தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் - 2023


ஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவாக நடாத்தப்படும் “தமிழர் விளையாட்டு விழா 2023” எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8மணி முதல் இரவு 8மணி வரை East Burwood Reserve, East Burwood என்ற மைதானத்தில் நடைபெற ஏற்படாகியுள்ளது.

 

இடம்: East Burwood Reserve, Burwood HWY, East Burwood, Vic 3151 (Melway Ref: 62 B7).

காலம்: January 8th  Sunday 2023, From 8.00 AM onwards.

 இந்நிகழ்வில் வழமைபோல் துடுப்பெடுத்தாட்டம், கரப்பந்தாட்டம் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், கிளித்தட்டு, கயிறிழுத்தல் உட்பட தாயக விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறருக்கின்றன. இத்துடன் நாள் முழுவதும் ஒடியற்கூழ் உட்பட சுவையான தாயக உணவு வகைகளும், தேசிய வெளியீடுகளும் விற்பனைக்கு உள்ளன. 

அனைத்துத் தமிழ் உறவுகளையும் இந்நிகழ்வுக்கு வருகை தந்து இத்தமிழ் ஒன்றுகூடல் நிகழ்வுகளிலும், விளையாட்டுப் போட்டி-களிலும் பங்கெடுத்து தாயக உணவுகளையும் உண்டு சுவைத்து ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம். 


மேலதிக விபரங்களிற்கும், பதிவுகளிற்கும் 0423 577 071 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

 

குறிப்பு: நிகழ்விடத்தில் தாரளமான வாகன தரிப்பிட வசதிகள் உள்ளன.

நன்றி

 

தமிழர் ஓருங்கிணைப்புக் குழு (விக்ரோரியா)

No comments: