.
அவுஸ்திரேலிய
தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மே மாதம் 18ம் திகதி
தனது 18 ஆவது வருட சேவையை கொண்டாடியது. 18 ஆண்டுகள்
எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத தொண்டர்கள் இந்த வானொலியில் பணியாற்றிக்
கொண்டிருக்கின்றார்கள். 18 வருடம் என்பது மிக நீண்ட காலம், இந்த நீண்ட காலப்பகுதியிலே 24 மணி நேரமாக
இந்த வானொலி இயங்கிக்கொண்டிருக்கிறது . தமிழ் சமூகத்துக்கு தேவையான அனைத்து
விடயங்களையும் அனைத்து தேவைகளையும் தேடிக் கொண்டுவந்து படைக்கின்றார்கள். இலாப நோக்கமற்ற இந்த நிறுவனம் 18 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையிலே முதலில்
நன்றி சொல்லப்பட வேண்டியவர்கள் இதன் நிர்வாகிகள். வருகின்ற இடர்களை எல்லாம் நீக்கி இதனை இயங்கச் செய்துகொண்டிருக்கின்றார்கள். ஆதரவாளர்கள், இந்த வர்த்தகர்களுடைய மிகப் பெரிய ஆதரவு ஒரு தாங்கு சகித்தியாக
இருக்கிறது , இதிலே இரவு பகலாக வேலை செய்துகொண்டிருக்கும் தொண்டர்கள் , வானொலியைக் கேட்டுக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் வானொலியோடு இணைந்து படைப்பாளிகளுக்கும் நிகழ்ச்சித்
தயாரிப்பாளர்களுக்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்கிக் கொண்டிருக்கும் அன்பு
ரசிகர்கள், இது தான் இவ்வளவு காலமும் இந்த வானொலி சீராக இயங்கிக்
கொண்டிருப்பதற்கு அடிப்படையாக இருக்கின்றது. சமுதாயத்தில் உள்ள எல்லோருக்கும் தேவையானது ஒரு நடுநிலையான வானொலி, அந்த நடுநிலையோடு 24 மணி
நேரமும் இரவும் பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றது இந்த வானொலி. இந்த வானொலி
இன்னும் நீண்டகாலம் மிக நீண்ட காலம் வாழவேண்டும் மக்களுக்காக தனது சேவையை இப்போது
வழங்கிக் கொண்டிருப்பது போன்று என்றென்றும் வழங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று
தமிழ் முரசு வாழ்த்துகின்றது.
No comments:
Post a Comment