நான் பார்த்து ரசித்த யாழ் மத்திய கல்லூரி சிட்னிகக் கிளையினர் வழங்கிய இசை அமுதம் 2023 - செ .பாஸ்கரன்

.

யாழ் மத்திய கல்லூரி சிட்னிகக் கிளையினர் வழங்கிய இசை அமுதம் 2023 சென்ற வெள்ளிக்கிழமை செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி பென்றித்தில் அமைந்திருந்த John Sutherland performing arts centre ரில் மாலை ஏழு மணிக்கு ஆரம்பமானது. மத்திய கல்லூரி குறிப்பிட்ட நேரத்தில் தங்களுடைய நிகழ்ச்சியை ஆரம்பிப்பது வழமையாகும், அந்த விதத்திலே இம்முறையும் இசை அமுதம் 2023 நிகழ்வு மாலை 7 மணிக்கு சிட்னியில் பிரபல அறிவிப்பாளரும், பல வானொலிகளில் அறிவிப்பாளராகவும் இருக்கும் திரு மகேஸ்வரன் பிரபாகரன் அவர்களுடைய கம்பீரமான குரலோடு நிகழ்ச்சி ஆரம்பமானது. 
 இம்முறை நிகழ்ச்சியிலே பாடுவதற்கு 
தென்னிந்திய பின்னணி பாடகர்களான வி எம் மகாலிங்கம், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சரிகமப மூலம் மக்கள் மனங்களில் இடம் பிடித்த பாடகி ஸ்ரீநித, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்களுடைய மனதைக் கவர்ந்த பாடகி பிரியா ஜேர்சன் இவர்களோடு எல்லோருக்குமே பிடித்த இசை குழுவினரும், பலமுறை சிட்னிக்கு வருகை தந்த இசை குழுவினருமான மணியன் band இசைக்குழுவினர் இந்த நிகழ்ச்சிக்கு இசையை வழங்கி இருந்தார்கள். நிறைந்த மக்களோடு நிகழ்ச்சி ஆரம்பமானது. 


ஸ்ரீகாந்த் ஹரிஹரன் அவர்களுடைய அம்மா என்றழைக்காத என்ற பாடலுடன் நிகழ்ச்சி ஆரம்பமானத. அதனை தொடர்ந்து பாடகர்களும் பாடகிகளும் மாறி மாறி பாடல்களை வழங்கிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக வி எம் மகாலிங்கம் அவர்கள் மக்களோடு நன்றாக கதைத்து, பேசி, சிரித்து மக்களை தன் வசப்படுத்திக் கொண்டது மக்கள் அவருக்கு வழங்கிய கரகோஷங்களில் இருந்து பார்க்கக் கூடியதாக இருந்தத. உச்ச ஸ்தானியில் கணீர் என்ற குரலில் அவர் பாடிய பாடல்கள் மக்களை நன்றாக கவர்ந்திருந்தத. அதேபோல் மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ என்ற பாடல் எங்கள் காதுகளில் ரீங்காரித்துக் கொண்டிருக்கின்ற அந்தப் பாடலை பிரியா ஜேர்சன் பாடி மக்களிடமிருந்து கரகோஷங்களை பெற்றுக் கொண்டார். அதேபோல் ஸ்ரீநிதியின் கண்ணீரென்கிற குரலிலே பல பாடல்கள் வந்து மக்கள் கரகோஷங்களை அள்ளிச் சென்றத. எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து பாடல்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்தத. ஆரம்பத்தில் அறிவிப்பாளர் அவர்களோடு சிறிய உரையாடல்களை மேற்கொண்டு அவர்களுடைய தற்போதைய நிலைமை பற்றியும் அவர்கள் பாடக் கொண்டிருக்கின்ற திரைப்படங்கள் பற்றியும் சில வினாக்களை கேட்டு தெளிவுபடுத்தி கொண்டிருந்தார். பின்பு எப்படி நேரம் போனது என்று தெரியாமல் இடைவேளை அறிவிக்கப்பட்டத. இடைவேளையின் போது உணவு வழங்கப்பட்டது . இலவசமாக கொத்து ரொட்டி எல்லோருக்குமே வழங்கப்பட்டது . 


 மீண்டும் அரை மணித்தியால இடைவேளைக்கு பின்பு பாடல்கள் ஆரம்பமானது பாடல் தொடங்கும் போதே மகாலிங்கமும் ஸ்ரீநிதியும் சேர்ந்து மருத மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம் என்று பாடி மக்கள் மனதிலே இடம் பிடித்துக் கொண்டார்கள். கண்டா வரச் சொல்லுங்க என்ற கர்ணன் திரைப்பட பாடல் எல்லோருக்குமே பிடித்த ஒரு பாடல்,சந்தோஷ் நாராயணன் இசையில் கிடக்குழி மாரியம்மாள், என்ற நாட்டுப்புறப் பெண் பாடகியுடைய பாடல் அந்த பாடலை மகாலிங்கம் தன்னுடைய கண்ணீர் என்ற குரலிலே பாடிய போது சபையில் இருந்த அத்தனை பேரையும் கட்டிப்போட்டு விட்டது. மிக அற்புதமாக இருந்தது அந்த பாடல். தொடர்ந்து ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பிரியா ஜேர்சன் சேர்ந்து மலர்ககளே மலர்களே என்ற மெலோடி பாடலையும், ஸ்ரீகாந்த் தனித்து ராகங்கள் 16 என்ற எஸ்பி பாலசுப்ரமணியத்தினுடைய பாடலை பாடிய போது கரகோஷமும் சபையை நிறைத்தத. இப்படியே தொடர்ந்து பல பாடல்கள் அதே போல் பிரியா ஜேர்சன் எல்லா மேடைகளிலுமே பாடுகின்ற, அவருக்கு பிடித்த பாடலான கால் முளைத்த பூவே என்ற பாடலை பாடி கரகோஷங்களை பெற்றுக் கொண்டார். பின்பு மகாலிங்கம் பாடிய செந்தமிழில் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள் என்ற பாடலை பாடத் தொடங்கும் முன்பே அலை அலையாக எங்கும் கரகோஷம். மிக அற்புதமாக அந்த பாடலை பாடி இருந்தார். டி ஆர் மகாலிங்கம் பாடிய அந்தப் பாடல் காலத்தால் அழியாமல் இன்று வரையும் எல்லோருடைய மனங்களிலுமே இருந்து வருகின்ற ஒரு பாடல், அந்த பாடல் வி எம் மகாலிங்கம் பாடிய போது மிக அற்புதமாக இருந்தது என்றால் அது மிகையாகாது .

 அதை தொடர்ந்து குறுக்கு சிறுத்தவளே என்ற பாடலை ஸ்ரீகாந்தும் ஸ்ரீநிதியும் பாடினார்கள். ஏ ஆர் ரஹ்மானுடைய அருமையான இசை அமைப்பிலே வந்த பாடல், அந்த பாடலும் இங்கே மிக அருமையாக இருந்தத. இங்கே மணி அவர்களுடைய இசைக் குழுவினர் மிக அற்புதமாக அந்த இசையை வழங்கியது எல்லோரும் கரகோஷத்தை அள்ளிக் கொடுத்தார்கள். இறுதி நிகழ்வின் போது மேடை அதிரும்படியாக பாடல்களை பாடினார்கள். ஆலால கண்டா ஆடலுக்கு அரசா வணக்கமுங்க என்ற பாடல் ஸ்ரீகாந்த், மகாலிங்கம் இருவரும் இணைந்து பாடி நிகழ்ச்சியை ஒரு படி மேலே தூக்கி நிறுத்தி விட்டார்கள். இந்த நிகழ்ச்சியின் இறுதியாக நான்கு பேரும் இணைந்து ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல், குத்து பாடல், ஆட்டத்தோடு பாடக்கூடிய பாடல் அவர்கள் ஆடி பாடினார்கள். ஆனால் பார்வையாளர்கள் இருந்த இடத்திலிருந்து எல்லோரும் ஆடியதைத்தான் பார்க்கக் கூடியதாக இருந்தது. பாடகர்களும் பலமுறை கேட்டுப் பார்த்தார்கள், சிட்னி மக்கள் எழுந்து ஆடுவார்களா? முடிந்தால் ஆட பண்ணுங்கள் என்பது போல் அழகாக அமர்ந்திருந்து ஆடிக் கொண்டிருந்தார்கள். 

 நிகழ்ச்சி மிக இனிதாக இருந்தது உணவுக்காக விடுக்கப்படட நேரத்தை விட மூன்றரை மணித்தியாலங்கள் நிகழ்வு நடைபெற்றது. சிறப்பாக இருந்ததென்றால் அது மிகை ஆகாத, ஆனால் இம்முறை மணி இசைக் குழுவினரின் இசை கொஞ்சம் அதிகமாக ட்ரம் வாத்திய இசை எடுத்துக் கொண்டது போல் இருந்தத. இதை பலரும் குறிப்பிட்டு இருந்தார்கள். ஏதோ ஒரு மெட்டல் ட்ரம் என்பது போன்ற ஒன்றை மிகச் சத்தமாக அடித்தது கொஞ்சம் காதுகளுக்கு அதிகமாக இருந்தது போல் தென்பட்டது. அது தவிர மத்திய கல்லூரி வழமையாக கொடுக்கின்ற நிகழ்ச்சி போல் இந்த நிகழ்ச்சியும் மிக அருமையாக இருந்தத. எந்த விதமான இடையூறும் இல்லாமல் நிறைய பாடல்களை பாடி மக்களுடைய மனங்களை கவர்ந்திருந்தார்கள். மேலும் சபையோர் விருப்பமாக ஏதாவது பாடலை கேளுங்கள் என்று கேட்டிருந்தால் ஒரு சில பாடல்களை சபையினரும் கேட்டிருப்பார்கள். ஏன் எனக்கு கூட மகாலிங்கத்திடம் மழை கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம் என்ற பாடலை கேட்க வேண்டும் போல் இருந்தது. அவர் தனியாக எனக்கு பாடிக் காட்டி இருந்தார் அதேபோல் செந்தமிழ் தேன்மொழியாள் என்ற பாடலையும் என்னுடைய கலந்துரையாடலுக்கு வந்தபோது பாடி காட்டி இருந்தார். ஆனால் அந்த சந்தர்ப்பம் கிடைக்காத காரணத்தினாலே சில நல்ல பாடல்கள் தவறுப்பட்டுவிட்ட்து. பாடகர்கள் வருகின்ற போது சபையோரிடமிருந்து சில விருப்பங்களையும் கேட்டு பூர்த்தி செய்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய ஒரு அபிப்பிராயம். மத்திய கல்லூரி இப்படியான நல்ல நிகழ்ச்சிகளை தொடர்ந்து கொடுக்க வேண்டும் குறிப்பாக பகீரதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூற வேண்டும்.No comments: