மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .. அவுஸ்திரேலியா
மறைவாகப் பேசுவதும்
குறை கூறிப் பேசுவதும்
மனமிருத்தல் அவசியமே
கண்டவுடன் கைகூப்பி
களிப்புடனே பேசிவிட்டு
சென்றபின்பு புறம்பேசல்
சிந்தைவிட்டு அகற்றிடுவோம் !
அகமிருந்து அன்பெழுந்து
அணைத்திடலே அறமாகும்
அகமுறையும் ஆணவத்தை
அகற்றிடலே முறையாகும்
கறைகொண்ட எண்ணமதை
கழற்றிடலே சிறப்பாகும்
நிறைவான நினைப்புகளை
நெஞ்சமதில் இருத்திடுவோம் !
இயன்றவரை இன்சொல்லை
எவ்விடமும் பேசிடுவோம்
ஏற்பில்லா வார்த்தைகளை
எங்குரைக்கா இருந்திடுவோம்
பூச்சொரியும் சோலைகளாய்
பொலிவுபெற நாமுரைத்தால்
வாட்டமெலாம் பறந்தோடி
அணைகடந்த வெள்ளமாய்
ஆகிவிடல் நலம்பயக்கா
ஆறுதலாய் பயனளிக்கும்
ஆறெனவே ஆகிடுவோம்
ஆரவாரம் அதிகாரம்
அனைத்தையுமே அகிற்றிவிடும்
அன்புவெனும் ஊற்றெழுந்தால்
ஆனந்தம் பெருக்கெடுக்கும் !
No comments:
Post a Comment