கற்பகதருவினைக் கருத்தினில் இருத்துவோம் [ சுவை முப்பத்து ஏழு ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ...... அவுஸ்திரேலியா 

 

  சுவையினைத் தருகின்ற பதனீரைக் காய்ச்சுவதன் மூலமாக


இன் னும் சுவையினைப் பயக்கும் பல கிடை க்கின்றன என்பது மனமிருத்த வேண் டிய முக்கிய கருத்தாகும். பனையிலிருந்து இறக்கிய நிலையில் குளி ர்மையாக இருந்து குடிக்கும் சுவையான பானமாக அமைகின்ற பதனீர் அடுப்பில் வைத்துக் கொதிக்க வைத்து ஆறவிட்ட நிலையிலும் யாவருக்கும் நல்ல இனிப்பான சுவையினை வழங்கியே வருகிறது என்ப தும் நோக்கத்தக்கதாகும்.பதனீர் என்னும் பெய ரினினுக்கு ஏற்றாற் போன்று அது என்றுமே நல்ல பதமாக வும் இதமாகவுமே ஆகியே அமைகிறது.

  பனங்கட்டி என்று சொல்லும் பொழுதே
நாவெல்லாம் ஊறுகிறதல்லவா 
பனங்கட்டிதான் எங்களின் சொந்தமான இனிப்பாக விளங்கி இருக்கிறது. எங்களின் வாழ்வியலோடு இணைந்து நிற்கும் கற்பகதரு வாம் பனையின் கொடைகளில் பனங்கட்டியும் முக்கிய இடத்தினை வகிக்கிறது என்பதை மறுத்துரைத்து விடவே முடியாது எனலாம்.பனங்கட்டியாய்பனை வெல்ல மாய்பனஞ்சீனியாய்பனங்கற் கண்டாய்பனங் காடியாய் என்றெல்லாம் கற்

 பகதரு எமக்கெல்லாம் வழங்கும் நிலையில் பதனீர் என்னும் மூலத்தையே அளித்து நிற்ப தைக் கட்டாயம் மனத்திலிருத்துதல் வேண்டும்.

  பதனீரானது இனிப்பாய் பதமாய் இருப்பதற்குத்தான் அதனை எடுக் கும் பாத்திரங்களுக்குள் சுண்ணாம்பு பூசப்பட்டது. அந்தச் சுண்ணாம்பு பூசப்படு வதால்த்தான் பதனீர் புளிக்காமல் இருக்கிறது. பாதுகாப்பதற்குப் பூசப்படும் சுண்ணாம்பினைத் தரமற்றதாகப் பூசிவிடும் நிலை யில் பதனீர் கெட்டுப் போய் விடுகிறது என் றும் அறிய முடிகிறது. அதேநேரம் சுண்ணாப்பினை அளவுக்கு அதிகமாகப் பூசுவதாலும் பதனீர் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உண்டாகிறதாம் என்றும் அறிந்திடக்கூடியதாக இருக்கிறது.சுண்ணாம்பு பூசுவதால் த்தான் பதனீர் பக்குவமாய் கிடைக்கிறது. ஆனால் அந்தச் சுண்ணா ம்பே பதனீரி னைக் காய்ச்சிப் பனங் கட்டி செய்யும் வேளை - பனங்கட்டி யில் காரத்தன்மையினையும்கருநிறத்தையும் கொடுப்பதோடு சுவை யினையும் கெடுத்து விடவும் கூடியதாக இருக்கிறதாம் என்பது முக்கிய கருத்தாகும். இதனால் பதனீரில் இருக்கும் சுண்ணாம்புத் தன்மையினை நீக்குவது - பனங்கட்டி உருவாக்கத்தில் முக்கியமாகிறது. அதனால் பதனீ ரைக் காய்ச்சும் பொழுது சுண்ணாம்பின் தாக்கத்தை அகற்றுவதற்காக பொஸ்போரிக் அமிலம் அல் லது சிற்றிக் அமிலம் பயன்படுதப்படும் நிலை ஏற்படுகிறது.

  பனங்கட்டி என்பது நீண்ட வரலாற்றினைக் கொண்டதாகவே


இருக்கிறது. தமிழ் நாட்டிலும் பனையுண்டு. அங்கும் பதனீர் எடுக்கப்படுகிறது. அங்கும் பனங்கட்டியும் செய்யப்படுகிறது. பனங்கட்டி செய்வது என்பது குடிசைக் கைத்தொழிலாகவே ஆரம்பமாகியது. பின்னர்தான் அதில் நவீனங்கள் புகுந்து கொண்டன. இலங்கையைப் பொறுத்தளவில் பனங்கட்டி செய்யும் தொழிலானது குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத் திலே மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்னராகவே ஆரம்பிக்கப்ப ட்டிருக்கிறது என்று வரலாற்றால் அறியக் கூடியதாகவே இருக்கிறது என்னும் செய்தியை யாவரும் மனமிரு த்திவது அவசியமாகும்.குடிசைக் கைத் தொழிலாக ஆரம்பிக்கப்பட்ட பனங் கட்டித் தொழிலானது சிறப்புறவே நடைபெற்றதாகவும் அறியமுடிகி றது. அதுமட்டுமல்ல இந்தியாவுக்கும்ஏனைய நாடுகளுக்குமே ஏற்றுமதியும் செய்யப்பட்டதாம். இலங்கை யின் ஏனைய பகுதிகளுக்கும் அனுப்பப்பட்ட தாம். குடிசைக் கைத்தொழிலாக இருந்தும் மிகவும் சிறப்பா கவே அக்கால த்தில் யாழ்ப்பாணத்தில் பனங்கட்டி உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என் னும் செய்தியானது எமக்கெல்லாம் பெருமையாய் இருக்கிறதல்லவா!

 பாரம்பரிய முறையில் பதனீரை வடிகட்டப்


பன்னாடைகளும்துணிகளும் பயன்படுத்தப்பட்டன. பின்னர் அரிதட்டும் பயன்பாட்டுக்கு வந் திருக்கிறது. பனையின் பாளையிலிருந்து பதனீர் எடுக்கப்படுவதால் அதில் தூசிகள்துரும்புகள்பனம்பூக்கள்தேனீக்கள்பாளைச்சேர்வைகள் ,கலக்கும் நிலை தவிர்க்கமுடியாததா கும். இவைகள் அனைத்தையும் அகற்றிய பின்னர்தான் காய்ச்சுவதற்கு பதனீர் பதமாக வந்து நிற்கும்.   இவைகள் அனைத்துமே வடிகட்டப்படுவதால் அகற்றப்பட்டு -  நல்ல சுத்தமான பதனீர் காய்ச்சுப் பாத்திரத் தில் ஊற்றப்படுகிறது.

  ஆரம்ப காலங்களில் வீடுகளில் சாதாரண அடுப்புகளில்


மண்பானை   களில்வைத்தே காய்ச்சப்பட்டது. பின்னர் அலுமினியம் பாத்திரம்தா ச்சிச்சட்டிகள், பதனீர் காய்ச்சுப் பாத்திரங்களாக அமைந்து விட் டன. 
வீட்டிலே பதனீரை அடுப்பில் வைத்துச் சூடாக்கும் பொழுது அது பொங் கிவருவது என்பது நடந்த படியேதான் இருக்கும். அப்படி வருகின்ற வேளை அதனைத்தணிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் தேங்காய் எண்ணையினையும் தமிழகத்தில் ஆமணக்கு விதையின் மாவி னையும் பயன்படுத்தினார்கள். இவைக ளைக் கொதித்துப் பொங்கி வருகின்ற பதனீரில் போடுவதால் அதன் ஆவேசம் அடங்கி விடுகிறதாம். இல்லாவிட்டால் பொங்கி வீணாகிவிடும் நிலை ஏற்பட்டு விடும். அதனைத் தடுப்பதற்கு அப்பொழுது கையாளப்பட்ட கைத்தொழில் நுட்பமாகவும் இதனைக் கொள்ளலாம் அல்லவா ! பொங்கி வரும் பதனீர் பாத்திரத்துக்கு அருகிலிருந்து அகப்பையினைப் பயன்ப டுத்தி யும் சமாளிப்பார்களாம் என்றும் அறியமுடி கிறது.

  கொதித்துவரும் பதனீர் சரியான பதத்தில் வந்தவுடன் அதனை


இறக்கி விடுவார்கள். அது பாணியாகவே இருக்கும். அதனை உரிய பாத்திரத்தில் சேமித்து வைப்பார்கள். இந்தப் பாணியைக் கொண்டுதான் பனங் கட்டி செய் யப்படுகிறது. பனங்கட்டி செய்வதற்குத் தேவையான பாணியை எடுத்து விட்டு மிச்சமுள்ள பாணி " பாணியாகவே " விற்பனையும் செய்யப்பட்டது. அதனையும் பலர் நாடி நின்றனர் என் பதும் நோக்க த்தக்கதாகும்.இவ்வாறு பெறப்படும் பாணியினைப் புகையிலையினைப் பதப்படுத்துவதற்கும் பயன்படுத்தி னார்கள். யாழ்மண் ணின் மக்கள் சிலர் பதனீர் பாணியைக் கொண்டு குடிசைக் கைத்தொழிலாகப் பனங் கட்டியை செய்து விற்பனையில் ஈடுபட் டார்கள். அது தான் அவர்களின் வாழ்வாதாரமான தொழிலாகவும் அமைந் திருந்தது என்பது கருத்திருத்த வேண்டியதேயாகும்.

  பதனீர் பாணியினை உடனடியாக பனங்கட்டிக்குப் பயன்படுத்திவிட இய லாது. அதனை பனங்கட்டிப் பதத்துக்கு


மீண்டும் ஒருதடவை வரு வதற் காகச் சூடாக்க வேண்டி வருகிறது. சூடாகிவரும் பாணியின் இறுக்கத்தை அவதானித்து பின்னர் அதனை இறக்கி - பனை ஓலைக் குட்டான்களிலோ அல்லது அல்லது தங்களுக்குப் பொருத்தமான விதத்திலோ அந்தப் பத மான  பாகினை விடுவார்கள். அப்படி விடப்பட்ட அந்தப் பாகு ஏறக்குறைய பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் இறுகிவிடும். இறுகிய நிலையில் நமக்குக் கிடைப்பதைத்தான் " பனங்கட்டி " என்று யாழ்ப்பாணத்தில் அழை க்கின்றோம்.தமிழ் நாட்டில் " பனை வெல்லம் " என்று அழைக்கிறார்கள். அதே வேளை " கருப்பட்டி " என்னும் பெயராலும் அழைக்கப்படுகிறது என்பதும் நோக்கத்தக்கதாகும்.

  பனை ஓலைகளால் எவ்வளவு சிறிய அளவில் செய்ய முடியுமோ அந்த ளவில் குட்டான்கள் செய்யப்ப ட்டன. அதேவேளை பெரிய அளவிலும் குட்டான்கள்  செய்யப்பட்டன. பெரிய குட்டான்களில் வருகின்ற பனங்கட் டியை " ஆனைப் பனங்குட்டான் " என்று


பெயரிட்டு அதற்கு பெரிய மதிப்புக் கொடுப்பதும் யாழ்மண்ணில் இருந்திருக்கிறது என்பதைக் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். யாழ்ப்பாணத்திலி ருந்து கொழும்புக்குப் போகிறவர்கள் நிச்சயமாகப் பனங் குட்டானைத் தங்களுடன் எடுத்துக் கொண்டே செல்லுவார்கள். அதுவும் ஆனைப் பனங்குட்டான் நிச்சயம் இடம் பெற்றி ருக்கும். யாழ்ப்பாணத்துப் பனங் குட்டானுக்குக் கிழக்குமாகாணத்தில் பெரு வரவேற்பு இருந்தது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் புகை யிலையினை எடுத்துக்கொண்டு கிழக்கு மாகாணம் வரும்பொழுது பனங்குட்டானையும் உடன் கொண் டுவருவார்கள். புகையிலை வியாபாரம் செய்வதற்கு எப்பொ ழுது யாழ்ப்பாண

வியாபாரிகள் வருவார்கள் என்று எதிர் பார்த்த ஒரு கால மும் இருந்தது கிழக்கு மாகாணத்தில் என்பதை நான் அறிவேன். என்னு டைய சிறிய வயதில் கிழக்கு மாகாணத்தில் வாழும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுது புகையிலை கொண்டு வருகின்ற யாழ்ப்பாண முதலாளிகள் சிலர் எங்கள் வீட்டில் தங்கியது இன்னுமே நினைவில் இருக்கிறது. அவர் கள் வரும் பொழுது பனங்குட்டான்களையும் கட்டாயம் உடன் கொண்டுவ ருவார்கள். அவர்கள் வாகனங்களில் வந்து இறங்கியதும் யாழ்ப்பாணத்துப் பனங்குட்டானை

வாங்குவதற்கென்று ஒரு கூட்டமே அங்கே கூடிவிடும். அப்படிக் கூடும் கூட்டத்தார் ஆனைப் பனங்குட்டானைக் கண்டதும் அவ ர்களின் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும்.

  பனங்கட்டி என்றதும் புலவர்கள் வந்து நிற்பார்கள். நாங்கள் நாவினால் பனங்கட்டியைச் சுவைப்போம். ஆனால் புலவர்களோ தங்களின் அகத்தி னால் சுவைத்து அதனை உணர்வுடன் கவிதைகளாக வெளிப்படுத்தி நிற் பார்கள். அதனால்  புலவர் போற்றும் பனங்கட்டி என்றும் எடுக்கலாம் அல்லவா !

 

          தாலமெனும் பனையாற் பிறந்த வென்னைத்

          தம்பி கங்கச்சி பனங்கட்டி யென்பார்

          தானியம் யாவுக்கும் மாவுக்குமே யேனைத்

          தாங்கியருங் காலத்தில் வாங்கியுண்பீர்

 

          கஞ்சியொடு கூழ்பிட்டுக் களிவகைக்

          குதவுவேன் கனத்த பலகார மெல்லாம்

          தஞ்சமொடு எந்தனைச் சேர்த்துண்ண

          மிகவுருசி சமிபாடு மதிகமுண்டு

          பஞ்சமது என்கிறீர் பனை தென்னை

          யுங்களுடை பக்கத்திலே யிருக்க

          வஞ்சமதை விட்டு வழி தேடிடும்

          விதேசியூண் வாய்க்குமோ எந்தநாளும்

 

        சீனியிலும் வெகு மானிய தாகவே

        திகழ்ந்து திரிவதல்லாத சேதமின்றி

        ஹானிதரும் சலரோகம் போலும் பிணி

        யானதற் கிடங்கொடேன் நானேயறி

 

        கடித்துக் குடிக்கவும் கரைத்துப் பருகவும் கண்ட கண்ட

        படிக்குப் பலகார பட்சணம் பற்பல பண்ணுதற்கு

        இடித்துத் துவைத்து எவ்விதத் தீனுடனும் உண்ணுதற்கும்

        படிக்குட் சிறந்தது பல்நோய் தவிர்க்கும் பனங்கட்டியே

       

நாங்கள் பனங்கட்டியைப் பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் மேலாக இந்தப் பாடலைத் தந்த யாழ்ப்பா ணத்துப் புலவர் பொன்னாலை கிருஷ்ணபிள்ளை பனங்கட்டியைப் பார்த்த விதந்தான் புலவர் போற்றும் பனங்கட்டி என்னும் நிலைக்குப் பொருத்தமாய் அமைகிறதல்லவா !

    யாழ்ப்பாணத்தில் பனங்கட்டி செய்வது குடிசைக் கைத்தொழிலாகப் பல இட ங்களில் நடைபெற்று வந்திருக்கிறது. அந்தவகையில் - வடமராட்சிவலிகாம ம்வடக்குபச்சிலைப்பள்ளிமன்னார் ஆகிய இடங்கள் வந்து அமைகின்றன.குடிசைக் கைத்தொழிலாகப் பனங்கட்டி செய்யும் பொழுது அங்கு ஒழுங்கான சுகாதார முறைகள் பேணப்படாதிருந்திருக்கிறது என்றும் அறியக் கிடக்கிறது. என்றாலும் அப்படியான தொழிலில் ஈடுபட்டவர்களின் வாழ்வாதரத்துக்கு அதுவே துணையாக இருந்திருந்திருக்கிறது என்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதேயாகும்.

  யாழ்ப்பாணத்தில் குடிசைக் கைத்தொழிலாக நடைபெற்றதுபோலவே தமிழ் நாட்டிலும் நடைபெற்றிரு க்கிறது. ஆண்களும் பெண்களும் இத்தொழில் ஈடு  பட்டு தங்களின் வருவாயினுக்கு உரிய ஒரு வழி யாகவே பக்குவமாய்பார்த் திருக்கின்றார்கள் என்று அறிந்திடக்கூடியதாக இருக்கிறது. தமிழகத்தில் தூத் துக்குடிதிருநெல்வேலிகன்னியாகுமரிஆகிய தென் மாவட்டங்களி லும்வேலூர்,சேலம் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும்,பனங்கட்டியானது முக்கிய குடிசைக் கைத்தொழிலாக விளங்கியிருக்கிறது. திருநெல்வேலிக்கு அருகில் இருக்கின்ற உடன்குடி என்னும் ஊரிலும்தூத்துக்குடிக்கு அருகி லுள்ள வேம்பார் என்னும் ஊரிலும் பனங்கட்டி பெருமளவில் உற்பத்தி செய்ய ப்படுகிறது என்பது நோக்கத்தது.

  திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் உடன்குடி பகுதியை சுற்றி நிறையவே பனைகள் காணப்படுகி ன்றன.இங்குள்ளவர்கள் பனங்கட்டி உற்பத்தி யினைப் பெருமளவில் செய்து வருகிறார்கள். தமிழ் நாட் டிலே பல இடங் களில் பனங்கட்டி செய்யப்பட்டாலும் உடன்குடியில் செய்யப்படும் பனங் கட்டி தனியான இட த்தினைப் பெற்றுவிட்டது. இதன் சுவை மற்றைய இட ங்களில் செய்யும் பனங்கட்டிகளைவிடச் சிறப் பாக இருப்பதாக மக்கள் சொ ல்லுகிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.இதனால் உடன்குடி பன ங்கட்டிக்கு நல்ல சந்தை வாய்ப்பும் வாய்த்திருக்கிறதாம்.

   மதுரை மாவட்டத்தில் - பேரையூர் வட்டாரத்திலுள்ள மேலைப்ப ட்டிலட் சுமியபுரம்தாதாங்குளம்தும்ம நாயகன்பட்டிமற்றும் அதன் அருகிலுள்ள சில கிராமங்களையும் சேர்ந்த சுமார் இராண்டாயிரம் பேர் தங்களின் குலத் தொழிலாகவே ஆக்கி  குடிசைக்கைத் தொழிலாகவே பனங்கட்டி செய்துவருகிறார்கள். இப்பகுதிகளில் ஏறக்குறைய நாற்பதாயிரம் பனைகள் இருக்கின் றன. இங்குள்ளவர்கள் பனைகளைக் குத்தகைக்கு எடுத்தே பதனீரைப் பெற் று பனங்கட்டி செய்வதில் ஈடுபடுகிறார்கள் என்று அறியக்கூடியதாக இருக்கிறது.இவர்களுக்குத் தகுந்த உதவிகள் கிடக்காதிருக்கிறது என்றும் செய்தி கள் வாயிலாக அறியமு டிகிறது.

No comments: