உ
சிவமயம்
“நால்வகை யோனிகளுள் ஒரு யோனிவாய்ப்பட்டுப் பிறப்பவை யாவை அவையெல்லாம் பசுக்கள்,
அப்படிப் பிறத்தலில்லாதது யாது அது பதிப்பொருள் என்னும் இதுவொன்றே எளிதில் அவ்விரண்டுக்கும் தம்முள் வேற்றுமை அறியும் வண்ணம் நிற்பது.
ஆதலால், வேதம் புராணம் இதிகாசம் முதலிய நூல்களிலே மற்றைத் தேவர்களெல்லாம் அப்படிப் பிறந்திறத்தில் சொல்லப்படுதலாலும்,
சிவபெருமானுக்கு அது உண்டென்பது எங்காயினும் சொல்லப்படாமையாலும்,
அநாதி முத்தசித்துருவாகிய முழுமுதற்கடவுள் சிவபெருமானே என்பது தெள்ளிதிற்றுணியப்படும்.”
- ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் - சிவபுராண படன விதி (இணைப்பில் உள்ள முழு கட்டுரையினை பார்க்கவும்)
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்த 200வது ஆண்டு நிறைவு குறித்த ஐந்து நாட்கள் மாநாடு இறைவன் அருளால் நடந்தேறியுள்ளது. அந்த நிகழ்வுகளை கீழுள்ள பதிவுகளில் காணலாம்.
இந்நிகழ்வுகளை முழுமையாக கேட்டு நாமும், நம் எதிர்கால சந்ததியினர்களும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் காட்டிய வழி நிற்க இறைவனை பிரார்த்தனை செய்வோமாக!
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு முதலாம் நாள்
https://www.youtube.com/watch?
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு இரண்டாம் நாள்
https://www.youtube.com/watch?
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மூன்றாம் நாள்
https://www.youtube.com/watch?
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு நான்காம் நாள்
https://www.youtube.com/watch?
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு ஐந்தாம் நாள்
https://www.youtube.com/watch?
“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”
No comments:
Post a Comment