மெல்பனில் அமரர் சிசு. நாகேந்திரன் - நினைவரங்கு


                               அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்
காப்பாளரும் எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான ( அமரர் ) கலைவளன் சிசு. நாகேந்திரன் அய்யாவின் நினைவரங்கு நிகழ்ச்சியும், அவர் எழுதிய மூன்று நூல்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி                         (15-03-2020) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு மெல்பனில் Vermont South Learning Centre ( Karobran Drive, Vermont South 3133)  மண்டபத்தில் நடைபெறும்.

சங்கத்தின் துணைத்தலைவர் திரு. மணியன் சங்கரன் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில், விக்ரோரியா தமிழ்ச்சங்கம், தமிழர் புனர் வாழ்வுக்கழகம்,  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் , கேசி தமிழ் மன்றம் மற்றும் தமிழ் மூத்த பிரசைகள் அமைப்பு ,  இலங்கை மாணவர் கல்வி நிதியம் முதலான சமூக அமைப்புகளின்  பிரதிநிதிகளும் உரையாற்றுவர்.
வாசிப்பு அனுபவப்பகிர்வு அரங்கு
சிசு. நாகேந்திரன் அய்யா எழுதிய அந்தக்காலத்து யாழ்ப்பாணம் என்னும் நூலை திருமதி புஸ்பா சிவபாலனும், பிறந்த மண்ணும் புகலிடமும் நூலை திருமதி கலாதேவி பாலசண்முகனும், பழகும் தமிழ்ச் சொற்களின் மொழிமாற்று அகராதி ( தமிழ் – ஆங்கிலம் ) நூலை திரு. அசோக்கும் சபையோருக்கு மீளவும் அறிமுகப்படுத்தி, இந்நூல்களின் சமூகப்பயன்பாடுகள் குறித்து தங்கள் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் சங்கத்தின் செயலாளர் கலாநிதி மு. ஶ்ரீகௌரி சங்கர் நன்றியுரை நிகழ்த்துவார்.  அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு:   முருகபூபதி
-->
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் – அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்   -  தொலைபேசி: 0416 625 766







No comments: