பறந்தன பாரினில் பதினொரு ஆண்டுகள்
இறந்தவர் தொலைந்தவர் எத்தனை ஆயிரம்
மறந்திட முடியுமோ மடிந்தவர் நினைவினை?
மறைந்தவர் வலியினில் மலருமோ புதுயுகம்? 1
நிறைந்திடும் வாழ்வென நிம்மதி வருமென
குறைந்திடுந் துயரெனக் கூடிடுஞ் சுகமெனச்
சிறந்திடுந் தமிழெனச் சீர்பல வருமென
இறங்கினர் களத்தினில் எடுத்ததை முடித்திட. 2
கொடுமைகள் அழித்திடக் கொள்கையில் நின்றனர்
விடுதலை வேண்டியே வீரராய் மாண்டனர்
படுகுழி வீழ்ந்தனர் பதைத்திட இறந்தனர்
தடுத்திட எவருமே தரணியில் வந்திலர்! 3
பொன்னுயிர் நொடியினில் போய்விடும் அறிந்துமே
தன்னுயிர் தந்தனர் தமிழினித் தழைத்திட
மன்னுயிர் வாழ்ந்திட வரமென வழங்கிய
இன்னுயிர் போற்றியே ஏற்றுவம் விளக்கையே!! 4
சிட்னி
வைகாசி 2020
|
No comments:
Post a Comment