உதவிக் கரங்கொடுக்கும் உன்னத அமைப்பின் நாள் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ..... ஆஸ்திரேலியா

 


       பிறந்தோம் மறைந்தோம் என்பது வாழ்க்கை அல்ல. உண்டோம் உழைத்தோம் உறங்கினோம் என்பதும் வாழ்க்கை அல்ல. இருக்கும் காலத்தில் யாருக்காவது


உதவினோமா என்பதுதான் சிறந்த வாழ்வாகும். அதுதான் வையத்துள் வாழ்வாங்கு வாழுதல் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்படி வாழ்ந்த ஒருவரையும் அவரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அரும்பெருஞ் சேவையினையும் நினைக்கும் நாள்தான் மே மாதத்தில் வருகின்ற எட்டாம் நாளா கும்.என்ன புதிராக இருக்கிறதே என்று எண்ணத் தோன்றுகிறதா புதிரல்ல ..... யாவரும் அறிய வேண்டிய சிந்தனையே எனலாம்.

  பலரும் பிறக்கின்றோம். ஆனால் சிலரின் பிறப்புத்தான் பலருக்கு முன் மாதிரியாய்சமூகத்துப் பயனுள்ளதாய்என்றுமே எண்ணி ப்பார்ப்பதாய் அமைகிறது என்பது கருத்திருத்த வேண்டிய உண்மை யெனலாம். அப்படியான ஒருவரைப் பற்றியும் அவரின் சமுதாயத் சிந்தனைபற்றியும் அறிய வேண்டாமா ?

  அப்படியான ஒரு மாண்புமிக்க பிள்ளை - இறை பக்தியும்மனித நேயமும்கருணையும் கொண்ட குடும்பத்தில் ஜெனீவா என்னும் இடத்தில் 1828 ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம்


நாள் இம்மண்ணில் மலர்கிறது.மலரும் மலர்கள் எல்லாமே வாசம் தருவதில்லை. பயனாவதும் இல்லை. ஆனால் ஹென்றி டியூனண்ட் என்னும் மலர் பூஜைக்கு வந்த மலராய் யாவருக்கும் பயனை நல்கும் மலராய் மண்ணில் மலர்ந்தது என்பதை மனமிருத்தல் அவசியமே.

  ' வளரும் பயிரை முளையிலேதெரியும் என்பார்கள். ஹென்றி டியூனண்டும் பயனுள்ள பயிராய் முளைவிட்டார்.  மற்றவருக்கு உதவ வேண்டும்மற்றவர் படுகின்ற துன்பங்களைப் போக்க வேண்டும் என்னும் நல்ல சிந்தனைகள் ஹென்றியின் இளம் பருவத்திலேயே முகிழ்த்து விட்டது எனலாம். சமுதாய நலன் சார்ந்து சிந்திப்பதற்கு அவரின் பெற்றாரும் உற்ற துணையாக விளங்கினார்கள் என்பது நோக்கத்தக்கது.சிறையிலே கைதிகளுக்குக் கொடுக்கப்படுகின்ற கடுமையான தண்டனையை இவரின் மனம் ஏற்க மறுத்தது.அதனால் சிறைக்கூடங்களுக்கே சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை தேறுதல் படுத்துவதில் கவனம் செலுத்தி னார் என்பதும் நோக்கத்தக்கதேயாகும்.

    வங்கித் தொழிலினைத் தேர்ந்தெடுத்து வளமாக வாழ்க்கையினை அமைத்தாலும் இவரின் சிந்தனை துயரப்படுகின்றவர்கள் பக்கமே சென்றது எனலாம்.1859 ஜூன் மாதம் 25 ஆந் திகதி இவர் வட இத்தா லிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது " சோல்பரினோ " யுத்தம் நடை பெற்றிருந்தது.ஆஸ்திரியாபிரான்ஸ் இத்தாலிய நாட்டுப்படைகளைச் சேர்ந்தவர்கள் மூன்று இலட்சம்பேர் பதினாறு மணித்தியாலங்கள் போரிட்டதன் காரணத்தால் ஏறக்குறைய நாற்ப தினாயிரம் பேர் உயிர்போகும் தறுவாயில் குற்றுயராய் கிடந்தார் கள்.இப்படிக் கிடந்தவர்களை எவருமே கண்டு கொள்ளவே இல்லை. எவருமே இவர்களின்மீது அக்கறை காட்டாது இருந்தமை ஹென்றி டியூனண்டின் உள்ளத்தில் பெருந் தாக்கத்தினை உருவாக்கியது எனலாம்.

  அல்லல்பட்டு ஆற்றாமையினால் அவதியுறும் அவர்களின் நிலைமை ஹென்றி அவர்களிடம் - பரிவைபக்குவத்தைமனித நேயத்தை உதவிடும் உன்னதத்தை உருவாக்கிய என்பதுதான் உண்மையாகும்.இந்தக் காட்சி அவரின் வாழ்க்கைப் பாதையினையே மாற்றியது எனலாம். பகைமைகள் நிரம்பி யுத்த மோகம் கருக் கொண்ட வேளையில் - அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாய் எண்ணாமல் துணிவுடன் துயரத்தில் அவதிப்படுகிறவர்களுக்கு ஹென்றி மேற்கொண்ட மனிதாபிமான பணிகள் புரட்சியானவை. புனிதம் மிக்கவை என்றுதான் சொல்ல வேண்டும்.

    " சோல்பரினோ நினைவுகள் " என்னும் இவரது நூல் இவரின் எண்ணங்களை வெளிச்சமிட்டுக் காட்டி நிற்கிறது எனலாம்.போரின் கொடுமைகளைப் பார்த்த இவரின் மனதில் - அப்போர்களில் ஈடுபட்ட வர்கள்  துயரங்கள் தான் முக்கியமாகப் பட்டது. அவர்களைக் காத்திட அவர் எடுத்த அரும்பெரும் பணிதான் " செஞ்சிலுவைச் சங்கமாய் " எழுந்தது. நடு நிலையில் இருந்து எந்தவித பாரபட் சமுமே காட்டாது உதவிக்கரம் நீட்டுவதே இந்த அமைப்பின் மையக்கருவாய் அமைந்தது என்பதுதான் முக்கியமாகும்." சோலபரினோ நினைவுகள் " என்னும் நூலில் எங்கு போர் நடந்தாலும் காயமடைந்த வீரர் களுக்கு பாரபட்சமின்றி உதவ சர்வதேச அமைப்பு உருவாக்கப் படவேண்டும்என்று குறிப்பிட் டிருந்தார்.அவரின் எண்ணமாய் 1863 இல் " செஞ்சிலுவைச் சங்கம் " மலர்ந்தது.

  வளமார்ந்த செல்வச் செழிப்பில் பிறந்து வளமுடன் வாழ்ந்த மனிதரான ஹென்றி அவர்களின் மனதில் "சேவை மனப்பான்மை " குடி கொண்ட காரணத்தால் - எதையுமே எதிர்பார்க்காமல் எது தேவையோ அதனை உடனடியாக ஆற்றிடும் நிலையினை அவர் ஆத்மார்த்திமாக்கிக் கொண்டு விட்டமை தான் இன்றும் அவரை உலகமே கொண்டாடும் நிலைக்கு வழிவகுத்தது என்பது மறுக்க முடியாத உண்மை எனலாம்.கிடைத்த வாழ்க்கையினால் ஆனந்த மாய் வாழ்ந்திருக்கலாம் . ஆனால் மற்றவர்கள் போல் அதாவது சாதாரணமானவராக அவர் வாழ்க்கையினைப் பார்க்கவில்லை. அடுத்தவர் வேதனை அவர் வேதனையாகவே அவர் கண்டார். அதனால் உதவிக்கரம் நீட்டும் உயரிய அமைப்பாக இன்று செஞ்சிலு வை அமைப்பு உலகில் பரந்து விரிந்து செறிந்து பட்டொளி பரப்பி நிற்கிறது எனலாம்.

  மனித உயிர்களையும் அவர்களுக்கான ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதுஇனம்மதம் நாடுசாதி என்று பாராமல் துயரத்தில் பங்கு கொள்ளுவதுஅரசியலை தவிர்த்து அகிம்சைவழியில் கவனம் செலு த்துதல்காய்தல் உவத்தலின்றி சேவையினையே கருவாய்க் கொண்டு செயலாற்றுதல் ஒற்றுமையினை மையப்படுத்திச் சேவை யினை ஆற்றுதல்பொறுப்பாய்கடமை உணர்வுடன் செயற்படுதல் என்னும் உயரிய நோக்கங்களை ஆணி வேராக்கியே " செஞ்சிலுவை அமைப்பு " உலகம் முழுவது நூற்றுக்கு மேற்பட்ட கிளைகளை நிறுவி " மக்கள் தொண்டே மாபெரும் தொண்டு "

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு " என்று களப்பணி ஆற்றி கைகொடுத்து அரவணைத்து நிற்கிறது எனலாம். " செஞ்சிலுவைச் சங்கம் " செம்பிறைச் சங்கம் " இரண்டுமே ஒன்றுதான். ஹென்றி அவர்களின் சிந்தனையில் " செஞ்சிலுவை " ஆகியது அரபு நாடு களின் சிந்தனையில் செம்பிறையாய் " ஆகியது. இதுதான் வித்தியாசமே அன்றி செயற்படும் வகை ஒரே நிலைதான் என்பதை கருத்திருத்தல் நன்றாகும்.

  " இடர்வரும் போதும் உள்ளம் இருக்கிடும் போதும் - உடன் பிறந்தவர் போல் உள்ளம் இரங்கிடல் வேண்டும் ஓடும் உதிரத்திலே வடிந்து ஒழுகும் கண்ணீரிலே தேடிப்பார்த்தாலும் சாதி தெரிவது ண்டோ எவர் உடம்பிலும் சிவப்பே இரத்த நிறமாகும் எவர் விழி நீர்க்கும் உவர்ப்பே இயற்கைக் குணமாகும் பிறப்பினால் எவர்க்கும் உலகில் பெருமை வரமாட்டா சிறப்பு வேண்டுமெனில் நல்ல செய்கையே வேண்டும் " என்னும் அரிய தத்துவத்தை அகமிருத் தியே ஹென்றி டியூனண்ட் என்னும் மாமனிதர் உதவிக்கரம் கொடுக்கும் உன்னத பணியினை ஆரம்பித்தார். அவரின் எண்ணங் களை உலகெங்கும் எடுத்துச் செல்லும் அமைப்புகளாய் "செஞ்சிலுவைச் சங்கமும் "  , " செம்பிறைச் சங்கமும் " திகழ்கின்றன என்பதை அனைவரும் அகமிருத்துதல் அவசியமாகும். அற்புதமான பணியினை உலகினுக்கு அளித்திட்ட ஜெனிவாவின் புதல்வர் பிறந்த நாளினை கொண்டாடும் சிறப்பான தினமாக மலர்ந்ததுதான் மே மாதத்தில் வரும் எட்டாம்நாள் அதுவே  " உலக செஞ்சிலுவை நாளாகும்" . ஜொலித்து நிற்கிறது எனலாம்.

  வசதிபடைத்த ஹென்றி அவர்கள் பிற்காலத்தில் பிச்சைக்காரன் போலவே வாழ்ந்தார்." நான் ஓரிரு ரொட்டித் துண்டுகளில் வாழ்கிறேன்.என்னுடைய சாயம் போன கோட்டை செஞ்சிலுவைச் சங்கத்துக்கு உதவி கேட்க வரும் பொழுது மையால் கருப்பாக்கிக் கொள்ளுகிறேன். எங்கேனும் இருக்கும் கதவுகளின் ஓரமாய் இரவில் படுத்து இரவில் படுத்துக் கொள்ளுகின்றேன் ".

நோபல் பரிசு கிடைத்தும் அதனையும் செஞ்சிலுவை அமைப்புக்கே வழங்கிய அன்பின் உருவத்தின் பிறந்தநாளைக் கொண்டாடும் தினந்தான் மே எட்டாம் நாளாகும்.

 
ஹென்றி டியூனண்ட்

No comments: