பண்ணும் பரதமும் 3

.
கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அவுஸ்திரேலிய கிளையினரால் பண்ணும் பரதமும் 3 என்னும் பல் சுவைக் கலை நிகழ்வு  நடாத்தப்படவுள்ளது


கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அவுஸ்திரேலிய கிளையினரால் பண்ணும் பரதமும் 3 என்னும் பல் சுவைக் கலை நிகழ்வு இன்னும் 3 வாரங்களில் நடாத்தப்படவுள்ளது . ரத்மலான இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஆதரவு நாடும் சிறுவர் இல்லத்துக்கு வழங்குவதற்காக இந் நிகழ்வு நடாத்தப்படுகின்றது.


அண்மைக்கால வன்முறைகளால் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்து அநாதரவான 195 பிள்ளைகள் இச் சிறுவர் இல்லத்தில் வசிக்கின்றனர். அகில இலங்கை இந்து மாமன்றம் இந்த இல்லைத்தைப் பராமரித்து வருகின்றது.

இல்லத்தில் வாழும் சிறார்களின் அன்றாடச் செலவுகளை உள்ளூர் மற்றும் வெளியூர் அன்பர்களின் கொடைகள் மூலம் மன்றம் சமாளித்து வருகின்றது. மேலதிகச் செலவுகள் ஏற்படுமிடத்து அவற்றை ஈடு செய்ய மன்றம் பிறரின் உதவிகளை நாடுகின்றது.

தற்போது இல்லத்தில் வசிக்கும் சிறுவர்கள் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு சோடி சீருடை, காலணி, துவாய், படுக்கை விரிப்புகள் என்பனவும் பிள்ளைகளின் பொதுப் பாவனைக்காக பெட்டகங்கள், கணணி, மேசை என்பனவும் தேவைப்படுகின்றன என இனங் கண்டு அதற்குத் தேவையான பணத்தை வழங்குமாறு எமது சங்கத்தை மன்றம் கேட்டுள்ளது. இந்த நிதியைத் திரட்டுவதற்கே பண்ணும் பரதமும் 3 என்னும் பல் சுவைக் கலை நிகழ்வினைக் கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அவுஸ்திரேலிய கிளையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

நிகழ்வின் விபரங்கள் வருமாறு:
• நாள்: 2010 செப்டம்பர் 11
• நேரம்: மாலை 5.45
• இடம்: பாங்க்ஸ் டவுன் நகர மண்டபம், பாங்க்ஸ் டவுன்

இந்த 195 சிறுவர்களுக்கும் நீங்கள் பல் வேறு வகைகளில் உதவி செய்யலாம்:

1. குறைந்த விலையில் விற்பனவு செய்யப்படும் நுழைவுச் சீட்டுக்கள் எவற்றையேனும் பெற்றுக்கொள்ளலாம்1.
• தனி நபர்: $25.00
• மாணவர்/ முதியோர்: $ 20.00
• இரு பெரியவர்கள் இரு குழந்தைகள் உட்பட்ட குடும்பம்: $ 80.00
• புரவலர்: $ 100. 00 (இரு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் வழங்கப்படும்)

2. நிகழ்ச்சி அனுசரணையாளர்: $150.00 க்கு மேற்பட்ட எத் தொகையையும் செலுத்தி ஆதரவு நல்கலாம். (இரு ஒதுக்கப்பட்ட விஷேட ஆசனங்கள் வழங்கப்படும்)

அவுஸ்திரேலியாவில் வாழும் எமது குழந்தைகளின் தேவைகள், விருப்பங்கள் அனைவற்றையும் நாம் பூர்த்தி செய்கின்றோம். இரத்மலானை சிறுவர் இல்லத்தில் வாழும் இச் சிறுவர்கள் பூர்த்தி செய்யப்படாத தேவைகளின் மத்தியில் உழல்கின்றனர். எவ்விதத் தவறும் இழைக்காமல் தற்போதைய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் பெற்றோர் மற்றும் உறவுகளின் அன்பையும் ஆதரவையும் கூட இழந்து நிற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தாரளமாக உதவி செய்து அவர்களின் ஏக்கத்தின் ஒரு பகுதியையேனும் தீர்க்க உங்கள் பங்களிப்பை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கும் நுழைவுச் சீட்டுக்களுக்கும் பின் வருபவர்களுடன் தொடர்பு கொள்ளவும்:

• P. பாஸ்கரநாதன் (Phone: 9643 1907) Email: paski@aapt.net.au;
• S. மனோகரன் (Mobile: 0407 413 986; 0402 268 321) Email: tricosydney@optusnet.com.au
• K.K. சேயோன் (Phone: 9742 6093) Email: kalvalai@optusnet.com.au
• R. ராஜ்குமார் ( Phone:9702 5691; Mobile: 0433 959 747) Email: rajakumar@optusnet.com.au
• K. கிருபாகரன் (Phone: 0421653 851) Email: kanda.kirupa@gmail.com
• ஷான் குமாரலிங்கம் (Mobile: 0423 822 912) Email: kumaralingams@stgeorge.com.au
• செல்வி ஸ்ரீஸ் பொன்னையா பிள்ளை (Phone: 0431 135 597) Email: shriska@yahoo.com.au
• S. குருநாதன் (Phone: 0430 829 375) Email: gurunathan@optusnet.com.au
• செல்வி குமுதா அசோகன் (Phone: 9809 4995) Email: kumutha1@hotmail.com
P. பாஸ்கரநாதன்                             K.K. சேயோன்
தலைவர்                                          செயலாளர்

No comments: