எழுத்தாளர்சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”சிறுகதை ஒலிப்பகிர்வு - கானா பிரபா

.

எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”

#ஈழத்தவர்_கதை_கேட்போம்

சிறுகதை ஒலிப்பகிர்வு

ஒலி வடிவம் : சங்கீதா தினேஷ் பாக்யராஜா


ஈழத்து எழுத்தாளர்களது தேர்ந்தெடுத்த சிறுகதைகளை அவர்களது எழுத்தின் தனித்துவத்தைக் காட்டவெண்ணிக் குரல் பகிர்வுகளாகத் தொடரும் முயற்சியின் அடுத்த படைப்பு இது,

எழுத்தாளர் சுதாராஜ், இவரின் இயற்பெயர் சிவசாமி இராஜசிங்கம் என்பதாகும். ஈழத்தின் மிக முக்கியமான சஞ்சிகைகளான சிரித்திரன், மல்லிக்கை உள்ளிட்டவைகளிலும், வீரகேசரி உள்ளீட்ட பல்வேறு பத்திரிகைகளிலும் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

எனது வாசிப்பு அனுபவத்தில் 1987 ஆம் ஆண்டில் இந்திய இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து மடத்துவாசல் பிள்ளையாரடியில் இருந்த காலத்தில் இவரின் "இளமைக் கோலங்கள்" என்ற நாவல் தான் இவரை எனக்கு முதலில் அறிமுகப்படுத்தியது. இவர் எழுத்தில் இருந்த வித்தியாசமான நடைதொடர்ந்தும் என்னைச் செங்கை ஆழியான் தாண்டி சுதாராஜ்ஜின் எழுத்துக்களையும் வாசிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டது.

வித்தியாசமான களங்களைத் தன் சிறுகதைகளுக்குத் தேர்ந்தெடுப்பதுஅல்லது ஒரே களத்தில் வித்தியாசமான கதைக்கருக்களைத் தேர்ந்தெடுப்பதுஇவரின் பலங்களில் ஒன்று. இவரின் ஒரு சிறுகதையை வாசித்து முடித்தால் கிடைக்கும் திருப்தி


இங்கே குரல் பகிர்வாகாத் தரும் “அடைக்கலம்” சிறுகதை,
1991 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் நடாத்திய வைர விழா சிறுகதைப் போட்டியில் பரிச பெற்றது.அப்போது நான் ஈழத்தில் இருந்தேன். யாழ்.பூபாலசிங்கம் புத்தகசாலையில் வைத்து ஆனந்தவிகடனை வாங்கிதீராத ஆவலால் இணுவிலிற்குச் சென்று வாசிக்கவிரும்பாமல்ஒரு ஒரமாகச் சைக்கிளை நகர்த்தி சைக்கிள் பாரில் இருந்தபடியே நான் வாசித்துத் தீர்த்த சிறுகதை இது. ஆனந்த விகடனால் "ஒரு மெளனத்தின் அலறல்" என்ற தொகுப்பிலும் இடம்பிடித்தது இந்தச் சிறுகதை.


இந்தச் சிறுகதையை ஒலி வடிவில் தரவேண்டும் என்று பேராவல் கொண்டபோது அன்புக்குரிய சுதாராஜ் அவர்கள் உடனேயே அனுமதி தந்தார். தனிப்பட்ட ரீதியின் என் நேசத்துக்குரிய வட்டத்தில் இருப்பவர் என்ற பெருமையும் எனக்குண்டு.

அடைக்கலம் சிறுகதையைத் தன் வழக்கமன பேச்சாற்றலால் சங்கீதா தினேஷ் பாக்யராஜ் உயிரோட்டமான திரைச் சித்திரம் போலப் படைத்திருக்கிறார். அவர் இதற்கு முன் படைத்த குரல் பகிர்வுக்கு இன்னமும் பல நண்பர்கள் பாராட்டி வருவது இம்முயற்சிக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

இதோ “அடைக்கலம்” ஒலி வடிவைக் கேளுங்கள் உங்கள் கருத்தை மறவாது சொல்லுங்கள்.


No comments: