மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
ஞானிகளின் வரலாறு நமக்கென்றும் பெருவியப்பே.பிறப்பும்
வியப்புத்தான். அவர்கள் வாழ்வும் வியப் புத்தான். அவர்களின் செயல்களும் வியப்புத்தான். அவர்களின் ஆற்றலும் வியப்புத்தான். வியப்பினை வரமாக்கி மாநிலத்தில் வந்து சேர்ந்தவர்களாகவே ஞானிகள் விளங்குகிறார்கள். நடந்திருக்குமா என்று ஐயங்கள் எழுந்திடும் வகையில் அவர்களின் வாழ்வையே நாம் உற்று நோக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.அப்படி வியப்புடன் நோக்கும் வண்ணம் ஒருவர் மாநிலத்தில் பிறக்கிறார்.
அல்லும் பகலும் அனைவரதமும் ஆண்டவனையே அகமிருத்தி
வாழ்ந்து வந்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அளவிலா ஆனந்தம் அடைகி றார்கள் பெற்றவர்கள். ஆனால் அவர்களின் அளவிலா ஆனந் தமோ ஒரு மட்டோடு நின்று விடுகிறது.அழகான ஆண்பிள்ளை அ ம்மா, அப்பா என்று மழலை மொழியால் அழைப்பான் என்று ஆவலுடன் பார்த்திருந்த பெற் றாருக்கு பெருத்த ஏமாற்றமே கிடைத்தது. ஆசையுடன் பிறந்த ஆண்பிள் ளை பேசமுடியாத பிள்ளையாக இருப்பதைக் கண்டதும் பெற்றவர்கள் பேதலித்தே நின் றார்கள். எந்தக் கடவுளுக்கு விரதம் இருந்து இந்தக் குழந்தை யைப் பெற்றார்களோ அந்தக் கடவுளின் சன்னதிக்கே பிள்ளையையும் கொண்டு அழுதபடி ஓடினார்கள். ஆண்டவன் சன்னதியில் குழந்தையைக் கிடத்தி " நீ தந்த குழந்தை பேசாதிருக்கின்றான்.அவனைப் பேச வைத்திடு. இல்லாவிடின் நாங்கள் மடிந்து விடுவோம் " என்று பெரும் வேண்டுதலை விடுத்து பக்கமிருந்த கடலை நோக்கி ஓடினார்கள்.
வைதாரையும் வாழவைப்பவன் முருகன் அல்லவா ! அந்த முருகன் சன்னதியில் மனமுருகிடும் அடி யாரின் வேண்டுதல் வீணாகி விடுமா? குரல் கேட்டதும் குமரன் அருள் சுரந்தான்.பேசாமல் இருந்த பிள்ளை பேசியது. பேசியதே அந்தப் பரம்பொருளான முருகனைப் பற்றியே ஆகும். ஐந்து வயதுவரை பேசாதிருந்த அந்தப்பிள்ளை அரன் மைந் தனை அகமிருத்தி " திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா " என்னும் அற்புதமான பொக்கிஷத்தை திருவாய் மலர்ந்தருளுகிறது. பிள்ளை யின் குரல் காதில் கேட்டதும் அள விட முடியா ஆனந்தத்தத்துக்கும் , ஆச்சரியத்
இங்குதான் ஒரு கருத்தை மனமிருத்துதல் யாவருக்கும் அவசியமாகிறது. மூன்று வயதில் ஒரு குழந்தை அந்த முதல்வனையே காணுகிறது. காணு வதுடன் நின்றுவிடாமல் தமிழ் மழையாகவும் பொழிந்து நிற்கிறது. அதுவும் சாதாரண தமிழ் மழை அல்ல ! இனிமைத் தமிழ் மழை ! இங்கிதத் தமிழ் மழை ! செறிவான தமிழ் மழை ! சிந்தனைகள் நிறைந்த தமிழ் மழை ! அநதச் சின்னவயதில் எப்படி அந்தக் குழந்தை அப்படிப் பாடியது என்பதையும் இங்கு மனமிருத்திப் பார்ப்பது உகந்ததாய் இருக்கும் அல்ல வா? அதைத்தான் முன்னைத்தவம் , முன் ஞானம் என்கிறோம். இங்கே ஐந்து வருடங்கள் பேசாதிருந்த பிள்ளை பேசப் புறப்பட்டதும் அதன் வாயி லிருந்து வெளிவந்ததும் தமிழால் ஆகிய தத்துவமே மூன்று வயதில் ஞானம் அன்று ஞானசம்பந்தக் குழந்தைக்கு வாய்த்தது. பேசாதிருந்த பிள்ளைக்கு ஐந்துவயதில் ஞானம் வாய்த்திருக்கிறது.
ஞானம் என்பது எப்பொழுது யாருக்குக் கிடைக்க வேண்டுமோ அப்பொழுதுதான் அது கிடைக்கும் வெளியில் வரும் என்பதுதான் உண்மை நிலையாகும். அப்படித்தான் குமரகுருபரரை நாம் பார்த்திடல் பொருத்தமாய் அமையும். ஐந்து வயதுவரை மோனத்தில் இருந்திருக்கலாம். மெளனம் என்பதுதான் மிகவும் உயர் நிலையாகும். அந்த மெளனத்தில் அந்தப் பரம் பொருளினையே அகமெண்ணியபடி வாய் பேசாதும் இருந்திருக்கலாம். என்று ஒரு சிந்தனையையும் ஆன்மீகத்தில் திளைத்தவர்கள் தெரிவிப்பதும் நோக்கத்தக்கது. அவ்வாறு அவர்கள் தெரிவிப்பதற்குக் காரணம் குமரகுரு பரர் வழங்கிய படைப்புக்கள் எனலாம். இலக்கணம் , இலக்கியம், தத்து
வாய்ந்திறந்ததும் வெளிவந்த " திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா " சாதாரணமானது அல்ல. அதனுடைய உட்பொருளினை உற்று நோக்கும் ஆன் மீக ஆளுமைகள் அதனை " குட்டிக் கந்தபுராணம் " என்று உச்சிமேல் வைத்துப் போற்றியே நிற்கிறார்கள் என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். கந்தபுராணத்தை எங்களின் சொந்த புராணம் என்று கொள்ளும் ஒரு வழக்கம் எங் களிடம் நிறைந்தே காணப்படுகிறது. அந்தப் புராணத்துடன் இந்த குட்டிக் கந்தபுராணத்தையும் கருத்திருத்துவதும் சிறப்பாய் இருக்கும் என்று எண் ணுகின்றேன்.கந்தர் கலிவெண்பாவில் - திருமுருகாற்றுப்படையினையும் காணலாம். அருணகிரி யாரின் திருப்புகழையும் காணலாம் என்று அறிஞ ர்கள் சொல்லுவார்கள். அத்தனை சிறப்புக்களையும் கொண்டு விளங்குவ தால் குமரகுருபரரின் முதல் வெளிச்சமாய் கந்தர் கலிவெண்பா பிரகாசித்துப் பக்தியுலகில் நிற்கிறது என்பதை மனமிருத்தல் வேண்டும். பக்திச்சு வையினையும், தத்துவ செறி வினையும், சொற் சுவையினையும் , பொருட் சுவையினையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது என்பதும் நோக்க த்தக்கது.இதனைப் பாராயணம் செய்தால் வந்தவினையும் ,வருகின்ற வினைகளும் காணாமலே ஓடி விடும் என்பதையும் கருத்திருத்தல் வேண்டும்.
குமரகுருபரர் ஆன்மீக வாதியாய் இருந்தார். அறநெறி காட்டுபவராய் இருந்தார். சமுதாய சிந்தனை மிக்கவராகவும் இருந்தார். தமிழ் இலக் கியப் பரப்பில் முத்திரை பதித்தவராகவும் இருந்தார். அது மட் டுமன்றி தவநெறியில் உயர்ந்தும் தனி ஒழுக்கத்தில் தலை சிறந்தும் அவர் இருந்திருக்கிறார். அவரின் அளவிட முடியாத ஆற்றல்களை யாவ ரும் அறியும் வண்ணம் அவரின் ஆக்கங்கள் அனைத்துமே அடை யாளமாக இருக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான குமரகுருபரர் - தனது குருவைத் தேடியதும் , குருவின் ஆணை யின்படி சைவத்தைப் பரப்பிடப் பயணப்பட்டதும் அதற்காக அவர் பட்ட சோதனைகளும், வேதனைகளும் அவரை உயர் ஞானியாகவே பார்க்கும் வண்ணம் ஆக்கி யேயிருக்கிறது.
மாசிலா மணியான ஒருவர் இவரின் குருவாய் வாய்த்ததே ஒரு சோதனைதான்." உன்னால் பதில் சொல்ல முடியா நிலையில் உன் னை யார் கேள்வி கேட்கிறாரோ , நீ அவ்வேளை சொல்வதறியாது நிற்கிறாயோ அங்குதான் உன் குருவைக் காண்பாய் " என்று அசரீரி அவருக்கு குறிகாட்டி நின்றது. " ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள " என்னும் பெரிய புராணப்பாடலின் அனுபவத்தைச் சொல்லு என்று கேட்க அதற்கு உரிய பதிலினைக் கூறவியலாது மெளனித்து நிற்கி றார் குமரகுருபரர். அப்பொழுது அவர் மனத்தில் " கண்டேன் கு ருவை " என்னும் உணர்வு எழுகிறது. அவரின் அடி பணிகிறார். தொடர்கிறார் அவரிட்ட பணியியை. அந்தக் குருதான் தருமபுர ஆதீனத்தின் தலைமைப் பதவியிலிருந்த " மாசிலாமணித் தேசி கராவார்.
தமிழகத்திலிருந்து வடநாட்டுக்குச் சென்று சைவத்தை நிலை நிறுத்தி , அங்கு சைவத்துக்கென ஒரு மடத்தினை நிறுவியர் என் னும் பெருமையினைப் பெற்றவராக குமரகுருபரர் மட்டுமே விள ங்குகிறார், அதுவும் தமிழராக இருந்திருக்கிறார் என்பதை மனமிரு த்துவதே முக்கியமாகும். குமரகுருபரர் வடநாடு சென்று மடம் அமைத்திட உத்தரவு பெறுவதற்கு அக்காலத்தில் இருந்த இந்துஸ்தானி பேசுகின்ற முகம திய மன்னனனையே நாடும் தேவை இருந்தது. இவருக்கோ இந்துஸ்தானி தெரியாது. அவனுக்கோ தமிழ் தெரி யாது. ஆனால் அவனுடைய தாய் மொழியில் சரளமாய் பேசினார் குமரகுருபரர். எப்படி இது நடந்தது. அதனை விளக்கவே " சகல கலா வல்லி மாலை " சான்றாக வந்து நிற்கிறது. சகலகலாவல்லி மாலை யினைப் பாடியதும் இந்துஸ்தானி அவர் நாவில் அமர்ந்து விடுகிறது.சகலகலைகளுக்கும் அதிபதியான கலைமகள் கருணையினைப் பெற்று விடுகிறார் குமரகுருபரர். சைவத் தமிழர்களுக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகவே சகலகலா வல்லிமாலையினைப் பார்க்கவேண்டும். ஒவ்வொரு சொல்லும் , ஒவ் வொரு பொருளும் , உள்ளத்தில் பக்தியின் உணர்வினை,தமிழின் உணர்வினை, இறையின் உணர்வினை , நிச்சயமாகவே எழச் செய்துவிடும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை எனலாம்.நவராத்திரி என்றதும் முன்னுக்கு வந்து நிற்கும் பக்திப் பாமாலை சகலவல்லிமாலைதான். அதனை மனமுருகிப் பாடுவதனைச் சகல சைவத்தமிழ் மக்களும் பெருவிருப்பமாக்கியே இருக்கிறார்கள் என்பது கருத்திருத்த வேண்டிய தாகும்.
திருவைகுண்டத்தில் பிறந்த குமரகுருபரரை சிற்றிலக்கிய வேந்தர் என்று பாராட்டுவது உகந்ததாகவே இருக்கும். அந்தளவுக்கு சிற்றிலக்கியத்தில் அவர் முத்திரை பதித்தவராகிறார் என்பதுதான் உண்மை என லாம்.அவரின் படைப்பாக ; கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம் , திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசாமி
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடப்பட்ட நிலையில் மீனாட்சி அம்மனே குழந்தையாய் வந்து அமர்ந் திருந்து கேட்டதாகவும் , குமரகுருபரரின் தமிழ்ச் சுவையினைக் கண்டு முத்துமாலையினைக் கழுத்தில் அணிவித்து அருள் பாலித்ததாகவும் ஒரு வரலாறு சொல்லப் படுகிறது. நாத்திகர்கள் இதனை நம்புகி றார்களோ தெரியாது - ஆனால் , இறைவனது ஆசியினைப் பெற்ற தமிழ்ப் புலவராக வெளிச்ச மிட்டுக் காட்டப்படுகிறார் என்பதுதான் இங்கு மனத்திருத்த வேண்டிய கருத்தெனலாம்.இதனால் இவரை வரகவி என்றும் பார்க்கலாம் அல்லவா ! மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழினைப் போற்றாத தமிழ் அறிஞர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு சொற்சுவையும், பொருட்சுவையும் ,
" தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே நறை பழுத்த
துறைதீந் தமிழின் நறுஞ் சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு ஏற்றும் விளக்கே "
......... வஞ்சிக் கொடியே வருகவே !
மலையத்துசன் பெற்ற பெரு வாழ்வே வருக ... வருககவே !
என்னும் பக்தியினைத் தொடும் இப்பாடல் வரிகளை மறக்கத்தான் முடியுமா ? இதனைக் கேட்டதுமே உலகாளும் மீனாட்சியே குழந்தையாக சபைக்கு வந்தாளாம் !
திருக்குறள் பருவத்தே பெற்ற பிள்ளை என்று யாவராலும் ஏற்றிப் போற்றிக் கொண்டாடப்படும் வகை யில் குமமரகுருபரர் அகத்தினின்று வெளிவந்த ஆக்கந்தான் " நீதிநெறி விளக்கம் " நூலாகும். குமரகுரு பரரின் சிந்தனை ஓட்டம் எப்படியெல்லாம் பயணப்பட் டிருக்கிறது என்பதற்கு இந்த நூலே பெருஞ்சான் றாகி வந்தமைகிறது.
நீரில் குமிழி இளமை நிறை செல்வம்
இந்த ஒரு பாட்டே நீதிநெறி விளக்கம் எப்படி இருக்கும் என்பதைக் காட்டி விடுகிறது அல்லவா !
குமரகுருபரரின் அறச்சிந்தனைகள் மட்டுமல்லாது அவரின் கல்விச் சிந்தனைகளும் கருத்திருத்த வேண் டியனவேயாகும் என்பதில் எந்த வித ஐயமுமில்லை என்றே சொல்லலாம். சைவத்தின் காவலனாய் விளங்கினார். தமிழ் இலக்கியத்தில் தனியான இடத்தினைப் பெற்ற வராகவும் விளங்கினார்.சமயத்தின் சாறாக இருந்து சரித்திரமாய் ஆகியவராய் இருந்தாலும் , சமுதாயச் சிந்தனை மிக்கவராகவும் விளங்கி இருக்கிறார் என்பதும் நோக்கத்தக்கதாகும். சமயத்தில் நிற்ப வர்கள் தத்துவங்களைச் சொல்லிவிட்டு நிற்பவர்களாய் இருப்பதைப் பெரும்பாலும் காணுகிறோம். ஆனால் பேசாதிருந்து பின் பேசப் புறப்பட்ட குமரகுருபரரோ தாய்மொழியான தமிழை நேசிக்கிக்கிறார். குருவை நேசிக்கிறார். தமிழ் இலக்கியத்தை நேசிக்கிறார். சமூகத்தை நேசிக்கிறார்.நாத்திகர் போற்றும் வகையில் அவர்களின் அகத்தினாலும் நேசிக் கப்படுகிறார். ஆத்திகரும் , நாத்திகரும், நேசி
No comments:
Post a Comment