பிரானா 3 D தமிழிலும் வருகிறது - சினிமா செய்திகள் -

.
*அற்புதமான படைப்பான பிரானா 3 D தமிழிலும்
*இந்திரா காந்தி வேடத்தில் ப்ரியங்கா சோப்ரா


மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுகிறது. இதில் அவரது அரசியல் பணிகள், பிரதமராக தேர்வானது, உலக தலைவர்களுடனான சந்திப்புகள், இந்தியாவுக்காக அவர் போட்ட புதிய திட்டங்கள் போன்றவை காட்சிகளாக்கப்படுகின்றன.
இறுதியில் பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் படத்தில் இடம் பெறுகிறது. இந்த படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான கிருஷ்ணா ஷா இப்படத்தை தயாரிக்கிறார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி  வேடத்தில் நடிக்கிறார் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா


மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது இந்தப் படம். இதர நடிகர், நடிகைகள் தொழில்நுட்பகே கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கிருஷ்ணா ஷா அறிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்கான முன் அனுமதியை இந்திரா குடும்பத்தாரிடம் பெற்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


அற்புதமான படைப்பான பிரானா 3 D தமிழிலும்

அற்புதமான வித்தியாசமான படைப்பான பிரானா 3D திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் இந்தியாவில் ஆகஸ்ட் 27 முதல் வெளிவருகிறது
இதனை தமிழகத்தில் ஓம் சக்தி கம்பைன்ஸ் ஸ்ரீராஜ் மற்றும் தெலுங்கில்  முகேஷ் வெளியீடு செய்கின்றன.

கதை நுட்பமும் தொழில் நுட்பமும் கைகோர்த்தால் ரசிகர்களுக்கு வித்தியாச திரைப்பட அனுபவம் கிடைக்கும். அப்படி ஒரு படமாக வரவிருப்பதுதான் 'பிரானா 3D' என்ற திரைப்படம்.

கிராபிக்ஸ் தொழில் நுட்பம் பல்வேறு கற்பனை திரைக்காட்சி வடிவில் உருவாக்க பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது. அத்துடன் '3D' தொழில்நுட்பமும் இணைந்து கொண்டால் காட்சிகள் விழிகளை விரிய வைப்பதுடன், காட்சிகள் பார்ப்பவர் இமையருககே நடப்பதைப் போன்ற சிலிர்ப்பு அனுபவத்தைத் தரும்.

உயிர்பயத்தைப் பற்றி சித்திரிக்கும் படங்கள் அக்காலத்திலிருந்து வரவேற்பைப் பெற்று வருகினறன். முன்பு ' ஜூராஸிக் பார்க்' கில் டைனோசரைக் கண்டு பயந்தார்கள். 'அனகோண்டா'வில் பாம்பைக் கண்டு பயந்தார்கள். 'ஜாஸ் 'ஸில் சுறாமீனைக் கண்டு பயந்தார்கள். 'பிரானா'வில் மீனைக் கண்டு பயப்படப் போகிறார்கள். '300' என் கிற படம் டைமன்ஷன் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த வெற்றிப்படம். அதே நிறுவனம்தான் 'பிரானா' வையும் தயாரிக்கிறது. அதிபயங்கரப் படங்களை இயக்கி பரபரப்பு ஏற்படுத்தும் அலெக்சாண்டர் ஏஜா ( Alexandre Aja) தான் இயக்கியுள்ளார். இவரது " The Hills have eye' ஏற்படுத்திய பரபரப்பின் தாக்கம் இன்னமும் இருக்கிறது.

எலிசபெத் ஷீ , ஆடம்ஸ் காட், ஜெசிகா, ஜோடர், ஸடீவன் ஆர்.மெக்கயூன், விங்ரேம்ஸ், ரிச்சர்ட் ட்ரேஃபஸ், கிறிஸ்டோபர் லாய்டு ஆகியோர் நடித்துள்ளனர். முழுநீள அதிரடி த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஜான் ஆர். லியோனெட்டி, கைமக்சேல் வேண்ட் மாச்சர் இசைமையத்துள்ளார். படத்தொகுப்பு பேக்ஸடர்.

லேக் விக்டோரியா கோடைக் காலத்தில் வந்து மகிழ ஏற்ற சுற்றுலாத் தலமாக இருக்கிறது. ஆண்டுகள் ஆண்டு இங்கு வருகிற பார்வையாளர் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அங்கு உள்ள கேளிக்கை மையம் 'ஸ்பிரிங் பிரேக்' ஒரு சந்தோஷ நீர்நிலையமாக இருப்பதே இதன் காரணம். ஸ்விம்மிங், போட்டிங், டைவிங் என்று எப்போதுமே பார்வையாளர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். தங்கள் கவலைகளை மறந்து கூடிக் கும்மாளம் அடிக்கும் கூட்டம் 5000லிருந்து 50,000 என்று பெருகிக் கொண்டே போனது.

இப்படிப்பட்ட லேக் விக்டோரியாவுக்கு வந்தது வினை, இங்கு ஒரு விபரீதம் நிகழ்ந்து வந்தது. ஆரம்பத்தில் யாரும் கண்டு கொள்ளாத விபரீதம் விஸ்வரூபம் எடுக்க, பல உயிர்ப்பலிகள் நிகழ்கின்றன். மனித சக்திக்கு எட்டாத அமானுஷ்ய சக்தி போல தெரிந்தது. பிறகு அது நீரில் வாழும் மீனால்தான் நடக்கிறது என்று தெரிந்ததும் பலரும் நம்பவில்லை. புலனாய்வு செய்ய தொடங்கினால். பல்வேறு மர்மங்கள் பயமுறுத்த வைக்கின்றன.

நீருக்குள் இறங்கித் தேடினால் நீரடி மண் தரை சம்மாக இல்லை. பிளந்து பலநூறடி ஆழத்துக்கு போய்க் கொண்ட இருக்கிறது. இது பூகம்பத்தின் போது ஏற்பட்ட பிளவு. அதனுள் தேடுதல் வேட்டையில் இறங்கினால் ஆபத்து. ஆட்கொல்லி மீன்களின் அட்டூழியம் தான் இது என்று தெரிகிறது. அதுதான் 'பிரானா' மீன் வகை என்று புரிகிறது. பிரானா வகை மீன்கள் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டது என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் அப்படி இருக்கும் போது அது எப்படி மீண்டும் வரமுடியும்? வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் தேடி ஆராய்ந்து பார்க்கப் புறப்பட்டு போகிறார்கள். உயிர்க் கொல்லி மீனுக்கு வலை விரிக்கப் பார்த்தால் வலை வீசியவர்களின் உயிருக்கே உலைவைக்கும் வேலையை செய்கின்றன... பிரானா மீன்கள்..

பிரானா முதலில் மனிதனைத் தாக்கும். அது கடித்ததால் வெளியேறும் ரத்தவாடையே மோப்பம் பிடித்தபடி கூட்டம் கூட்டமாக மீன்கள் வந்து துவம்சம் செய்துவிடும். ரத்தவெறி பிடித்த மீன் இனம்.

லேக் விக்டோரியாவில் ஆயிரக்கணக்கான உல்லாசப் பயணிகள், உள்ளூர் மக்கள் என்று குஷியாக இருக்கிறார்கள் சுமார் 20,000 பேர் இருப்பார்கள். பிரானா மீன்கள் தாக்கத் தொடங்குகின்றன். ஆட்கள் உள்ளிழுக்கப்பட்டு கடிபடுகிறார்கள். போலீஸ் வருகிறது. எச்சரிக்கிறது. நிமிடத்துக்கு நிமிடம் உயிர்ப்பலி கூடிக் கொண்டே போக.. என்ன கொடுமை என்றால் பிரானா மீன் பற்றிய எச்சிரிக்கையை யாரும் நம்பவில்லை. 'என்னய்யா கதை விடாதீங்க... மீன் மனுஷனைக் கடிக்குதா.. யார் காதுல பூ வைக்கிறீங்க..?என் கிற ரீதியில் அலட்சியம் செய்கிறார்கள்.

லேக் விக்டோரியாவில் சிக்கியுள்ள 20,000 பேரை மீட்கும் பொறுப்பு எலிசபெத் ஷூவுக்கு வருகிறது. ஒரு பெண்மனியாக இருந்து கொண்டு அவர் எடுக்கும் மீட்பு முயற்சிகள் தான் மீதிக்கதை. இந்தப் பிரானா' படத்துக்கு பல காத்திருப்புகள் கால விரயங்கள் என நடந்துள்ளன். படப்பிடிப்புக்குரிய ஏரியில் உரிய தட்ப வெட்ப நிலைக்காகவும், கோடைக்காலம் வரும் வரைக்கும் காத்திருக்க வேண்டியிருந்தது.

முதலில் இயக்குவதாக இருந்தவர் வேறொருவர். பல மாற்றங்களுக்குப் பின் தான் புதிய இயக்குநரும் ஒப்பந்தமானார். ஏரியில் நிறைய ரத்தம் சிந்தும் காட்சி எடுக்கப்பட வேண்டும். அதற்கான சிவப்பு திரவம் கலக்கப்பட்டு ஏரி நிறம் மாறியது. இதற்கு விமர்சனங்கள், எதிர்ப்புகள். இப்படி பல்வேறு சவால்களை சந்தித்த பின் தான் 'பிரானா 3D' உருவாகியுள்ளது.

நன்றி வீரகேசரி இணையம்

No comments: