மரண அறிவித்தல்

.                                         
                                                                                                திரு .கணேஷ் சொக்கலிங்கம்


நோத் பரமாற்றாவில் வசித்தவரும், சிட்னி முருகன் ஆலயம், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஈழத் தமிழர் கழகம் ஆகியவற்றில் தன்னார்வத தொண்டராக சமூகப் பணியாற்றியவருமான கணேஷ் சொக்கலிங்கம் அவர்கள் மே  மாதம் 4 ம் திகதி திங்களன்று இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலம் சென்ற முருகேசு சொக்கலிங்கம், சிவபாக்கிவதி சொக்கலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,  கலாவதி சொக்கலிங்கம், மதனி தேவி ராஜநாயம்,  யோகன் சொக்கலிங்கம்,  பஞ்சு  சொக்கலிங்கம் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடன் மே மாதம்  9 ம்  திகதி சனிக் கிழமை காலை 10 மணி
முதல் 11 மணிவரை வெஸ்ட் சப்பேல் றோக்வூட்டில் இறுதி மரியாதைக்கு
வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து 11 மணி முதல் 12 மணிவரை இறுதிக்
கிரிகைகள் இடம் பெறும்.
தற்போது நாட்டில் நிலவும் கட்டுபாடுகளுக்கு அமைய இறுதிக் கிரிகைகள் இடம்  பெறுவதனால்  கட்டுப்பாட்டுகளுக்கு அமைவாகவே பார்வையாளர்கள் அஞ்சலிக்கு அனுதிகப்படுவார்கள்.

உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இவ் அறிவித்தலை ஏற்றுக்
கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகின்றீர்கள்.
மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்.

மா. மகிந்தன் 0421 496 123
ராம்  0422 067 890

No comments: