மக்களை கவர்ந்த என் கண்கள் மக்களுக்கே- ஐஸ்வர்யாராய்

ஐஸ்வர்யாராய் அழகுக்கு அழகு சேர்ப்பது அவரது கண்கள். “50 கிலோ தாஜ்மகால்” என்பதில் இருந்து அங்குலம் அங்குலமாக ஐஸ்வர்யாராயை கவிஞர்கள் வர்ணிப்பதற்கு அவரது நீல விழிகளின் கவர்ச்சி காரணமாய் அமைந்தது. அந்த கண்களை இறந்ததற்கு பிறகு தானம் செய்ய முடிவு செய்துள்ளார்.

மக்கள் மத்தியில் கண்தானம் செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதைச் செய்கிறாராம்.



இந்திய கண் வங்கி அமைப்புடன் சேர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே இந்த அமைப்பில் பிரபல இந்தி நடிகர் ஓம்புரியும் உள்ளார். அவரும் கண்களை தானம் செய்து இருக்கிறார். தற்போது ஐஸ்வர்யாராயும் கண்தானம் செய்கிறார்.

இதுபற்றி ஐஸ்வர்யாராய் கூறும்போது, மக்கள் என்னைப்பற்றி நிறைய தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அதற்கு காரணமாய் இருப்பது எனது கண்கள். எனவேதான் இந்த கண்ணை தானம் செய்ய முடிவு செய்துள்ளேன் என்றார்.

ஐஸ்வர்யாராய் “இருவர்” படம் மூலம் தமிழில் அறிமுகமானார். “ஜீன்ஸ்”, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்”, “ராவணன்” போன்ற படங்களில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக நடித்த “எந்திரன்” படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது

நன்றி வீரகேசரி இணையம்

1 comment:

Anonymous said...

அரசியல் வாதியும் மக்களுக்காக என்கிறான்
போராளியும் மக்களுக்காக என்கிறான்

நடிகைமாரும் மக்களுக்கு என்கிறார்கள்

மக்கள் அவ்வளவு இழிச்சவாயார் போலகிடக்குது