இலங்கைச் செய்திகள்

புனித பகவத் கீதையின் முதற்பிரதி பாரத பிரதமரிடம் வழங்கி வெளியீடு

ஸ்ரீலங்கா - கனடா பாராளுமன்ற நட்புறவு குழுவின் தலைவராக சுரேன் ராகவன்

யாழ். வைத்தியசாலை படுகொலை; நினைவுத்தூபி விரைவில்

முகமாலையில் 316 ஏக்கர் காணிகளை விடுவித்து மீள் குடியேற்ற நடவடிக்கை

ரிஷாட் பதியுதீனின் விடுதலையை வரவேற்றுள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியம்

மகிந்தவின் கோட்டையிலும் வெடித்தது போராட்டம் அதிரும் இலங்கை


புனித பகவத் கீதையின் முதற்பிரதி பாரத பிரதமரிடம் வழங்கி வெளியீடு

இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலைய திறப்பு நிகழ்வுக்காக நேற்று அங்கு சென்ற அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, இலங்கையில் மும்மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட பகவத் கீதையின் முதற்பிரதியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கிவைத்த போது...

புத்தசாசன சமய, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் பதிப்பிக்கப்பட்ட பகவத்கீதையின் முதற்பிரதியை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (20) இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்.

கெளதம புத்தர் பரிநிர்வாணமடைந்த உத்திரபிரதேசத்திலுள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ( 20 ) திறந்து வைத்தார். குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தின் திறப்புவிழா, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 100 க்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள் மற்றும் 12 முக்கிய பிரமுகர்களுடன் புத்தரின் புனித நினைவுச்சின்னங்களை கொண்டு சென்ற விமானம் தரையிறங்கியதன் மூலம் ஆரம்பமாகியது.

இந்த நிகழ்வின் விசேட அம்சமாக, இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே 2,500 வருடங்களாகக் காணப்படும் நட்புறவின் அடையாளமாக, பாரத தேசம் இந்த உலகிற்குத் தந்த மிகப் புனிதமான நூலான பகவத் கீதை வெளியீட்டின் முதற் பிரதி, இலங்கயின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இந்தியப் பிரதமர் மோடிக்கு

நன்றி தினகரன் 
ஸ்ரீலங்கா - கனடா பாராளுமன்ற நட்புறவு குழுவின் தலைவராக சுரேன் ராகவன்

ஸ்ரீலங்கா - கனடா பாராளுமன்ற நட்புறவு குழுவின் தலைவராக சுரேன் ராகவன்-Suren Raghavan

ஸ்ரீலங்கா - கனடா பாராளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவராக கலாநிதி சுரேன் ராகவன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (21) பிற்பகல் பாராளுமன்றத்தில் இது தொடர்பான தெரிவு இடம்பெற்றது.    நன்றி தினகரன் 

யாழ். வைத்தியசாலை படுகொலை; நினைவுத்தூபி விரைவில்

யாழ். வைத்தியசாலை படுகொலை; நினைவுத்தூபி விரைவில்-Dr T Sathiyamoorthy-Jaffna Teaching Hospital

இந்திய இராணுவத்தினரால் இலங்கையின் வடபகுதியில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக விரைவில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவத்தினரால் வடக்கில் படுகொலை செய்யப்பட்டோரின் உறவுகளால் உயிரிழந்தோரின் நினைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் ஒரு தூபி அமைப்பதற்கு தமக்கு இடம் ஒதுக்கித் தருமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த விடயம் தொடர்பில் தமது வைத்தியசாலையின் பல்வேறுபட்ட குழுக்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் புதிய வசதி ஒன்று செய்யப்பட்டு ஒரு பொருத்தமான இடம் தெரிவு செய்யப்பட்டு நினைவுத்தூபி அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 
முகமாலையில் 316 ஏக்கர் காணிகளை விடுவித்து மீள் குடியேற்ற நடவடிக்கை

Land Releasing-Muhamalai-Kilinochchi

கிளிநொச்சி முகமாலையில் கண்ணிவெடி அகற்றப்பட்ட மேலும் 316 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களை மீள் குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கிளிநொச்சி முகமாலை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதுடன் வாழ்வாதார பயிர் செய்கை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த அடிப்படையில் முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்ட 316 ஏக்கர் காணியை பொதுமக்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பாக, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ சார்பாக, கிராமிய வீடமைப்பு மற்றும் கட்டுமாணத்துறை இராஜாங்க அமைச்சின் மூத்த ஆலோசனை அலுவலர் லியனகே, அமைச்சின் பணிப்பாளர் பிறேமச்சந்திரன் ஆகியோர், விடுவிக்கப்படவிருக்கும் பிரதேசத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இதன்போது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயராணி பரமோதயன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஆகியோர் கள விஜயத்தினை மேற் கொண்டு Hallo Trust உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்.

முகமாலை பகுதியில் 316 ஏக்கர் கண்ணிவெடியகற்றப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் மீளக் கையளிக்கும் நிகழ்வுக்கான ஏற்பாடு தொடர்பாக மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர், Hallo Trust நிறுவன உயரதிகாரிகளுடன், கிராமிய வீடமைப்பு அமைச்சின் விசேட அலுவலர் லியனகே, அமைச்சின் பணிப்பாளர் பிறேமச்சந்திரன், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஆகியோர் கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

(பரந்தன் குறூப் நிருபர்) - நன்றி தினகரன் 

ரிஷாட் பதியுதீனின் விடுதலையை வரவேற்றுள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியம்

ரிஷாட் பதியுதீனின் விடுதலையை வரவேற்றுள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியம்-Rishad-Bathiudeen-Inter Parliamentray Union

“பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையளிக்கப்பட்ட இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் விடுதலை குறித்து அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் (IPU) மகிழ்ச்சியடைகிறது. இது தொடர்பான நீதிமன்ற வழக்கு அமர்வுகளை எதிர்காலத்திலும் அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் (IPU) மிக நெருக்கமாக கண்காணிக்கும்” இவ்வாறு, அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் (IPU) உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், 24 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டம் (தற்காலிகப் பிரிவு) 1979 இன் 48 ஆவது சட்டப்பிரிவின் கீழ், சி.ஐ.டி யினரால் கைது செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், 177 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு பின்னர், இம்மாதம் 14 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியுதீனின் வழக்கு தொடர்பில் அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் (IPU) தனது முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்தது

உலகளாவிய ரீதியில் 13 பிராந்திய பாராளுமன்றங்களையும், 179 நாடுகளிலுள்ள பாராளுமன்றங்களில் அங்கத்துவத்தினை கொண்டதுமான அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் (IPU), ஒரு சர்வதேச அமைப்பாகும்.

1889 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஒன்றியம், ஜனநாயக ஆட்சியையும், அதன் பொறுப்புக் கூறலையும் ஊக்குவித்து, உத்வேகமளிக்கும் ஆரம்ப இலக்கை கொண்டதாகும். அத்துடன், இந்த ஒன்றியம் ஐ.நா பொதுச் சபையில் நிரந்தரமான அவதானிப்பாளர் தகைமையையும் பெற்றுள்ளது.

ஐ.நா சபை விவகாரங்களில் குறிப்பிடத்தக்களவு தமது செல்வாக்கினை செலுத்தி வரும் அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் (IPU), ஐ.நா அமர்வுகளில் எண்ணற்ற பிரேரணை நிறைவேற்றலிலும் தனது பங்களிப்பினை நல்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் (IPU) புலன்விசாரணைகள் ஒருபோதும் பகிரங்கப்படுத்தப்படுவதுமில்லை.

மேலும், இந்த வருடம் நவம்பர் மாதம் ஸ்பெயின், மெட்ரிட் நகரில் இடம்பெறவிருக்கும் அமர்வின் போதும், ரிஷாட் பதியுதீனின் கைது தொடர்பிலும், அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் (IPU) தனது கவனத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி தினகரன் மகிந்தவின் கோட்டையிலும் வெடித்தது போராட்டம் அதிரும் இலங்கை

24/10/2021 ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹரவில் நடைபெற்ற “கொவி ஹதகெஸ்ம” நிகழ்ச்சி மற்றும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Preamadasa) கலந்துகொண்டார்.

அங்கு சென்ற அவர், அப்பகுதி விவசாயிகளைச் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயின் (Mahindananda Aluthgamage) உருவப் பொம்மையினை வீதியில் இழுந்துச் சென்ற தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

நன்றி JVP News.com


No comments: