“ விநோதய சித்தம் “ --- தமிழ்த் திரைப்பட விமர்சனம் .


நாயக நடிகர்கள் :              தம்பி ராமையா, P. சமுத்திரகனி.

கதை :                                   ஸ்ரீவத்சன்

திரைக்கதை, வசனம் :     ஸ்ரீவத்சன், விஜி, சமுத்திரகனி.

இயக்கம் :                             P. சமுத்திரகனி.    

 

நீண்ட கால வரலாற்றைக் கொண்டு நடைபோடும் தமிழ்த் திரைப் படங்களின் வரிசையில் எத்தனையோ தரமான திரைப்படங்களைக் கண்டு களித்திருக்கிறோம். அவ் வரிசையில் தற்போது வெளிவந்துள்ள மிகச் சிறந்ததொரு தரமான திரைப்படமே “ விநோதய சித்தம் “ என்ற திரைப்படமாகும்.

 

எப்பேர்ப்பட்ட கதையமைப்பைக் கொண்ட திரைப்படமாக இருந்தாலும் வழமையானஒரே பாங்கில் அமைந்த திரைப்படங்களையே அதிகமாகப் பார்த்து வருகிறோம்.  ஒரே மாதிரியான கதைவன்முறைஅறநெறி தவறிய அரசியல்காதல்இயல்பான வாழ்வின் நடைமுறைகளுக்கு ஏற்பில்லாத கருத்துகள்இளையவர்களையும் சமுகத்தையும் தப்பான வழிக்கு இட்டுச் செல்லும் காட்சிகள் என்றுஅரைத்த மாவையே திருப்பித் திருப்பி அரைக்கின்ற செயலாகவே பெரும்பாலான திரைப் படங்கள் தயாரிக்கப் பட்டு வருகின்றன என்ற உண்மையை எவரும் மறுப்பதற்கில்லை.

 

அவ்வகைக்குள் அகப்படாமல்முற்றிலும் மாறுபட்டபுதியதொரு கதைக் கருவுடன்சிந்தனையைத் தூண்டிவிட்டு “ இதுதான் மனித வாழ்க்கை “ என்று உணர வைக்கின்றபுரட்சிகரமான ஒரு தமிழ்ப் படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது என்று தைரியமாகப் பெருமையோடு சொல்லக் கூடியதாக வுள்ளது.

 

மாறுபட்ட கதை என்று சொல்லும் போதுஇத் திரைப் படத்தின் கதையானது புதியதொரு கதைக்கரு என்பதையும்கற்பனை என்றாலும் முழுக்க முழுக்க மனித வாழ்வில் அன்றாடம் நடைபெறுகின்ற உண்மையான சம்பவங்களை அப்படியே எந்தவிதமான பொய்க் கலப்புகளுமின்றி எடுத்துக் காட்டுகின்ற ஒரு புதுமையான விளக்கம் என்பதையும் குறிப்பிடுதல் வேண்டும்.

 

மனித வாழ்வுக்குத் தேவையான கணக்கற்ற தத்துவ விளக்கங்களும்வழிகாட்டல்களும் சைவசித்தாந்தத்தில் நிறைந்துபுதைந்து கிடக்கின்றன. இவற்றில் இரு தத்துவ உண்மைகளையே இத்திரைப்படக் கதைக் குழுவினர் மையப் பொருளாக எடுத்துக் கொண்டுஇதன் கதைக் களத்தை அமைத்திருக்கிறார்கள் என்பது சைவசித்தாந்தம் அறிந்தவர்களுக்கு உடனே புரிந்து விடும் என்தில் ஐயமில்லை. இதற்கான விளக்கங்களைப் படத்தை நுணுக்கமாகப் பார்க்கும் போது புரிந்து கொள்ளலாம் .

 

சைவசித்தாந்தத்தில் முப்பத்தாறு ( 36 ) தத்துவங்கள் தெளிவாகப் பேசப் படுகின்றன. இவற்றுள் “ வித்தியா தத்துவங்கள் ஏழு “ எனக் கூறப் பட்டுள்ளது. காலம்நியதிகலைவித்தைஅராகம்புருடன்மாயை ஆகியவையே அவையாகும்.

அவற்றுள் முதலாவதான “ காலம் “ என்ற தத்துவத்தின் விளக்கமாகவே இத்திரைப் படத்தின் கதைக் களம் அமைந்துள்ளமை  சுவையானபுதுமையானவியப்பான செய்தியாகும். சைவசித்தாந்தக் கருத்துகளை மையமாகக் கொண்டும் திரைப்படம் எடுக்க முடியும் என்பதற்கு இத் திரைப் படமே தக்க சான்றாகும்.

 

கதைக் களத்துள் நுழைவதற்கு முன்பு“ காலம் “ என்ற தத்துவத்தை மேலோட்டமாகவேனும் அறிந்து கொண்டாலே திரைப்படத்தின் கதையை விளங்கிக் கொள்ள முடியும்.

 

“ இவ்வுலகில் ஓரான்மா மனிதப் பிறப்பெடுத்து, போகங்களை நுகருகின்ற போதுஅப் போகங்களைக் கால பேதங்களினால் வரையறை செய்வதே காலம் என்ற வித்தியா தத்துவமாகும் “ என்பது சைவசித்தாந்தம் தருகின்ற விளக்கமாகும். அதாவது மனித வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும்மிகச் சிறிய அசைவுகளையும் காலம் என்ற ஆற்றல் நடாத்திச் செல்கின்றதே யொழிய. மனிதன் தானாகச் செய்யக்கூடிய செயல்கள் ஏதுமில்லை என்பதே இத் தத்துவத்தின் பொருளாகும். இக் கருத்தினை மிகத் தெளிவாக,சுவையாக விளக்கமாகஅழகாகஆழமாக இத்திரைப்படம் எடுத்து விளக்குகின்றமை மிகச் சுவாரசியமாகவுள்ளது.

 

இப்போது திரைப்படத்திற்குள் நுழைவோம். கதாநாயகனாக ‘ பரசுராம் ‘ (தம்பி ராமையா) என்பவரும்இணைக் கதாநாயகனாக, காலம் ( TIME ) என்று தன்னைத் தானே அறிமுகஞ் செய்து கொள்ளும் சமுத்திரகனியும் வருகிறார்கள்.

 

பரசு ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல உத்தியோகத்தில் இருப்பவர். வீடுகார்நல்ல சம்பளம் என்பன போன்ற வசதிகளோடு வாழ்பவர். அவருக்கு நல்ல மனைவியும்ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். தனது வேலைஉழைப்புகுடும்பத் தலைவன் என்ற நிலைகளில் மேலான எண்ணமுடையவர். தனது சிறந்த வாழ்வுக்கு முழுக்க முழுக்கத் தானும்தனது கடின உழைப்பும்தனது திறமைகளும் சிந்தனைகளுமே காரணம் என்று நம்பிக் கொண்டிருப்பவர். தனது விருப்பப் படியே மனைவிபிள்ளைகள் வாழ வேண்டும் என்ற கொள்கையுடையவர்.

 

இத்தகைய குணாதிசியங்கள் கொண்ட பரசுகார் விபத்தொன்றில் உயிரிழந்து விடுகிறார். அப்போது அவரது உயிர் (அவரது உடலே தான் என்ற  எண்ணப்படி ) காராக்கிருக இருளில் கிடந்து தவிக்கிறது. பரசு தான் இறந்தவிட்டதாக எண்ணவேயில்லை. தன்னிலை புரியாமல் புலம்புகின்ற போது ஒருவர் வந்து பேசுகிறார். பரசுவுக்கு நடந்ததைக் கூறிஅவர் மருத்துவமனையில் பிணமாகக் கிடப்பதையும் காட்டுகிறார். “ யார் நீ ? “ என்ற பரசுவின் வினாவிற்கு “ எப்போதும் Time இல்லை என்று சொல்வீர்களே, அந்த Time, காலம் நான்தான் “ என்று அவர் விடையளிக்கிறார்.

 

இதனால் மேலும் குழம்பிப்போன பரசு “ முடியாது, இதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. நான் நன்றாகவே, திடமான உடலோடு இருக்கிறேன் “ என்று அலறுகிறார். அதற்கு காலம் “ அது உங்களுக்கு ! எங்களைப் பொறுத்தவரை நீங்கள் வெறும் ஆன்மாதான் “ என்று காலம் ( சமுத்திரகனி) பதிலளிக்கிறது . அதற்குப் பரசுராம் “ இல்லை, எனக்குப் பல கடமைகள் பாக்கியிருக்கின்றன. நான் இல்லையென்றால் என் மனைவி பிள்ளைகளின் நிலை என்ன ? மனைவி நோயிலிருந்து எப்படிச் சுகமடைவாள் ? எனது பிள்ளைகளுக்கு யார் திருமணம செய்து வைப்பார்கள் ? “ என்று அங்கலாய்க்கிறார். அதற்குக் காலம் “ அவற்றைச் செய்ய நீங்கள் தேவையில்லை, அவை தானாகவே நடக்கும். இந்த உலகில் ஒருலருக்காக இன்னொருவரில்லை “ என்று சொல்கிறது.

 

இன்னும் திருப்தியடையாத பரசுராம் “ எனக்கு ஏன் இப்படி நடந்தது ? என் மனைவி பிள்ளைகளின் காரியங்கள் எப்படி நடக்கும் ? என்று விழிக்கிறார். அதற்குக் காலம் அமைதியாகப் பதில் சொல்கிறது,

“ அது கணக்கு ! அவரவர் காரியங்கள் அவரவர் கணக்கின்படி நடக்கின்றன “

( இங்கு “ கணக்கு “ என்றது சைவசித்தாந்தம் கூறும் “ நியதி “ என்ற தத்துவத்தையே குறித்து நிற்கிறது )

 

பிறகு பரசுராம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதற்கிணங்ககாலம் அவருக்கு 90 நாட்களுக்கு வாழ்வதற்குச் சந்தர்ப்பம் கொடுக்கிறது. அதனால் பரசுராமின் பூதவுடல் மீண்டும் உயிர் பெற்று எழுகிறது.

 

மீண்டும் வாழ்க்கையை வாழத் தொடங்கிய பரசுராம்தனது வழமையான அலுவல்களைத் தொடர்ந்து செய்கிறார். அவர் மேற்கொள்ளும் அனைத்துக் காரியங்களையும் அவர் செய்ய முயன்றாலும், காலத்தின் கட்டளைகளின் படியே அவரது வாழ்க்கை நிகழ்வுகள் நடைபெறுகின்றனவே தவிரஅவரது விருப்பத்தின்படி எதுவும் நடைபெறவில்லை என்பதைப் படத்தின் பிற்பகுதி சிறப்பாகக் காட்டிக் கொண்டு செல்கிறது. அதற்குச் சான்றாகப் பரசுராமுடனேயே காலம் ( சமுத்திரகனி ) ஒரு நண்பரைப் போல எப்போதும் கூடவே இருக்கிறார் என்பதாகக் காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளன.

 

பரசுராம், தன்னாலேயே நிறைவேற்றி வைக்கப்பட வேண்டும் என்று நினைத்திருந்த கருமங்கள் யாவும் ---  அவருடைய பதவியுயர்வுமனைவியின் உடல் நலம்பிள்ளைகளின் திருமணங்கள் போன்றன --- அவரது சொந்த முயற்சிஉழைப்பு ஏதுமின்றித் தானாகவே நடந்தேறுகின்றன. அவற்றை அவரவர் கணக்கின்படி காலமே நடத்தி வைத்து விடுகின்றது. அவர் நினைத்தது போலஎந்தக் காரியங்களையும் அவர் நடாத்தி வைக்கவே இல்லை.

இதனூடாகமனித வாழ்வின் அனைத்து நிழ்வுகளும் காலம்நியதி ஆகிய கண்ணுக்குத் தெரியாத தத்துவங்களினால் நடாத்தி வைக்கப்படுகிறன என்ற பேருண்மையும்சைவசித்தாந்தம் கூறும் காலம்நியதி ஆகிய வித்தியா தத்துவங்கள் இத்திரைப் படத்தின் கதைக் களமாக அமைந்துள்ளன என்ற தகவலும் பெறப்படுகின்றன.

 

இறுதியாக, 90 நாள்கள் நிறைவடையும் போதுபரசுராம் மரணமடைகிறார். அவரொடு காலமும் பேசிக் கொண்டு வருகிறது. வாழ்வின் மர்மங்களை எல்லாம் உணர்ந்து கொண்ட பரசுராம் காலத்திடம் தஞ்சமடைகிறார்.

“ நான் பரிசுத்தமாயிட்டன், நாம போகலாம்  “ என்று பரசுராம் சொல்ல, “ இப்ப நாம போயிட்டுத்தானே இருக்கம் “ என்று காலம் சொல்வது நெகிழ வைக்கிறது.

மேலும் தான் சொர்க்கம் போவதாக எண்ணிய பரசுராம் “ அங்க நான் தமிழ்ல பேசுறன், நீங்க மொழி பெயர்த்துச் சொல்லுங்க என்ன ! “ என்று கூற, அதற்குக் காலம் சொல்லும் பதில் சிந்தனையைத் தூண்டி, சொர்க்கம் எப்படியிருக்கும் என்பதை எமது மனக்கண் முன்னால் கொண்டு வந்து விடுகிறது.

“ சொர்க்கத்தில மொழியே கிடையாது. அங்க சாதிமத பேதம் எதுவுமே கிடையாது. எங்களுக்கு எல்லாமே ஒண்ணுதான் “

 

உடனே பரசுராம் “ அப்ப நரகத்தில ? “ என்று கேட்கஅதற்குக் காலம் மிக அமைதியாகப் பதில் சொல்கிறது இப்படி,

“ நாம அங்கிருந்துதானே வர்றோம் ! “

 

இத்துடன் படம் நிறைவடைகிறது. அருமையானஆரவாரமில்லாதபடிப்பினை ஊட்டுகின்ற, குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். தவறாமல் பார்த்து விடுங்கள் !

 

நன்றி

சைவப்புலவர் கல்லோடைக் கரன்.

24/10/2021.

 


No comments: