கடற்படை, வாழைத்தோட்ட பகுதியில் அதிக தொற்று ஏற்பட காரணத்தை கண்டறியவும்
ராஜித சேனாரத்னவுக்கு மே 27 வரை விளக்கமறியல்
ராஜித சேனாரத்ன தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு
நிராகரிக்கப்பட்ட வேட்புமனு தொடர்பில் ஞானசார தேரர் மனு
வாகனங்கள் உட்பட ஆடம்பரப் பொருட்கள் இறக்குமதி தடை
18ஆம் திகதி 6.18க்கு வீடுகளில் விளக்கேற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள்
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற தயார்
கடற்படை, வாழைத்தோட்ட பகுதியில் அதிக தொற்று ஏற்பட காரணத்தை கண்டறியவும்
Monday, May 11, 2020 - 9:07pm
- திட்டங்கள் முன்னெடுக்கும்போது தவறுகள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்யவும்
- எதிர்கால இடர்நிலையை விளங்கி பின்வாங்காது செயற்படுங்கள்
- மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அடிக்கடி பரிசோதிக்கவும்
கடற்படை மற்றும் வாழைத்தோட்ட பகுதியில் அதிக எண்ணிக்கையில் கொரோனா நோய்த்தொற்றுடையவர்கள் உருவாக என்ன காரணம் என்பதை கண்டறிந்து பரிசோதனைகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் கொவிட் 19 ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியுடன் இன்று (11) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தெரிவித்தார்.
- எதிர்கால இடர்நிலையை விளங்கி பின்வாங்காது செயற்படுங்கள்
- மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அடிக்கடி பரிசோதிக்கவும்
முழு நாட்டிலும் பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று வந்த போதும் அதனுடன் பஞ்சம் ஏற்பட இடமளிக்கக்கூடாது. திட்டங்களை முன்னெடுக்கும் போது முன்னர் ஏற்பட்ட தவறுகளை பாடமாகக் கொண்டு அத்தகைய தவறுகள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் செயற்திறமாக பேணி கொவிட் 19 ஒழிப்புக்காக சளைக்காத தைரியத்துடன் செயற்பட வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அடிக்கடி பரிசோதிக்கவும்
பஸ், முச்சக்கர வண்டிகள் மற்றும் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் தளங்கள், மெனிங் சந்தை போன்ற மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களில் உள்ளவர்களை அடிக்கடி எழுமாறாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பாடசாலைகளை ஆரம்பித்தல்
வைரஸ் பரவலை தடுப்பதற்கு இத்தகைய இடங்களில் ஒன்றுகூடுபவர்களுக்கு அறிவூட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பாடசாலை பிள்ளைகள் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்த வழிகாட்டல் சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்பரிந்துரைகளின் படி பாடசாலைகளை திறக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஊடகங்களின் வாயிலாக பிள்ளைகளுக்கு விரிவாக அறிவூட்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வெளிநாட்டிலுள்ளவர்களை அழைத்து வருதல்
வெளிநாடுகளில் கல்வி கற்ற மாணவர்கள் மற்றும் தற்காலிக வீசாக்களையுடைய 3297 பேர் தற்போது அழைத்து வரப்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் உள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் போது நாட்டுக்கு பாதிப்பு இல்லாத வகையில் கட்டுப்பாட்டுடன் அதனை செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மதுபான பாவனை
சட்ட விரோத மதுபான பாவனை காரணமாக ஏற்படும் சுகாதார பிரச்சினைகளுடன், கிராமிய மக்கள் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அதிக விலையில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு துறையினர் சுட்டிக்காட்டினர். இதன் மூலம் ஏற்படும் இடர் நிலைமை குறித்து சுகாதார அதிகாரிகளினால் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
உடல், உள ஆரோக்கியம்
வீடுகளில் இருக்க வேண்டியிருந்ததால் நகரப்புர மக்களின் வாழ்க்கையிலும் பெரும் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. இது போன்ற நிலைமைகளை தவிர்ப்பதற்கு சுகாதார பரிந்துரைகளின் படி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சிகள் மற்றும் ஏனைய உள ஆரோக்கிய செயற்பாடுகளையும் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.
கடவுச்சீட்டு, அடையாள அட்டை விநியோகம்
தரவுகளை ஒரு முறைமைக்குள் கோவைப்படுத்தி, கடவுச் சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை மாவட்ட மட்டத்தில் வழங்குவதை விரைவுபடுத்த முடியுமா என்று ஜனாதிபதி வினவினார்.
விவசாய அறுவடை
விவசாய அறுவடைகளை நீண்ட நாள் வைத்திருப்பதற்கான தொழிநுட்பம் மற்றும் முகாமைத்துவ முறைமைகளை மீண்டும் ஆராய்ந்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்துமாறும் ஜனாதிபதி செயலணியிடம் தெரிவித்தார்.
கலந்து கொண்டோர்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட மருத்துவ நிபுணர் சஞ்சீவ முனசிங்க ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். நன்றி தினகரன்
ராஜித சேனாரத்னவுக்கு மே 27 வரை விளக்கமறியல்
Wednesday, May 13, 2020 - 9:16pm
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிர்வரும் மே 27ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (13) மாலை குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜரானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரை இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.
வெள்ளை வேன் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட பிணையை, கொழும்பு மேல் நீதிமன்றம் இரத்து செய்ததை அடுத்து, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, குற்றப் புலனாய்வு பிரிவுக்கு (CID) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
ராஜித சேனாரத்ன தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு
Wednesday, May 13, 2020 - 10:01pm
விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை, நீர்கொழும்பு பல்லன்சேனவிலுள்ள இளம் குற்றவாளிகளை சீர்திருத்தும் மையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மே 27 வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ள அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திலிருந்து இவ்வாறு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக விளக்கமறியல் செய்யப்படும் அனைத்து சந்தேகநபர்களும் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்படும் நடவடிக்கைக்கு அமைய, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் (நிர்வாம்) பந்துல ஜயசிங்க, தெரிவித்தார்.
புதிதாக சிறைவரும் கைதிகள் கொவிட்-19 நோய் அச்சுறுத்தல் காரணமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 14 நாட்கள் பூசா, நீர்கொழும்பு - பல்லன்சேன, போகம்பறை ஆகிய சிறைச்சாலைகளில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர் குறித்த விளக்கமறியல் கைதிகள், உரிய சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
நிராகரிக்கப்பட்ட வேட்புமனு தொடர்பில் ஞானசார தேரர் மனு
Wednesday, May 13, 2020 - 8:32pm
தமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக கலகொடஅத்தே ஞானசர தேரர், உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை (writ petition) தாக்கல் செய்துள்ளார்.
இன்று (13) தாக்கல் செய்த குறித்த மனுவில், தனது தலைமையில் குருணாகல் மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பித்த வேட்புமனுவை குருணாகல் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் நிராகரிப்பதாக எடுத்த முடிவை செல்லுபடியற்றது என உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியுள்ளார். .
'அபே ஜன பல பக்ஷய' சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வேட்பு மனுவுடன், வேட்பாளரின் பிரமாணப்பத்திரத்தில் (affidavit) காணப்பட்ட பிரச்சினை காரணமாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அதனை நிராகரித்துள்ளதாகவும், தேர்தல் சட்டங்களின்படி, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு அதனை நிராகரிப்பதற்கான எவ்வித அதிகாரமும் இல்லையென, ஞானசார தேரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட, அத்துரலிய ரத்தன தேரர் உள்ளிட்டோரின் கொழும்பு மாவட்டத்திற்கான வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்படமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
வாகனங்கள் உட்பட ஆடம்பரப் பொருட்கள் இறக்குமதி தடை
Thursday, May 14, 2020 - 11:56pm
ஆடம்பர மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று (14) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஆயினும் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை என அவர் தெரிவித்தார்.
நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதோடு, இது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்கள் அல்லாத, ஆயினும் ஆடம்பர பொருள் பிரிவிற்குள் வகைப்படுத்தப்படாத, கட்டுமானம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் போது, அதற்கான பணத்தை 180 நாட்களின் பின்னர் செலுத்துதல் எனும் அடிப்படையில் அப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியுமாயின் அவற்றுக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட, உள்ளூர் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் சுய தொழிலாளர்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின், இவ்விடயம் தொடர்பில் நிதியமைச்சின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சிறிய, நடுத்தர மற்றும் பாரிய கைத்தொழிலாளர்களுக்கு மூலப்பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்பவர்கள் தங்களது பிரச்சினைகளை, நிதி அமைச்சுக்கு தெரியப்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், ஆடம்பர மோட்டார் வாகனங்கள், குளிர்சாதனப் பெட்டிகள், அதிவிசேட குளிசாதனப் பெட்டிகள், ஆடம்பர பொருட்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய காய்கறிகள், பழங்கள், மிளகுத்தூள் மற்றும் தேவையற்றவை எனக் கருதப்படும் அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்வது மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதியைக் குறைப்பதன் மூலமும், உள்நாட்டு நாணயம் வெளியில் செல்வதை தடுப்பதன் மூலமும் இலங்கை ரூபாயை வலுப்படுத்த முடியும். அதற்காவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் 78 பக்கங்கள் உள்ளன.
சில பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில் வரி சதவீதங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
18ஆம் திகதி 6.18க்கு வீடுகளில் விளக்கேற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள்
Friday, May 15, 2020 - 6:00am
சீ.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் மாலை 6:18 க்கு மக்கள் தமது வீடுகளில் விளக்குகளை ஏற்றி இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
இந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அனுஷ்டிப்பதில் நாம் பலவிதமான தடங்கல்களை எதிர்நோக்குகின்றோம். முள்ளிவாய்க்காலுக்கு சென்று எங்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் வண்ணம் விளக்குகளை ஏற்றி மௌனமாக இறந்தவர்களைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரு சூழல் தற்போது இருக்கின்றதோ என்று எங்களுக்கு கூற முடியாது இருக்கின்றது.
அவ்வாறு செய்யக் கூடியவர்கள் அங்கு சென்று ஒரு விளக்கேற்றி மௌனமாக அஞ்சலி செலுத்தி வரக்கூடும் என்றால் மிகவும் நன்று. தற்போதைய நிலையைப் பார்க்கும்போது பொலிஸ், படையினர் ஆகியோரின் எதிர்ப்புகள் இவற்றில் இருப்பதை நான் காண்கின்றேன்.
அதில் இருக்கின்ற சிக்கல் என்னவென்றால் அவ்வாறானவர்களை தடுப்பு முகாமுக்கு கொண்டு போக எத்தனிக்கின்றார்கள். அப்படியானால் 14 நாட்கள் அவர்களைக் கொண்டுபோய் வைத்து இருக்கக்கூடும். ஆகவே முடியுமான மக்கள் அங்கு சென்று தங்களுடைய மனநிலையை வெளிப்படுத்தும் வண்ணம் நாங்கள் நடவடிக்கையில் இறங்கலாம்.
ஆனால் எங்களுடைய கட்சியை பொறுத்தவரையில் நாங்கள் இரண்டு விடயங்களை அன்றைய தினம் செய்ய இருக்கின்றோம்.இறந்த மக்களினுடைய நினைவாக பயன்தரும் மரங்களை நாட்ட இருக்கின்றோம். அது சம்பந்தமாக அந்தந்த மாவட்டங்களில் ஒருத்தரை அடையாளப்படுத்தி அவர்களுக்கு ஊடாக நாங்கள் மரங்களை வாங்கியும், பெற்றும் மக்களுக்கு தேவையானவர்களிடம் மரங்களை கொடுத்து தங்களுடைய வீட்டிலும் பயன்தரும் மரங்களை நாட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதை 16ஆம் 17ஆம் 18ஆம் திகதிகளில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
அது ஒரு முக்கியமான பெட்டகம் என்று நான் நினைக்கின்றேன். ஏன் என்றால் வெறுமனே எங்களுடைய மனோநிலையைப் பிரதிபலிக்கும் வண்ணம் விளக்குகளை ஏற்றுவதோடு நின்றுவிடாமல் வரும் காலத்திலே எங்களுடைய இறந்த உறவுகள் எதை நோக்கி எவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டார்களோ அதாவது எங்களுடைய வடக்கு, கிழக்கு தாயகப் பிரதேசம் நன்றாக முன்னேறவேண்டும், செழிக்க வேண்டும். அத்தோடு எல்லா விதத்திலும் நல்லதொரு நிலையை அடைய வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
அதைவிட உலகம் பூராகவும் எங்களுடைய தமிழ் உறவுகள் அன்றைய தினம் 18.18.18 க்கு அதாவது 18ஆம் திகதி மாலை 6 மணி 18 நிமிடத்திற்கு ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டிலே இறந்தவர்களை நினைத்து விளக்குகள் ஏற்ற வேண்டும். இது இலங்கையில் மாத்திரமன்றி எத்தனையோ நாடுகளிலே அன்றைய தினம் நடைபெறுகின்றது என்றார்.
யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - நன்றி தினகரன்
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற தயார்
Saturday, May 16, 2020 - 7:28am
இந்திய தூதுவர், சம்பந்தனுடன் தொலைபேசியில் உரையாடல்
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு தான் தயாராக உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று முன்தினம் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை தொலைபேசியில் தொடர்புகொண்ட உயர்ஸ்தானிகர், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு தான் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளும் பல காலங்களாக இணைந்து செயற்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தொடர்ந்து இருக்குமென இரா. சம்பந்தனும் உயர்ஸ்தானிகருக்கு உறுதியளித்தார்.
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது சான்றுகளை நேற்று முன்தினம் ஜனாதிபதியிடம் கையளித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னரே இரா. சம்பந்தனுடன் தொடர்புகொண்டு பேசியுள்ளார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment