இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் இவ்வருட நல்லூர் திருவிழா
சிறுமியின் மரணத்திற்கு காரணமான சகலரும் தண்டிக்கப்பட வேண்டும்
இராணுவ முகாம் அமைந்திருந்த காணி மக்களிடம் கையளிப்பு
ஆசிரியர் - அதிபர் போராட்டத்தில் கைதான 44 பேருக்கும் பிணை
பருத்தித்துறையில் இரு ஆலயங்களுக்கு சீல் வைக்கப்பட்டது
வைத்தியசாலையில் நிரம்பி வழியும் கொரோனா சடலங்கள்
மருத்துவமனைகளில் தேங்கிக் கிடக்கும் கோவிட் உடல்கள்; வெளியான புகைப்படங்களால் பரபரப்பு
ரிஷாத் வீட்டில் ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான காட்சிகள் 16 கமராவிலும் பதிவாகியதா...நடந்தது என்ன
நிரம்பி வழியும் பிணவறைகள்; முழு நேரமும் திறக்கப்படும் சுடுகாடுகள்
பருத்தித்துறை சிவன் ஆலயத்தில் மீண்டும் பூஜை - டக்ளஸின் முயற்சிக்கு வெற்றி
இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் இவ்வருட நல்லூர் திருவிழா
யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு
சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
நல்லூர்க் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “நல்லைக் கந்தப் பெருமானின் வருடாந்தப் பெருந் திருவிழாவானது இம்மாதம் 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
கொரோனா தொற்றின் தீவிர பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார சட்ட நடைமுறைகள், விதிகள், அறிவுறுத்தல்கள், வழிகாட்டல்களை முழுமையாகவும் இறுக்கமாகவும் பின்பற்றி அமைதியாக ஆடம்பரமின்றி பக்திபூர்வமாக இப்பெருந்திருவிழா நடைபெற பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இக்காலச் சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது விடுக்கப்படும் சுகாதார அறிவுறுத்தல்களை சிரமங்கள் பாராது, பொறுப்புணர்வுடன் கடைப்பிடித்து வரும் நாளில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்க்க பெருமனத்துடன் உதவ வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
சிறுமியின் மரணத்திற்கு காரணமான சகலரும் தண்டிக்கப்பட வேண்டும்
இதில் உறுதியாக இருப்பதாக பாராளுமன்றில் ஜீவன் தெரிவிப்பு
்
டயமக சிறுமியின் மரணத்துக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருப்பதுடன், பிரஜா சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் மலையகத்தில் சிறுவர்களை பாதுகாப்பதற்கான தகவல்களை திரட்டும் செலயணி ஒன்றையும் உருவாக்கி வருகிறோமென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேசிய ஆகக்குறைந்த சம்பள சட்டத் திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் பல்வேறு அரசியல்வாதிகளும் கருத்துகளையும் தமது நிலைப்பாட்டையும் வெளியிட்டுள்ளனர். மலையகத்தில் இருந்து மாத்திரமே அவ்வாறு சிறுமிகள் பணிக்கு வருவதாகவும் கூறியுள்ளனர். ஒரு இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இவ்வாறு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மலையகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. வறுமை காரணமாகவே பணிக்குச் சென்றுள்ளனர்.
மலையக மக்கள் தரம்குறைவாக எந்தவொரு செயற்பாட்டையும் செய்யவில்லை. தமது சொந்தக்காலில் நின்று குழந்தைகளுக்கு கல்வியை பெற்றுக்கொடுக்கின்றனர். ஆனால், இந்தச் சிறுமியின் மரணத்தைவைத்து பல அரசியல்வாதிகள் தமது அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். மலையக மக்கள் பட்டியினில் வாழ்கின்றனர். வறுமையில் வாழ்கின்றனர் என்ற பரிதாபம் அவசியமல்ல. இரத்தம் சிந்தி இந்நாட்டுக்கதாக உழைத்தமைக்காக கொடுக்க வேண்டிய மரியாதையையும் கௌரவத்தையும் அங்கீகாரத்தையுமே கோருகிறோம்.
மலையகத்திலிருந்து கல்விக்கற்ற சமூகமொன்று உருவாகியுள்ளது. அவர்கள் உயர்ந்த துறைகளில் உள்ளனர். சர்வதேச ரீதியிலான போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களையும் நாட்டுக்காக கொண்டுவந்துள்ளனர். இதைப்பற்றி எவரும் பேசுவதில்லை. மலையக மக்கள் கஷ்டத்தில் இருப்பதற்கு தொழிற்சங்கங்களும் அரசியல்வாதிகளும்தான் காரணமென அறியாத சிலர் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். சட்ட நடவடிக்கைகள் எடுக்கவில்லையென எவரும் கூற முடியாது. நானே அதிகமாக இந்த விடயத்தில் அக்கறையுடன் செயற்பட்டுள்ளேன்.
கடந்த 8 வருடகாலமாக ரிசாத் பதியுதீன் வீட்டில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவற்றை தெரியாதென எவ்வாறு அவர் கூற முடியும். ரிசாத் பதியுதீன்தான் இதற்கு காரணமென நான் கூறவில்லை. ஆனால், அவரும் காரணம் என்பதை அவர் உணர்ந்துக்கொள்ள வேண்டும். ‘எனது மரணத்துக்கு காரணம்’ – சுவரில் எழுத்தப்பட்டுள்ளதாக செய்திகளை அறிந்தேன். இறந்த பெண் எவ்வாறு அப்படி எழுதியிருக்க முடியும். அப்படியென்றால் காரணத்தையும் எழுதியிருக்க வேண்டும். ஆகவே, இந்தச் சம்பவத்தின் பின்புலத்தில் குற்றவாளிகளாக எவர் இருந்தாலும் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளோம். அதேபோன்று எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்க 18 வயதுவரை இலவசக் கல்வியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதுடன், தண்டனைகளும் கடுமையாக்கப்பட வேண்டும். வயது குறைந்தவர்களை பணிக்கு அனுப்பும் பெற்றோர் முதல் பணிக்கு அமர்த்துபவர்வரை அனைவரையும் தண்டிக்கும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.
பிரஜா சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு செயலணியொன்றை உருவாக்க நாம் தீர்மானித்துள்ளதுடன், தோட்டங்களில் இதன் ஊடாக தகவல்களை திரட்டி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும் ஏற்பாடுகளை செய்துவருகிறோம் என்றார்.
ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன - நன்றி தினகரன்
இராணுவ முகாம் அமைந்திருந்த காணி மக்களிடம் கையளிப்பு
நீண்டகாலமாக இராணுவ முகாம் அமைந்திருந்த தனியாருக்கு சொந்தமான காணியினை உரிமையாளரிடம் கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (03) மட்டக்களப்பு மாவட்டத்தில் கும்புறுமூலை இராணுவ முகாமில் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக, கும்புறுமுலை பகுதியில் நீண்டகாலமாக இராணுவமுகாம் அமைந்திருந்த சுமார் 12 ஏக்கர் காணியே செவ்வாய்க்கிழமை (03) உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய பிரதம அதிதியாக கலந்துகொண்டு அரசாங்க அதிபருடன் இணைந்து காணிக்கான உரிமைப் பத்திரத்தை உரிமையாளர்களிடம் கையளித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனரல் நலின் கொஸ்வத்த, 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.எட்டியாராச்சி, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி, கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். காணிகளை வழங்குவதற்கு உதவிய ஜனாதிபதி, இராணுவ தளபதி மற்றும் அரச அதிகாரிகளுக்கு காணி உரிமையாளர்கள் நன்றிகளை தெரிவித்தனர்.
கல்குடா தினகரன், பாசிக்குடா, ஏறாவூர் நிருபர்கள் - நன்றி தினகரன்
ஆசிரியர் - அதிபர் போராட்டத்தில் கைதான 44 பேருக்கும் பிணை
- 10 வாகனங்களும் விடுவிப்பு
ஆசிரியர் - அதிபர் போராட்ட பேரணியில் பங்கேற்ற நிலையில் கைது செய்யப்பட்ட 44 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்றையதினம் (05) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை தலா ரூபா ஒரு இலட்சம் கொண்ட தனிப்பட்ட பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
நேற்று (04) கைது செய்யப்பட்ட குறித்த நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட Rapid Antigen சோதனையில் அவர்கள் எவருக்கும் கொவிட் தொற்று ஏற்படவில்லையென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பள பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 4 வாரமாக ஒன்லைனில் கற்பித்தலிலிருந்து விலகி பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்ள் மற்றும் அதிபர்கள் சங்கத்தினர் நேற்றையதினம் (04) முற்பகல் வெலிசறை, கடவத்த, கொட்டாவ, மொரட்டுவை உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து வாகன பேரணிகள் 4 இன் மூலம் கொழும்பை வந்தடைந்தனர்.
பின்னர் அவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இருந்து இரண்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இதன்போதே குறித்த 44 பேர் கைது செய்யப்பட்டதோடு, 10 வாகனங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.
பருத்தித்துறையில் இரு ஆலயங்களுக்கு சீல் வைக்கப்பட்டது
8/8/2021 பருத்தித்துறையிலுள்ள சுப்பர்மடம் முனியப்பர் ஆலயம், சிவன் ஆலயம் ஆகியன தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழிபாடுகள் அனைத்தும் 14 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டு, மூடப்பட்டுள்ளன.
இன்று பருத்தித்துறை முனியப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற இரதோற்சவத்தில் கலந்துகொண்ட அதிகளவான பக்தர்கள், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதமை தொடர்பாக சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு ஒளிப்படத்துடன் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டுக்கமைய அப்பகுதிக்குச் சென்று விசாரணையை மேற்கொண்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார், சுகாதார நடைமுறைகளை பேண தவறியமைக்காக, ஆலயத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி வரை வழிபாடுகளை நிறுத்தி மூடுவதற்கு அறிவித்தல் ஒட்டப்பட்டது.
இதேவேளை பருத்தித்துறை சிவன் ஆலயத்திலும் சுகாதார நடைமுறைகளை மீறி,வெளி வீதியில் திருவிழாவை நடத்தியமைக்காக அந்த ஆலயத்தின் வழிபாடுகளையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை இடைநிறுத்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆலய நிர்வாகிகளும் வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி JVP News
வைத்தியசாலையில் நிரம்பி வழியும் கொரோனா சடலங்கள்
8/8/2021 ராகமை போதனா வைத்தியசாலையில் தகனம் செய்ய முடியாமல் கொவிட் சடலங்கள் நிரம்பி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 20 சடலங்கள் தகனம் செய்ய முடியாமல் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த சடலங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ள தகன மேடைகள் செயலிழந்து உள்ளதால் குறித்த உடலங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது ஒரு பிரச்சினைக்குரிய விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி JVP News
மருத்துவமனைகளில் தேங்கிக் கிடக்கும் கோவிட் உடல்கள்; வெளியான புகைப்படங்களால் பரபரப்பு
7/8/2021 இலங்கையில் கொரோனா தொற்றினால் நாளுக்குநாள் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளிலும் சவச்சாலைகளில் உடல்கள் குவிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பீதியையும் தோற்றுவித்துள்ளது.
No comments:
Post a Comment