உலகச் செய்திகள்

மூன்றாவது தடுப்பூசி அவசியமற்றது 

சீனா Vs அமெரிக்கா: அடுத்த தலைமுறை போர் விமானங்களில் யாருடையது ஆதிக்கம் செலுத்தும்?

இரண்டு நாளில் இரண்டாவது தலைநகரை கைப்பற்றிய தாலிபன்கள்

ஜான்சன் & ஜான்சனின் ஜேன்சன் கோவிட்-19 கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி: ஒரு டோஸ் போதும்

ஜம்மு காஷ்மீர் நடவடிக்கையை திரும்பப் பெறவேண்டும் - இஸ்லாமிய நாடுகள் அமைப்பு, இந்தியா ஆட்சேபம்


மூன்றாவது தடுப்பூசி அவசியமற்றது 

செப்டெம்பர் வரை நிறுத்த WHO கோரல்

இரண்டு முறை கொரோனா தடுப்பூசிகளை செலுத்திய பின்னர் மேலதிகமாக மூன்றாவது தடவையாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதி வரை நிறுத்தி வைக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த செயற்பாடு மூலம் ஒவ்வொரு நாட்டிலும் 10 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்குமென அவர் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட பல நாடுகள் மூன்றாவது தடவையாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளன.

எனினும், வறிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் பின்தங்கியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின் அடிப்படையில் சில வறிய நாடுகளில் மொத்த சனத்தொகையில் 1.5 சதவீதமானோருக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹெய்ட்டி மற்றும் கொங்கோ குடியரசு போன்ற நாடுகளில் இரண்டாவது தடுப்பூசி எவருக்கும் செலுத்தப்படவில்லையென உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ள இந்தோனேசியாவில் அதன் மக்கள் தொகையில் 7.9 சதவீதமானோருக்கே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 


 


சீனா Vs அமெரிக்கா: அடுத்த தலைமுறை போர் விமானங்களில் யாருடையது ஆதிக்கம் செலுத்தும்?

  • உமர் ஃபாரூக்
  • பாதுகாப்பு ஆய்வாளர்
ஃபைட்டர் ஜெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சண்டை விமானம்.

விமானப்படைக்கு ஆறாவது தலைமுறை 'ஸ்டெல்த்' போர் விமானத்தை தயாரிப்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஒரு புதிய ஆயுதப் போட்டி தொடங்கியிருக்கிறதா?

கிடைக்கும் சமிக்ஞைகளைப் பார்த்தால் இந்த கேள்விக்கான பதில் 'ஆம்' என்றே தோன்றுகிறது.

'ஆறாவது தலைமுறை' போர் விமானங்கள் மூலம் 'அடுத்த தலைமுறை வான்வெளி ஆதிக்கம்' (NGAD) என்ற திட்டம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று அமெரிக்க விமானப்படை 2021 ஜூன் மாதம் அறிவித்தது.

புதிய, அதிநவீன போர் விமானங்கள், எஃப் -22 ராப்டரின் இடத்தில் கொண்டுவரப்படும் என்றும் அவை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யும் திறன் பெற்றவை என்றும் அமெரிக்க விமானப்படையின் (யுஎஸ்ஏஎஃப்) தலைமை அதிகாரி ஜெனரல் சார்லஸ் க்விண்டன் பிரவுன் ஜூனியர், அமெரிக்க நாடாளுமன்ற ராணுவ கமிட்டியிடம் தெரிவித்தார்.

இந்த போர் விமானத்தின் முக்கிய நோக்கம் வான்வெளியில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதாக இருக்கும் என்று 2022 நிதியாண்டுக்கான பட்ஜெட் யோசனை தொடர்பாக பேசிய விமானப்படைத் தலைவர் குறிப்பிட்டார். ஆனால் அதே நேரத்தில், இந்த போர் விமானங்கள் தரை இலக்குகளை குறிவைக்கும் திறன் கொண்டவை என்றும் அவர் தெரிவித்தார்.

"ஆறாவது தலைமுறை போர் விமானம் " வானத்திலிருந்து தரை இலக்குகளை தாக்கும் திறனைக் கொண்டுள்ளது. தனது பாதுகாப்பை முதன்மையாக கொண்டுள்ள இது, நமது விமானப்படை தளபதிகளுக்கும் கூட்டுப் படைகளுக்கும் விருப்பத்தேர்வுகளை வழங்குவதாகவும் இருக்கும்," என்றார் அவர்.

"என்ஜிஏடி போர் விமானம், எஃப் -22 இன் செயல்பாட்டு வரம்பையும் விரிவுபடுத்தியுள்ளது. இது அதிக அளவு ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளை எடுத்துச் செல்லும் திறனைக் கொண்டுள்ளது, இது இந்தோ-பசிபிக் (இந்தியப் பெருங்கடல், ஆசியா முதல் ஆஸ்திரேலியா மற்றும் கிழக்கு அமெரிக்க) பிராந்தியம் முழுவதும் பயணித்து குறிவைக்கும் திறனைக் கொண்டுள்ளது,"என்று பிரவுன் மேலும் கூறினார்.

NGADகள் எப்பொழுதும் " ஃபேமிலி சிஸ்டம்" என்றே அழைக்கப்படுகின்றன. எதிரிகளின் பைலட் இல்லாத விமான தாக்குதல் திறன்களை அழிக்க, மின்னணு தாக்குதல் போன்ற பணிகளைச் செய்ய, மற்றும் கூடுதல் ஆயுதங்களைக் கொண்ட ஒரு இயந்திரமாக இவற்றைப் பயன்படுத்தமுடியும். ஆனால் அதன் அடிப்படை அமைப்பு விமானம்தான் என்று அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

சீனாவில் இருந்து அச்சுறுத்தல்

ஃபைட்டர் ஜெட்

பட மூலாதாரம்,

US AIRFORCE

படக்குறிப்பு,

சண்டை விமானம்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீன விமானப்படை, தரையிலிருந்து தரை இலக்கை தாக்கவல்ல ஏவுகணைப் படை ஆகியவற்றின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்த ஆயுத அமைப்பை அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

நவீன சீன விமானங்கள், நீண்ட தூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணைகளின் அடுத்த தலைமுறை சவால் அருகாமையில் இருக்கிறது என்று செயல்திட்டம், ஒருங்கிணைப்பு மற்றும் தேவைகளுக்கான தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் எஸ். கிளின்டன் ஹை நோட், கூறினார்.

நீண்ட தூர போர் விமானங்களை அறிமுகப்படுத்துவது "வெளிப்படைத்தன்மை" பிரசாரத்தின் ஒரு பகுதியாகும். சீனாவினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து காங்கிரசை எச்சரிப்பது, இதை எதிர்த்து சமாளிக்க ஆற்றல்மிக்க ஒரு முறைமையை கொண்டுவருவதும் இதன் நோக்கமாகும்.

"ஜே -20 போன்ற அதிநவீன ஏவுகணைகள் அமெரிக்க விமானப்படைக்கு அச்சுறுத்தலாக மாறும் நேரம் நிச்சயமாக நெருங்குகிறது," என்று ஹை நோட் குறிப்பிட்டார்.

ஜே -20 என்பது சீனாவின் முதல் ஸ்டெல்த் (ரேடார் மற்றும் மேம்பட்ட உபகரணங்கள் மூலம் கண்டுபிடிக்க முடியாதது) போர் விமானமாகும். தற்போது இது பயன்பாட்டில் உள்ளது.

"இது (சீன விமானம்) ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. நாம் அதை எதிர்த்து சமாளித்தாக வேண்டும்."என்றார் ஹை நோட்.

சீன விமானப்படைக்கும் அமெரிக்க விமானப்படைக்கும் இடையே பரஸ்பர குற்றம்சாட்டல் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

சீன போர் விமானம்

பட மூலாதாரம்,

XINHUA

படக்குறிப்பு,

சீன வான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் போர் விமான தயாரிப்பு மாதிரி

கடந்த ஆண்டு சீனாவின் முன்னணி ஆங்கில செய்தித்தாள் குளோபல் டைம்ஸில் வெளியிடப்பட்ட கட்டுரையில், "ஆறாவது தலைமுறை போர் விமானங்களுக்கான உலகளாவிய பந்தயத்தில் சீனா பின்தங்கியிருக்காது, அடுத்த தலைமுறை போர் விமானங்களை 2035 க்குள் சீனா உருவாக்கும்."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஆறாவது தலைமுறை போர் விமானங்கள் 2035 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று முன்னணி சீன போர் விமான நிபுணர் வாங் ஹெஃபெங் கூறினார்.

வாங் ஹெஃபெங், செங்டு விமான ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர் ஆவார். இவர் J-20 மற்றும் J-10 போர்விமானங்களின் கட்டுமானத்திலும் பங்கேற்றுள்ளார்.

ஜோ-சியானில் இருக்கும் தேசிய பாதுகாப்புத் கழகம், தொழில்- அறிவியல் தொழில்நுட்ப அறிக்கையை ஜனவரி மாதம் வெளியிட்டது.

ஆறாவது தலைமுறை போர் விமானத்தில் புதிய தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது என்று இந்த அறிக்கை கூறுகிறது. இதில் கமாண்டிங் ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏரோடைனமிக் (காற்று எதிர்ப்பைக் குறைப்பதன் மூலம் வேகமாக பறக்கும் திறன்) வடிவமைப்பு மூலம் உயர்தர ஸ்டெல்த் திறன் உட்பட. பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று இந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

ஃபைட்டர் ஜெட்

பட மூலாதாரம்,

CONTRINUTOR

படக்குறிப்பு,

இந்த வானம் யார் வசம்?

சீனா இந்த அம்சங்களில் சிலவற்றை தேர்வுசெய்து, தேவைகளுக்கு ஏற்ப அவற்றை விமானத்தில் இணைக்கும்.

பாகிஸ்தான் நிபுணர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?

இஸ்லாமாபாதில் வசிக்கும் பாதுகாப்பு ஆய்வாளர் ஷாஹித் ராசா,"சீனா ஐந்தாவது தலைமுறை ஜே -20 தொடரை சமீபத்தில் உருவாக்கியதைத் தொடர்ந்து அமெரிக்க விமானப்படை, குறிப்பிட்ட நோக்கத்துடனும் குறிக்கோளுடனும் இந்த விமானத்தை உருவாக்குகிறது,"என்று பிபிசியிடம் கூறினார்..

இந்த விமானத்தில் அமெரிக்கா, ஆறாவது தலைமுறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் நோக்கம் , சீனா போன்ற தனது பாரம்பரிய போட்டியாளரிடமிருந்து வான் ஆதிக்கத்தை கைப்பற்றுவதாகும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

"இந்த விமானங்கள் பெரும்பாலும் அமெரிக்காவுக்குள் நிறுத்தப்படும், ஆனால் பதற்றம் அதிகரிக்கும் போது, சீனாவுடனான அதிகார சமநிலையை சீர்குலைக்க, ஆறாவது தலைமுறை போர் விமானங்களை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலைநிறுத்த முடியும். இதன் விளைவாக, சீனா ஆறாவது தலைமுறை தளத்தை தயாரிக்கத் தொடங்கக்கூடும்,"என்று ஷாஹித் ராசா குறிப்பிட்டார்.

இந்த புதிய தொழில்நுட்பம், தெற்காசிய பிராந்தியத்தையோ, பாகிஸ்தானையோ அதிகம் பாதிக்காது என்று அவர் கூறினார்.

"அமெரிக்க அரசு, தனது நெருங்கிய நட்பு நாடுகளுக்கு F 22 ராப்டர் விமானங்கள் ஏற்றுமதியை அனுமதிக்காதது போலவே, தொழில்நுட்பக் கவலைகள் காரணமாக இந்தியா உட்பட அதன் கூட்டாளி நாடுகளுடன் 6 வது தலைமுறை தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளாது என்றே நான் நினைக்கிறேன்," என்றார் ஷாஹித் ராசா.

"இந்த விமானத்துக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சிறப்பு உறவும் இல்லை. எதிர்காலத்தில் விமானத் திறனுக்கு ஒரு புதிய முன்னுதாரணமாக அது இருக்கும்,"என்று அவர் கூறினார்

ஆறாவது தலைமுறை F-22 உடன், வேகமான மற்றும் மெதுவான வேகங்களின் இணைப்பு (அதாவது 'F-15, E' உடன் F-16 ஐ இணைந்து பறப்பதைப்போல) முக்கிய பாத்திரத்தை வகிக்கும் என்று மற்றொரு பாகிஸ்தான் நிபுணரும் முன்னாள் பாகிஸ்தான் விமானப்படை பைலட்டுமான கைசர் துஃபைல் பிபிசியிடம் கூறினார்.

அமெரிக்க விமானப்படையின் அதிநவீன முன்னணி விமானம் என்பதால், இது நேட்டோ நாடுகளுக்கு (இந்தியாவுக்கு அல்ல) எளிதாக ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே, இப்பகுதியில் ஒரு பெரிய புவிசார் அரசியல் மாற்றம் ஏற்படாதவரை, தெற்காசியாவுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இருக்காது என்று தெரிகிறது.

பங்கு

ஃபைட்டர் ஜெட்

பட மூலாதாரம்,

US AIRFORCE

படக்குறிப்பு,

சண்டை விமானம்.

அமெரிக்க விமானப்படையின் தலைவர்கள் 2022 நிதியாண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவை சமர்ப்பிக்கும் போது இந்த போர் விமானத்தின் முக்கிய பங்கு , வான்வெளி ஆதிக்கம் அல்லது இறையாண்மையை நிலைநிறுத்துவதாகும் என்று கூறினர். ஆனால் அது தரை இலக்குகளை தாக்கும் திறனையும் கொண்டிருக்கும் .

அமெரிக்க விமானப்படை தனது போர் விமானப்பிரிவை, F-35, F-15EX, F-16 மற்றும் NGAD உட்பட நான்கு வகையான விமானங்களுடன் மட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரவுன் கூறினார்.

"என்ஜிஏடி' போர் விமானம் எஃப் -35 உடன் இணைந்து பறக்கும் என்று அவர் குறிப்பிட்டார். ஆரம்பத்தில் முக்கிய விமானமான எஃப் -15 எக்ஸ், பின்னர் எஃப் -16 விமானமும் நம்மிடம் இருக்கும்" என்றார் பிரவுன்..

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கோரிக்கைகளை வெளியிட்டது. NGAD க்கு தேவையான நிதி அதில் கோரப்பட்டுள்ளது.

NGAD திட்டத்தை முன்னெடுத்துச்செல்ல அமெரிக்க விமானப்படை ,1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை கோருகிறது. இது முந்தைய ஆண்டை விட சுமார் 623 மில்லியன் டாலர்கள் அதிகமாகும்.

தலைமைத் தளபதி ஜெனரல் சார்லஸ் க்விண்டன் பிரவுன் ஜூனியர் "நாம் மாற்றத்தின் ஒரு கட்டத்தில் இருக்கிறோம்."என்றார்.

"விமானப்படை தனது தற்போதைய பலத்தை ஓரளவு குறைத்து (சில விமானக்களை நீக்கி) அதன் மூலம் சேமிக்க முடியும் என்றும் இதைக்கொண்டு புதிய விமானங்களை உருவாக்கமுடியும். அதாவது சீனா போன்ற ஒரு முக்கிய போட்டியாளரை தோற்கடித்து மிரட்டும் திறன் கொண்ட விமானங்கள்," என்று அவர் தெரிவித்தார்.

இன்று நாம் இந்த நடவடிக்கையை எடுக்கத் தவறினால், எதிர்காலத்தில் வான் யுத்தத்தில் சீனா அமெரிக்காவை தோற்கடிக்க வாய்ப்புள்ளது என்று அவர் எச்சரித்தார்.

அடுத்த தலைமுறை விமான மேலாதிக்க அமைப்புகள் (புதிய தலைமுறை அதிநவீன போர் விமானங்கள்) விமானப்படையின் போர் விமானங்களில் 'வைல்ட் கார்ட்' (எதிர்பாராமல் அல்லது திடீரென்று) முறையில் சேர்க்கப்படும். இதற்கென பட்ஜெட் 2022 இல், 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் கோரப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த திட்டத்தின் பெரும்பகுதி ரகசியமானது. இருப்பினும் சில விவரங்கள் வெளிவந்துள்ளன.

முதல் என்ஜிஏடி 2020 ல் பறக்க விடப்பட்டது என்று முன்னாள் விமானப்படை அதிகாரியான வில் ரூபர் கடந்த செப்டம்பரில் கூறினார். மிக அதிக உயரத்தில் பறக்கும் சாதனை அப்போது படைக்கப்பட்டது, இதைக்காட்டிலும் அதிக உயரத்தில் பறக்கும் திறன் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

என்ஜிஏடி, தரை இலக்கு மீது தாக்குதல் நடத்துவது மட்டுமல்லாமல், வானில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட பலநோக்கு விமானமாக இருக்கும் என்று தான் எதிர்பார்த்ததாக பிரவுன் கூறினார்.

"இந்த விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய தரை இலக்கை தாக்கும் திறன் தேவையாக இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.

போர் விமானங்கள் முழுமையான ஸ்டெல்த் திறன் கொண்டிருக்கவேண்டும்.

ஃபைட்டர் ஜெட்

பட மூலாதாரம்,

GETTY IMAGES

படக்குறிப்பு,

சண்டை விமான உருவாக்கத்தில் போட்டி

இத்தகைய வடிவமைப்புகளை விரைவாக உருவாக்கி, 'டிஜிட்டல் த்ரெட்' (நவீன தகவல் தொடர்பு அமைப்பு) மூலம், தளத்தில் தற்போதுள்ள விமானங்களை, அதாவது 50 முதல் 100 வரையிலான வரையறுக்கப்பட்ட அளவுகளில் அவற்றை பயன்படுத்துவது என்ஜிஏடியின் நோக்கம் என்றும் ரூபர் கூறினார்.

தொழில்நுட்பத்தை நவீன மற்றும் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க ஏதுவாக, புதிய போட்டி வடிவமைப்பு (விமானம்) ஐந்து முதல் பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் விமானப்படையில் இருக்கும். பழைய மாடல்கள் நீக்கப்படும்.

NGAD யில் இரண்டு மாதிரிகள் அதாவது இரு வகை விமானங்கள் இருக்கவேண்டும் என்று அமெரிக்க விமானப்படை உயர் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். அதாவது ஒன்று ஐரோப்பிய பகுதிக்கு சென்று தாக்கவல்ல, குறைந்த தூரம் பயணம் செய்யக்கூடியது. இரண்டாவது பிசிபிக் பகுதியை அடையக்கூடிய நீண்ட வரம்பைக் கொண்டது.

NGAD களத்தில் நுழைய குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும் என்று ஹை நோட் கருதுகிறார்.

நன்றி பிபிசி தமிழ் இரண்டு நாளில் இரண்டாவது தலைநகரை கைப்பற்றிய தாலிபன்கள்

தாலிபன்கள் - மாதிரிப் படம்

8/8/2021 வடக்கு ஆப்கானித்தானில் உள்ள ஜாஸ்ஜான் மாகாணத்தின் தலைநகர் ஷெபெர்கானை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தாலிபன்கள் அறிவித்துள்ளனர். இரண்டு நாட்களில் தாலிபன்கள் வசம் சென்றுள்ள இரண்டாவது மாகாணத் தலைநகர் இதுவாகும்.

தங்கள் படையினர் இன்னும் அந்த நகரத்தில் இருப்பதாகவும் விரைவில் தாலிபன்களை வெளியேற்றுவார்கள் என்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று தாலிபன்கள் நிம்ரோஸ் மாகாண தலைநகரான சராஞ் நகரைக் கைப்பற்றினர்.

சமீப வாரங்களில் தாலிபன்கள் ஆஃப்கனின் பல பகுதிகளையும் வசப்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்பு இந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகி வருகின்றன. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தியப் படைகள் பெருமளவு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், நாட்டின் பல பகுதிகளை தாலிபன் தீவிரவாதிகள் கைப்பற்றி வருகிறார்கள்.

இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. அதற்கு முன்பு இஸ்லாமியவாத அடிப்படைவாத அமைப்பான தாலிபன் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.

நன்றி பிபிசி தமிழ் 
ஜான்சன் & ஜான்சனின் ஜேன்சன் கோவிட்-19 கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி: ஒரு டோஸ் போதும்

Johnson & Johnson vaccine

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

புதிய தடுப்பூசி

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் 'ஜேன்சன்' கோவிட்-19 தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

இத்துடன் சேர்த்து இந்தியாவில் இதுவரை ஐந்து கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகாலப் பயன்பாடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ஜேன்சன் கோவிட்-19 தடுப்பூசி (Janssen COVID-19 Vaccine) எனப் பெயரிடப்பட்டுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி குறித்த 10 முக்கியத் தகவல்களைப் பார்ப்போம்.

1.ஏற்கனவே இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் - வி மற்றும் மாடர்னா ஆகிய தடுப்பூசிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை ஒரு டோஸ் செலுத்தினால் போதும். இந்த தடுப்பூசி ஒரேயொரு டோஸ் என்பதால், இந்த மருந்துக்கான மருத்துவமனை அனுமதிகளும், மருத்துவப் பணியாளர்களும்

2.பயாலஜிகல் - இ நிறுவனத்துடன் ஜான்சன் அண்ட் ஜான்சன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இந்தத் தடுப்பூசி தயாரித்து விநியோகம் செய்யப்படும்.

3.அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் நடத்திய பரிசோதனையில், மோசமான உடல்நலக் குறைவு ஏற்படாமல் பாதுகாப்பதில் 85 சதவீதத்துக்கு மேல் செயல் திறனைக் காட்டியது ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பு மருந்து.

4.கொரோனாவால் மிதமாக பாதிக்கப்பட்டவர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதன் செயல்திறன் 66 சதவீதமாக இருக்கிறது.

ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி

பட மூலாதாரம்,

NARINDER NANU VIA GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசி வழங்கல் தொடங்கியது.

5.சாதாரண சளியை (common cold) உண்டாக்கும் வைரஸைக் கொண்டு ஜான்சன் & ஜான்சன் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கப்பட்டிருக்கிறது. சளி வைரஸ் மனிதர்களை பாதிக்காத வண்ணம் தடுப்பு மருந்து உருவாக்கப்படுகிறது. இந்த தடுப்பூசி, கொரோனா வைரஸின் ஒரு பகுதி மரபணுவை நம் உடலுக்குள் பாதுகாப்பாகக் கொண்டு செல்கிறது. நம் உடல் கொரோனா வைரஸை அடையாளம் கண்டு எதிர்த்துப் போரிட, இதுவே போதுமானது என்கிறது அந்த நிறுவனம். ஆக்ஸ்ஃபோர்டு & ஆஸ்ட்ராசெனீகா தடுப்பு மருந்தில் பயன்படுத்தப்பட்ட அதே முறை இது.

6. ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் இந்த தடுப்பு மருந்துக்கு அனுமதியளித்த முதல் நாடு அமெரிக்காதான். சென்ற பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா இந்த அனுமதியை வழங்கியது.

7.ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அரிதாக ரத்தம் உறைதல் கோளாறு உண்டானதால் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இதன் விநோயோகத்தை சென்ற ஏப்ரல் மாதம் நிறுத்தி வைத்தன. பின்னர் இந்தத் தடை நீக்கப்பட்டது.

ஜான்சன் & ஜான்சன் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு & ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசிகள் ஒரே மாதிரி செயல்படுகின்றன. இவற்றால் ரத்தம் உறையும் வாய்ப்பு மிகவும் அரிதானது என்கின்றனர் வல்லுநர்கள்.

பட மூலாதாரம்,

GETTY IMAGES

படக்குறிப்பு,

ஜான்சன் & ஜான்சன் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு & ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசிகள் ஒரே மாதிரி செயல்படுகின்றன. இவற்றால் ரத்தம் உறையும் வாய்ப்பு மிகவும் அரிதானது என்கின்றனர் வல்லுநர்கள்.

8.68 லட்சம் பேரில் 6 பேருக்கு மட்டுமே ரத்தம் உறைதல் உண்டானதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (US Food and Drug Administration ) அப்போது தெரிவித்திருந்தது. (இந்தியாவில் 'கோவிஷீல்டு' எனும் பெயரில் விநியோகிக்கப்படும் ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் அரிதினும் அரிதான ரத்தம் உறைதல் கோளாறு சில நாடுகளில் உண்டானது குறிப்பிடத்தக்கது.)

9.ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி தொடர்புடைய ரத்தம் உறைதல் கோளாறு 'மிகவும் அரிதானது' என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் அமைப்பான ஐரோப்பிய மருந்துகள் முகமையும் (European Medicines Agency ) கூறியிருந்தது.

10.ரத்தம் உறைதல் குறித்த பரவலான கவலைகள் எழுந்தபின், இந்தத் தடுப்பு மருந்தால் கிடைக்கும் நன்மைகள் இதனால் உண்டாக வாய்ப்புள்ள பாதிப்புகளை விடவும் அதிகம் என்று ஐரோப்பிய மருந்துகள் முகமை தெரிவித்தது.

நன்றி பிபிசி தமிழ் ஜம்மு காஷ்மீர் நடவடிக்கையை திரும்பப் பெறவேண்டும் - இஸ்லாமிய நாடுகள் அமைப்பு, இந்தியா ஆட்சேபம்

2019 ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் தொடர்பில் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையைத் திரும்பப் பெறவேண்டும் என்று ஆர்கனைசேஷன் ஆஃப் இஸ்லாமிக் கோ ஆபரேஷன் என்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இன்று அறிக்கை வெளியிட்டிருந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புத் தகுதியை இந்திய அரசு ரத்து செய்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி ஆகஸ்ட் 5-ம் தேதி இந்த அறிக்கை வெளியாகியிருந்தது.

இந்த அமைப்பின் பொதுச் செயலகம் வெளியிட்ட அந்த அறிக்கையில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்களில் குறிப்பிட்டுள்ளபடி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் சர்வதேச ரீதியில் ஒப்புக்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதி என்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்திருக்கிறது. இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியான ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அந்த அமைப்புக்கு உரிமை இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
No comments: