்கு மேல் ரோஹிணி நக்ஷத்ரத்தில் விண்ணவரும் , மண்ணவரும் புடை சூழ்ந்து வரவேற்க்கும் நாயகனாக நான்கு கைகளோடு சங்கு சக்கிர தரியாக அந்த “விஷ்ணு” ஆவதரிதா ர். தேவகிக்கு அந்த கண்ணனின் மாய சக்தியால் கவரப்பட்டு சுக பிரசவம் ஆகியுள்ளது என்றும், தனக்கு பிரசவ வேதனையினால் எல்லாம் மறந்து விட்டது போலும் என்றும், நினைத்தாள். வசு தேவர் தன் மைந்தனை கண்டு வியந்தார். அவனது ஒளி விடும் தேகமும், “ஸ்ரீ வத்ஸ”  முத்திரையான “லக்ஷ்மி தேவி” இதய கமலத்திலும், “கவுஸ் துப மணி மாலையும்” கண்டு பூரித்து அந்த பகவான் அவதரித்து  விட்டான் என்று ஆனந்த பட்டார்.
அப்போது அசரீர், வசுதேவரை நந்தருக்கு பிறந்த பெண் குழந்தையை மாற்றி தன்னை நந்தனிடம் ஒப்படைக்க உத்தரவு இட்டார்.
வசுதேவரும், கண்ணனின் வாக்கிற்கிணாங்கி ஒரு கூடையில் குழந்தையை வைத்துக்கொண்டு புறப்படுகிறார். அன்று அதிசயம் போல் எல்லா காவல் காரர்களும் தூங்கி விடுகின்றனர்.
அந்த அடர்ந்த இருட்டில், இடியும், மேகமும் சூழ்ந்த இரவில் யமுனையை கடக்க வசுதேவர் முற்பட்டார். மழை காலம் ஆகையால் யமுனை நீர் மிகுந்து இருந்தது. மேலும் அந்த பகவானின் திருவடியை தொட வேண்டும் என்று அந்த யமுனை உயர்ந்து அவன் காலை அலம்பி பின் கிடுகிடு வென்று வற்றி வாசுதேவருக்கு வழி விட்டது. அந்த ஆதிசேஷன் பகவானிர்க்கு குடையா க மழையில்  இருந்து கண்ணனை காக்கின்றார். வசு தேவரும் நந்தரை சந்தித்து குழந்தையை மாற்றி  கொண்டு பிறகு சிறை சாலையை அடைந்தார். இதெல்லாம் ஆன பின் சிறை காவலர்களுக்கு தூக்கம் தெளிகின்றது.
உடனே செய்தி அறிந்த கம்ஸன் சிறைச்சாலைக்கு ஓடி வருகிறான். அந்த குழந்தையை தேவகியிடம் இருந்து பிடுங்கி கொல்ல முற்படும் போது, துர்கையின் ஆவதாரமான அந்த குழந்தை அவன் கையில் இருந்து மறைந்து அவனை "மூடனே என்னை உன்னால் கொல்ல முடியாது,  உன்னை கொல்லும் குழந்தை பிறந்து விட்டது , நீ உன் சகோதரியை கொடுமை செய்வதை நிறுத்து." என்று கூறி மறைந்தது. கம்ஸனும் அப்போது மனம் மாறி தேவகியிடம் மன்னிப்பு கோரினான். ஆனால் அந்த அர க்கனின் மனம் மறுநாளே மாறியது. தன் உயிருக்கு  பயந்து ஊரில் உள்ள குழந்தைகளை கொல்ல ஆணை இட்டான்.
மற்றொரு பக்கம் கோகுலதில் கண்ணனின் பிறந்த நாளை ஊரே கொண்டா டியது. அந்த ஆயர் பா டியில் உள்ள கோப்பிகளும், மற்ற ஆயர்களும் ஆனந்தத்தில் கூத்தாடினர். பிறந்த குழந்தையை நீராட்டி, சீராட்டி, கொஞ்சி தொட்டில் இட்டு மகிழ்ந்தனர். கர்க  முனிவர் குழந்தையின் ஜாதகத்தை குறிக்க முற்பட்டு வியந்து போனார். இது சாதாரண குழந்தை இல்லை என்று புரிந்து கொண்டார். அந்த பகவான் " மஹா விஷ்ணு "  தன் லீலையாக அவதாரம் செய்து உள்ளான் என்று அறிந்தார்.
நந்தரும், யாசோ தையும் தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு ஊரில் உள்ள அனைவருக்கும் பரிசுகளும், பசுக்களும், தனியங்களும், தங்க ஆபரங்களும் கொடுத்து சந்தோசமாக கொண்டாடினார்.
இப்படி கண்ணன் பல லீலைகளை புரிந்து உள்ளான். அதை வரும் வாரங்களில் பார்ப்போம். அவன் அவதார பெருமையை படிப்தோடு நில்லாமல் அவன் பிறந்த நாள் கொண்டாட்டத்தி லும் பங்கு கொள்ளலாம். “கிருஷ்ண ஜயந்தி” ("கோகுலாஷ்டமி ") 180 falcon street , North sydney கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது, இந்த வருடம் நாமும் அதில் பங்கு கொண்டு அவன் பெருமையை மனத்தால் எண்ணி, புகழை வாயால் பாடி மகிழலாம். எல்லோரும் திரளாக வாருங்கள் என்று கூறி அமைகிறேன்.
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!
என்றும் அன்புடன்,
ஆண்டாள் (ரம்யா)

No comments: