யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலை அகடமி பட்டதாரியான
திருமதி பத்மரஞ்சனி உமாசங்கரின் மாணவியான செல்வி காயத்ரி செல்வ குமாரின்அரங்கேற்றம் அண்மையில் சிட்னி பரமாட்டா ரிவர்சைடு அரங்கில் நிகழ்ந்தது. திருமதி சாந்தா பொன்னுத்துரையின் வழிகாட்டலின் கீழ் ராமநாதன் அகடமியில் பயின்ற பத்மரஞ்சனி உமாசங்கர் , இவரது மகள் திருமதி வைஷ்ணவி கவுசிகன் ஆகிய நடன ஆசிரியர்களின் வழிகாட்டலில் இந்த அரங்கேற்றம் இனிதே நிகழ்ந்தது. நடன வடிவமைப்பு, மற்றும் நட்டுவாங்கத்தை திருமதி பத்மா ஷங்கரும் ,திருமதி வைஷ்ணவி கவுசிகன் இணைந்து நடத்தினர். நிகழ்ச்சிக்கு அகிலன் சிவானந்தனின் ,குரலோசையும், ஜனகன் சுதந்திர ராஜாவின் மிருதங்கமும் கிரந்திகிரண் முடிகொண்டாவின் வயலினும் இணைந்து சுவை கூட்டின.
தகவல்:




No comments:
Post a Comment