Friday, May 7, 2021 - 12:18pm
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கணித பிரிவின் புதிய பாடத் திட்டத்திற்கமைய குறித்த மாணவன் 3A சித்தி பெற்று தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இம் மாணவன் கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் 9A சித்தி பெற்றிருந்ததுடன் , தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 182 புள்ளிகளை பெற்று சித்தி அடைந்துள்ளார். அதேவேளை கடந்த 2014ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பற்றி பதக்கம் வென்றுள்ளார். கல்வி செயற்பாடுகள் மாத்திரமின்றி இணை பாடவிதான செயற்பாடுகளிலும் தனது திறமைகளை வெளிக்காட்டி பல வெற்றிகளை பெற்றுள்ளார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment