மகாதேவஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .. அவுஸ்திரேலியா
மார்கழி மாதத்தைப் பீடை பிடித்தமாதம் என்று சொல்லி சுபநிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிட்ட நிலையினைக்
காண்கின்றோம். இது பற்றிய விளக்கத்தை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமானதே. பல பெயர்கள் காலத்தின் போக்கால் கருத்து மாறுபட்டு வேறு ஒரு பொருளை உணர்த்துவது நடந்தே வந் திருக்கிறது." ஒப்பிலி அப்பன்" என்னும் சுவாமியின் பெயரை உப்பிலி அப்பன் என மாற்றி - அந்த
சுவாமி க்கு உப்பில்லாத பொருட்களையே நிவேதனம் செய்யும் வழக்கம் நாளடை வில் ஏற்பட்டுவிட்டது.அதே போன்றதே மார்கழி மாதம் பற்றியதுமாகும். " பீடுடைய மாதம்" என்பது பீடை உடைய மாதமாக்கப்பட்டு விட்டது. பீடு என்றால் பெருமையானது, உயர்வானது என்பது பொருளாகும்.திருவாதிரை நட்சத்திரம் " ஆரு த்ரா " என சமஸ்கிருதத்தில் வழங்கப்படுகின்றது. சிவனையும் ஆதிரையான் எனக் குறிப்பிடும் வழமையும் எமது சமயத்தில் இருக்கிறது.மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரதுக்கு முந்திய பத்து நாட்களும் திருவெம்பாவையாகக் கருதி திருவாதிரை இடம்பெறும் பத்தாம் நாளை " ஆருர்த்தா " தரிசனம் எனப் போற்றி சிவனை வழிபடும் வழக்கமும் இந்த மார்கழிக்கே உரியது என்பதும் முக்கியமானதாகும்.அது மட்டுமல்ல சம்பந்தப் பெருமான் அவதாரம் செய்தது கூட மார்கழித் திருவாதிரை என்றும், சேந்தனார் திருப்பல்லாண்டு பாடி அசையாத தேரை அசையச் செய்து சிவனது தேரினை வலம்வரச் செய்ததும் மார்கழித் திருவாதிரை என்றும், வியாக்கிரபாதர்.. பதஞ்சலி ஆகிய சிவனருள் பெற்ற முனிவர்களுக்குச் சிவன் தனது அருட் கூத்தினை நிக ழ்த்திக் காட்டியதும் கூட மார்கழித் திருவாதிரையில்த்தான் என்றும்அறி யக் கிடக்கின்றது. இந்த வகையிலும் மார்கழி மாதம் முக்கியத்துவம் மிக்கதாகவும் கொள்ளப்படுகின்றது.

மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்.தை முதல் ஆனிமாத இறுதிவரை பகல்.ஆடிமுதல் மார்கழி மாத இறுதி வரை இரவு. இந்த இறுதியானது தேவர்களுக்கு விடியற்காலமாகும். இதனால் மார்கழி என்பது தேவர்களின் விடியற் பொழுதாக இருப்ப தால் அக்காலங்களில் காலையில் எழுந்து குளித்து,அனைவரும் பூஜை வழிபாடுகளை ஆற்றுவது மிகவும் நலனை விளைவிக்கும் என்பது நம் பிக்கையாகும்.இதனால்த்தான் மார்கழி மாதம் தேவ காரியங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டது.
இந்தக் காலத்தில்த்தான் மார்கழி நோன்பும் வருகிறது. மணிவாசகப் பெருமானின் திருவெம்பாவையும் பாடப்படுகிறது.ஆண்டாளின் திருப் பாவையும் பாடப்படுகிறது. திருப்பள்ளி எழுச்சி பாடப்படுவதும் குறிப்பி டத்தக்கது.தேவர்களுக்கு மட்டுமே உரிய மாதத்தில் வேறு எந்தவிதச் சிந்தனைகளுக்கும் இடம் கொடுக் கும் வண்ணம் ஏனைய விஷயங்க ளைச் செய்தல் தவிர்க்கப்பட்டதே அன்றி மார்கழி கூடாதது என்பதற் காகவோ மார்கழி பீடை பிடித்தது என்பதற்காகவே அல்ல என்பதை நாங்கள் யாவரும் நன்கு விளங்கிக் கொள்ளுதல் மிகவும் அவசியமா கும்.
" மாதங்களிலே நான் மார்கழி " என கண்ணன் பகவத்கீதையில்
சொல் லுவதை மனத்தில் கொண்டால் மார்கழியின் மகத்துவம் யாவருக்கும் விளங்கிவிடும்.வடமொழியில் " மார்கசீர்ஷம் " என்று மார்கழி மாதம் அழைக்கப்படுகிறது." மார்க்கம் " என்றால் வழி என்பது பொருள். " சீர் ஷம் " என்றால் உயர்ந்த என்பது பொருள்.எனவே மார்கழி என்பது உய ர்வுடையது என்பதை வடமொழியும் கூட எடுத்துக் காட்டுகிறது அல்லவா?

திருவண்ணாமலையில் மணிவாசகரால் பாடப்பட்டதுதான் 'திருவெம்பாவை". திருவெம்பாவைப் பாடல்கள் அனைத்துமே கன்னிப் பெண்களால் பாடப்படும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது. இப்படியாகப் பாடும் பாடல் வகைகள் சங்க காலத்திலேயே
இருந்திருக்கிறது.பரிபாடல், நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய சங்ககால நூல்களில் மார்கழி நோன்பு பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. இங்கு பாவை நோன்பு பற்றிய செய்திகளையும் காண்கின்றோம்.எனவே மணிவாசகப் பெருமானின் பாவையர் பற்றிய இந்த நிலையானது முந்தியும் இருக்கலாம் அல்லது பிந்தியதாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் இல க்கிய ஆராய்ச்சியாளரிடம் காணப்படுகின்றது. எது எப்படி இருப்பினும் - மார்கழி நோன்பு என்பது திருவெம்பாவையுடன் இணைகின்றது என்பதே முக்கிய செய்தி எனலாம்.

" திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் " என்பது
எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதாகும்.மேல்நாட்டிலிருந்து இந் தியா வந்த டாக்டர் ஜி.யூ. போப் என்னும் ஆங்கிலேயரின் மனத்தைத் தொட்டதே இந்தத் திருவாசம்தான். தனது மனத்தைப் பறிகொடுத்த திரு வாசகத்தை ஆங்கில மொழியில் மொழிமாற்றம் செய்தார் என்பதை யாவரும் அறிகின்றோம்.அந்த அளவுக்கு ஆத்மாவையே உருக்கி ஆண் டவனின் நினைப்பை ஊட்டவல்லது திருவாசகம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்பது எல்லோரதும் அவிப்பிராயமாகும். அந்தத்திருவாச கத்துக்குள் அமைந்திருப்பதுதான் " திருவெம்பாவை " ஆகும்.விடியற் காலையிலே எழுந்த கன்னிப்பெண்கள் வீடுதோறும் சென்று இறைவ னது பெருமையினை எடுத்துச் சொல்லி இன்னும் ஏன் நித்திரை செய்கின்றாய் விரைவாக எழுந்துவா எல்லோரும் நீராடி இறைவனது புகழை ஏத்திப் பாடுவோம் என்று பக்தி ததும்ப அழைக்கும் விதத்தில் அமைந் ததுதான் " திருவெம்பாவை " என்பது குறிப்பிடத்தக்கது.

திரு + எம் + பாவை என்பது திருவெம்பாவை ஆகும்.தெய்வத்தை நோக்கிய பக்தி நிலையில் நின்று பாடும் பாடல்கள் என்பதே இதன் அர்த்தம் எனவும் கொள்ளலாம்.ஒவ்வொரு பாடலின் முடிவிலும் " ஏலோர் எம்பாவா " என்றே முடிகின்றதைக் காண்கின்றோம்.இதனைப் பாவைப் பாட்டு என்றும் நீராட்டுப் பாட்டு என்றும் குறிப்பிடுவார்கள். இளம்பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் எனக் கருதி மார்கழி மாதத்தில் நோன்பு நோற்பது வழக்கம்.இந்தப் பெண்கள் அதிகாலைஎழு ந்து இறைவனது புகழைப்பாடி நீராடச் செல்லும் போது " திருவெம் பாவை " பாடல்களைப் பாடிச் சென்றுள்ளனர் என்ப தையே இங்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.இதற்கு ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவையும் சான்றாகி நிற்கிறதெனலாம். இதனால்த்தான் சைவத் தலங்களில் " திருவெம்பாவையும் " வைஷ்ணவத் தலங்களில் " திருப்பாவையும் " மார்கழிமாதத்தில் பாடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதா கும்.
முதல் நான்கு பாடல்களும் அதிகாலையில் நீராடப் புறப்பட்ட பெண் கள் இன்னும் நித்திரைவிட்டு எழாத தமது தோழியரை எழுப்புவதாக , அதற்கு அப்பெண்ணானவள் மறுமொழி கூறுவதாகவும் அமைந்திருக் கின்றது.
ஐந்தாம் பாடல் தொடக்கம் எட்டாம் பாடல் வரை உள்ளன நித்திரை விட்டெழும் பெண்கள் கூறும் விதமாக இருக்கின்றன.
ஒன்பதாம் பாடல் முதல் இருபதாம் பாடல் வரை நித்திரை கலைந்த பெண்கள் இறைவனைத் துதித்துப் பாடும் வகையில் அமைந்திருக்கின்றன.
" ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி " " மாலறியா நான் முகனும் காணா மலையினை " " என்னானை என் அரையன் இன்னமுது என்று எல்லோமும் சொன்னோம் கேள் " கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை"
" முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே - பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே " "இவ்வானும் குவலயமும் எல்லோரும் - காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி"
" வேதப்பொருள் பாடி அப்பொருளாம் மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தாழ்பாடி
ஆதி திறம்பாடி அந்தமாம் மாபாடிப் பேதித்து "
" விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் - கண்ணார் அமுதமுமாய் நின்றான் " என்று திருவெம்பாவைப் பாடல்கள் - எல்லாம் வல்ல இறைவனைப் பற்றிப் பெண்கள் பாடிப் பரவுவதாக எமக்கொல்லாம் விளக்கி நிற்கின்றது எனலாம்.
திருவெம்பாவையும், திருப்பாவையும், மார்கழியில் அதிகாலை நேரத் திலே பாடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே முத லில் சுட்டிக் காட்டப்பட்ட படி தேவர்களின் காலைப்பொழுதாக இருப் பது ஒருமுக்கிய காரணம் என்பதை நம்பிக்கை எனக்கொள்வோம். அதற்குப் பின்னும் பல காரணங்களும் இருக்கின்றன என்பதும் முக்கி யமானதாகும்.
அதிகாலையில் துயில் எழுவது என்பதே ஆரோக்கியத்துக் அடிப்படை அல்லவா? அதுவும் மார்கழியில் அதிகாலை துயில் எழுந்து நீராடுவது என்பது உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதாகும். மார்கழியில் ஏற்படும் காலநிலை மாற்றமானது உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்று எமது முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர். அதனை அறிவுரை ஆக் கினால் யாவரும் புறந்தள்ளியும் விடக்கூடும் என்பதால் அதனை திரு வெம்பாவையுடன் இணைத்துவிட்டனர் என்றே எண்ண வேண்டியிருக் கிறது.
அதிகாலையில் விழித்தால் புத்தி தெளியும்.உடம்பில் இரத்தத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் நரம்புகள் உற்சாகம் பெறும்.பித்தம் தணி யும்.வாத, பித்தம் சமனிலை அடையும்.இவையெல்லாம் ஆரோக்கியம் சம்பந்தமானவை. இவையாயுமே திருவெம்பாவையினுள் அடங்கி இரு க்கிறது என்பதே இங்கு மிகவும் இன்றியமையாத விஷயமாகும் என்பதை அறிதல் வேண்டும்.
தமிழ்ப் பண்பு, அன்புணர்வு, ஒழுக்க நிலை, சமயமரபு, ஆத்மஞானம் அத்தனையும் திருவெம்பாவால் எமக்குக் கிடைக்கின்றது என்பதை யாவரும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
வெறுமனவே திருவெம்பாவைப் பாடாமல் அதனூடாக எங்களுக்குக் கிடக்கும் அரிய பெரிய விஷயங்களை அறிந்து கொண்டு கோவிலில் பாடுவோமேயானால் நிச்சயம் திருவெம்பா எமக்கெல்லாம் பெரும் ப யன் உடையாதாகவே இருக்கும். வைகறைப் பொழுதை " பிரம்ம முகூ ர்த்தம் " என்று குறிப்பிடுவதையும் நாம் நோக்குதல் வேண்டும். மார் கழியை பகவத்கீதை போற்றுகின்றது. மார்கழியில்த்தான் "ஆருர்த்தா" தரிசனம் நட க்கின்றது. மார்கழியில்த்தான் " சுவர்க்க வாசல் ஏகாதசி " உற்சவமும் இடம்பெறுகிறது. சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் உகந்த தெய்வீக மாதமாக மார்கழி திகழ்கிறது என்பதையும் மனத்தில் கொள்ளுதல் முக்கியமானதே.திருவெம்பாவையும், திருப்பாவையும், இறைவன் புகழ் சேர்ப்பதற்கு மார்கழியில்த்தான் கோவில்கள் தோறும் பக்தியுடன் பாடப்படுகின்றன என்பதும் மிகவும் முக்கிய கருத்து என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.எனவே மார்கழியில் இறைவன் புகழ் பாடி எங்களின் வாழ்வு வளம்பெறப் பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment