மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
தென்னையும் பனையும் உருவத்தால், பயன்பாட்டால் வேறுபட்டாலும் ; எங்களின் வாழ்வியலோடு இணைந்தே வந்திருக்கிறது. மென்மையாய் தென்னையும் , வன்மையாய் பனையும் இருந்த போதும் - இரண்டுமே இனிப்பானவற்றை எங்களுக்குக் கெல்லாம் தந்தபடியேதான் இருக் கிறது..என்பதையும் மறந்துவிடல் முடியாது.பனையைப் பற்றிப் பார்க்கும் வேளை - தென்னையும் வருவது தவிர்க்க முடியாதாகவே இருக்கிறது எனலாம். குடியிருக்கும் வீட்டின் கூரையாய் இரண்டின் ஓலைகளும் இருக்கிறது. வீட்டைச் சுற்றி பாதுகாப்பாய் அமைக்கப்படும் வேலியாயும் இரண்டின் ஓலைகளும் இருக்கிறது.மென்மையா ? வன்மையா ? என்று வரும் வேளை வன்மையே முன்னிலை வகிக்கும் நிலைக்கு வந்து விடுவதையே காணமுடி கிறது.மென்மையும் அதனை ஏற்று தனக்குரிய நிலையில் அமைதியாகி விடுவதையும் காணமுடிகிறது என்பதும் நோக்கத்தக்கதே.
பனை மரங்கள் கூட்டமாய் குடும்பமாய் வளர்ந்து நிற்கும்.அப்படி வளர்ந்திரு க்கும் அந்தப் பனைகளுடாக நடந்து
செல்லும் வேளை நல்லதொரு ஓசை நமது காதுகளில் வந்து விழும்.காற்றினால் பனையின் ஓலைகள் அசையும். இது சாதாரணமாகவே நிகழுவதுதான். ஆனால் உன்னிப்பாய் கவனித்தால் அங்கு ஒரு ஓசை எங்கள் காதுகளுக்குள் வந்து புகுந்து நிற்கும். அந்த ஓசை காற்றின் அசைவால் பனை ஓலைகள் உரசுவதால் வருவதுதான். ஆனால் அப்படியான ஓசையினைக் கேட்கும் பொழுது - பனைமரங்கள் ஒன்றோடு ஒன்று பேசிக் கொள்ளுகின்றனவோ என்றுதான் எண்ணத் தோன்றும்.இதனை பனையுடன் ஒன்றிப்போய் அனுபவித்தவர்களால் மட்டுமே உணர்ந் திடக் கூடிய இருக்கும் என்று நினைக்கிறேன்.
பனை ஓலைகளினால் உருவாக்கப்படுகின்ற பாய்கள்பற்றிப்
பார்த் தோம். அந்தப் பாய்கள் பலவிதமாய் உதவிடுவதையும் பார்த்தோம். வண்ணங்கள் கொண்ட வகை வகையான பாய்களையும் பார்த் தோம்.இந்தப் பாய்கள் எங்களின் கலைகளிலும் இடம் பெற்றிருக் கின்றன என்பதையும் கருத்திருத்த வேண்டும். அந்தக் காலங்களில் நாட்டுக் கூத்துக்களும் , பல வித நாடகங்களுமே தான் எங்களுக்கு உற்சாகம் ஊட்டி - அலுப்பினைக் , களைப்பினைப் போக்கி நின்றன என்பதை மறுத்துவிட முடியாது.கூத்துக்களையும், நா
அமையாமல் - நாடகத்தை , கூத்தை ரசிக்கும் மக்கள் -
மேடையின் முன்னே அமர்ந்து இருக்கப் பயன்படுத்தியதும் பனை ஓலையிலான பாய்களாகவே இருந்திருக்கின்றன என்பதும் கருத் திருத்த வேண்டியதேயாகும்.பனை ஓலைப் பாயில் அமர்ந்து நிகழ்ச் சிகளைக் கண்டு ரசிக்கும் வேளை - பல வகையான சுவையான தின் பண்டங்களைத் தாங்கி நிற்பதும் ; பனை ஓலைகளால் செய்யப்பட்ட அழகான சின்னப் பெட்டிகளாக இருந்தன என்பதையும் மறந்துவிடவும் கூடாது.
யாழ்ப்பாணத்தில் பல கிராமங்களில் வீடுகளின் கூரைகள் பனை ஓலைகளினாலேயே வேயப்பட்டிருக்கும்.களி மண்ணிலான தரை இருக்கும். அந்தத் தரையினை சாணத்தினால் மெழுகினார்கள்.களி மண்ணைக் கொண்டு ஒரு அரைச் சுவரையும் கட்டினார்கள். வீட்டின் அறைகளாக அமைவதற்கு உரிய பகுதியினை மறைப்பதற்கு தடுப்பு களையும் பயன்படுத்தினார்கள். அந்தத் தடுப்பினை " தட்டி " என்று
அழைத்தார்கள்.அந்தத் தட்டியின் வெளிப்புறம் தென்னை ஓலையின் கிடுகுகளாக இருக்கும்.உடபுறத்துக்கு பனை ஓலைப் பாய்களைப் பயன் படுத்தினார்கள்.பனை ஓலைப் பாயினை உட்புறமாகக் கொண்டிருக்கும் தட்டி அழகாகாவே அறைகளின் தடுப்புச் சுவாராக ஆகியே நிற்கும். வீட்டின் உள்ளே கூரையின் மேற்பகுதியில் வெப்பம் உள்ளே வராமல் இருப்பதற்குப் பனை ஓலைப் பாய்களை மிகவும் சீராக வைக்கும் மு றையும் அக்காலத்தில் காணப்பட்டது.தற்போதைய வீடுகளில் " மேற் சீற் " அடிப்பதுபோல் - அக்காலத்தில் பனை ஓலைப் பாய் சீற்றாகப் பயன்படுத்தப் பட்டிருந்திருக்கிறது.ஆயிரத்து தொழாயிரத்து எழுபதுக்கு முன்னர் கிராமப்புற வீடுகள் இவ்வாறு அமைந்திருந்தன என்பதை மனமிருத்தல் வேண்டும்.
பனை ஓலையினால் செய்யப்படும் பாய்களைவிட - பனை ஓலைகளினால் செய்யப்படும் பல பெட்டிகளும் இருக்கின்றன.
அப்படியான பெட்டிகளின் வடிவங்களும், அவற்றுக்குக் கொடுக்கப்பட்ட பெயர்களுமே கருத்திருத்த வேண்டியதேயாகும்.கடகம் என்னும் பெயரில் இரண்டு கடகங்கள் இருக்கின் றன.நார்க்கடகம் , என்றும் கடகம் என்றும் இவற்றைப் பெயரிட்டழைப்பர். பெயர் என்னவோ கடகம்தான். ஆனால் செய்யப்படும் விதத்திலும் , பயன்படும் விதத்திலும் இரண்டுமே வித்தியாசமாய் இருக்கும்.இரட்டை ஓலையினைப் பயன்படுத்தி , அதனின் மேற்பகுதியினை பனைமட்டை நாரினைக் கொண்டு பின்னி , மேல் விழிம்பில் மட்டையினைக் கட்டி அமைவதுதான் " நார்க்கடகம்"
இரட்டை ஓலைகளைக் கொண்டு இழைத்து , மேல்விளிம்பில் மட்டை கட்டப் படுவதுதான் " கடகம் " . இழைக்கும் பொழுதில்
பனைமட்டை நார் சேத்து இழைப்பதன் நோக்கும் பாரங்களைச் சுமப்பதற்கு உரிய உரம் வரவேண்டும் என்பதேயாகும். பனை ஓலையுடன் நாரினை இணைத்துக் கடகத்தை உருவாக்க வேண்டும் என்று சிந்தித்துச் செயலாக்கிய பாங்கில் - நல்லதொரு தொழில் நுட்பம் வெளிப்பட்டு நிற்கிறது என்பதை மனமிருத்தல் வேண்டும். ஏற்கனவே , தென்னை ஓலையைவிட வலிமையாய் இருக்கும் பனை ஓலையானது - மேலும் வலிமை பெறும் வகையில் - பனையின் மட்டையினை இணைத்தமையைப் பாராட்டாமல் இருக்கத்தான் முடியுமா !
பனை ஓலையினால் இழைக்கப்பட்டு , மேல்விழிம்பா
இடியப்பம், பாலப்பம், பிட்டு,
இந்தக்கடைகளில் சென்று இவற்றை வாங்குவதற்கு பயன்படுத்திய ஒரு பெட்டிதான் " சுத்துப் பெட்டி ". பனை ஓலையால் செய்பட்டு மேல்விளிம்பு இரண்டு அல்லது மூன்று பனை ஈர்க்கினை வைத்து பின்னர் அதனை பனை ஓலையினால்
கட்டி அமைக்கப்படுவதே சுத்துப் பெட்டியாக வந்தது.இந்தப் பெட்டி பயனபாட்டை விட்டு இன்னும் போகாதிருக்கிறது. இன்னும் சில வீடுகளில் இப்பெட்டிகளின் பயன்பாட்டினையும் காணக்கூடியதாகவும் இருக்கிறது.இதனை விட இன்னுமொரு பெட்டியும் இருந்தது. அதுதான். " மூடற் பெட்டி ". இப்பெட்டி அகலம் குறைந்தது . அதேவேளை தாயும் பிள்ளையும் போலவும் இருக்கும். அதாவது கீழ்ப்பெட்டியினை மூடி வைக்கும் விதத்தில் இது அமைந்திருக்கும். அத்துடன் வண்ணச் சாயங்கள் பூசப்பட்ட ஓலைகளினால் இந்தப் பெட்டிகள் அமைந்திருப்பதும் நோக்கத் தக்கதே.
" தட்டுப்பெட்டி " என்னும் பெயரிலும் ஒரு பெட்டி இழைக்கப் பட்டிரு க்கிறது.இப்பெட்டி சற்சதுரமாய் பனை ஓலை கொண்டு அமைக் கப்பட்டது.இதன் விளிம்பு பனை ஈர்க்கினால் கட்டப்படிருந்தது.
இந்தப் பெட்டிகளோடு இன்னும் சில பெட்டிகளையும் பனை ஓலை யினால் இழைத்துப் பயன்படுத்தியதைக் காணமுடிகிறது.அதன் பெயர்தான் " சாமத் திய சோடிப் பெட்டி ". இந்தப் பெட்டியானது மங்கலத்திலும் அமங்கலத்திலும் பயன் படுத்தப் பட்டதாக அறிய முடிகிறது.அப்படிப் பயன்படுத்தும் வேளை இப் பெட்டிகளின் அமை ப்பில்- வேறுபாடுகள் இருக்கும் விதத்தில் வடிவமைக்கப் பட்டன என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.விளிம்பினைத் தடித்த மட்டைகள் தாங்கி இருக்கும்.இந்தச் சாமத்தியச் சோடிப் பெட்டியின் - அதா வது மங்கல நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தும் பெட்டிகளில் - அதன் நடுப்ப கு தியும், மூலைப் பகுதியும் வண்ணச் சாயம் பூசிய பனை ஓலைகளால் இழைக்க பட்டிருக்கும் வகையில் வடிவமைக்கப் பட் டிருக்கும்.இப்
"கொட்டைப் பெட்டி " என்று சொன்னவுடனேயே பெரியம்மாவோ , பாட்டியோ கட்டாயம் வந்து நிற்பார்கள்.பணத்தை வைத்திருக்க இப்பெட்டி மிகவும் உதவியிருக்கிறது.இந்தப் பெட்டி கைக்கடக்கமாய் செய்யப்பட்டது. இப்படிச் செய்யப்பட்ட பெட்டி மூடியிருக்கும் வகையில் இழைக்கப்பட்டது. சாயம் பூசப்பட்ட ஓலைகளும் இப்பெட்டியில் இணை ந்து அழகாய் அதே வேளை கைக்கு அடக்கமாய் செய்யப்பட்டிருக்கும். பணத்தை வைப்பதோடு வெற்றிலையும் அதற்கு அனுசரணையாய் இருக்கும் - பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை ,
தமிழ்நாட்டில் கோவில்பட்டி சுற்று வட்டாரத்தில் பனை ஓலைப் பெட்டிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டன என அறி கிறோம்.காரணம் இங்கு பனைகள் நிறையவே இருந்திருக்கி றது.இந்தப் பகுதியில் சுவையாக உண்ணக்கூடிய தின்பண்ட ங்களைச் செய்திருக்கிறார்கள். அந்தப் பண்டங்களை வைத்துக் கொடுப்பதற்கும்,வியாபார ரீதியில் கொடுப்பதற்கும் - பனை ஓலைப் பெட்டிகளையே பயன்படுத்தி இருக்கிறார்கள்.பனை ஓலைப் பெட்டிகளில் வைத்துக் கொடுக்கப்படும் தின்பண்ட ங்களின் சுவையும் கூடுகிறது என்னும் நிலையும் இருப்பதால் - பனை ஓலைப் பெட்டிகளுக்கு நல்ல மதிப்பும் ஏற்பட் டிருக் கிறது.இங்கு நடைபெறும் திருவிழாக்காலங்களில் சுவையான தின்பண்டங்களைத் தாங்கி நிற்கும் நிலை இங்கு செய்யப்படும் பனை ஓலைப் பெட்டிகளுக்கு இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றுவரை பனை ஓலைகளைக் கொண்டு செய்யப்படும் பொருட்கள் கைத்தொழிலாய் நடை பெற்றே வருகிறது. ராமநாதபுரம் மாவட்டங்களில் - குறிப்பாக அளகன்குளம், பனைக்குளம் , சித்
பெண்கள் தலையில் வைக்கக் கூடிய விதத்தில் - அழகான வடிவில் பூக்களை செய்கிறார்கள்.வெயிற் காலத்துக்குப் பயன் படும் விதத்தில் பனை ஓலையில் அழகான தொப்பி களையும் ஆக்குகிறார்கள்.பூக்கூடைகளை வண்ணமாய் செய்கிறார்கள். எழுதுகின்ற கருவிகளான பென்சில் , பேனை இவற்றை வைப்ப தற்கான சிறிய பைகளையும் செய்து அசத்துகிறார்கள் எனலாம்.
அழகுப் பையாய் அமைந்திடுவேன்
அர்ச்சனைப் பெட்டியாய் ஆகிடுவேன்
கிழவி கிழவன் மடியிருக்கும்
கொட்டைப் பெட்டியாய் வந்திடுவேன்
அரிசி நெல்லு தானியங்கள்
அனைத்தும் தாங்கும் துணையாவேன்
அம்மா அவிக்கும் பிட்டினையும்
அன்பாய் தாங்கிட வந்திடுவோம்
அப்பம் வாங்க நான்வருவேன்
அரைக்கும் மாவைத் தாங்கிடுவேன்
ஐயா கடையிலும் நானிருப்பேன்
அலியார் கடையிலும் நானிருப்பேன்
அழகாய் ஜொலிக்கும் பூவாவேன்
No comments:
Post a Comment