நல்லைக் கந்தன் பெருந்திருவிழா

.

கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக் கந்தன் பெருந்திருவிழா 15-08-2010ம் திகதி முற் பகல் 10மணிக்கு கொடி யேற்றத்துடன் பக்திபூர்வமாக ஆரம்ப மாகியது.
காலை 8.30 மணிக்கு வசந்தமண்டப பூசை சிறப்புற இடம் பெற்றது. பெருந்திரலான பத்த அடியார்கள் ஆலயத்தின் உள்ளும் வெளியம் காணப்பட்டனர்.

9.30மணிக்கு வேல்,வள்ளி தெய்வானை,விநாயகர் வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளி கொடிக்கம்பத்தை அடைந்து. உரிய பூசை,வழிபாடுகள் சிறப் புறஇடம்பெற்றது. 10.00 மணிக்கு அரோகரா சத்தம் வானைப் பிளக்க கொடி ஏற்றப்பட்டு நல்லைக் கந்தன் பெருந்திருவிழா ஆரம்ப மாகியது.

1ம் திருவிழா
மாலை வழமையான மாலைப் பூசை வழிபாடுகள் முடிந்ததும் 4.30 வசந்தமண்டப பூசை வழிபாடுகள் இடம் பெற்று கொடித்தம்ப பூசை வழிபாடுகள் இடம் பெற்றது. கந்தசுவாமி 5.00 மணிக்கு வசந்தமண்டபத்தில் இருந்து எழுந்தருளி உள்,வெளி வீதி வலம் வந்து பத்தாகளிற்கு அருள் அளித்தார்.
மதியம் நல்லூர் ஆலயத்தை சுழவுள்ள அன்னதான மடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நல்லூர் ஆலயத்தை சுழவுள்ள தண்ணீர் பந்தல்களில் தாகசாந்தி வழங்கப்பட்டது.
திருவிழா முடிவடைந்ததும் நல்லூர் ஆலயத்தை சுழ சில கலைநிகழ்வுகள் இடம்பெற்றது.
நன்றி நல்லு}ரன்.கொம்

No comments: