அருணகிரி தமிழருந்தி ஆன்மீகவழி நடப்போம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... ஆஸ்திரேலியா


கந்தருக்கு அலங்காரம் 
கந்தருக்கு அனுபூதி
கந்தருக்கு அந்தாதி
தந்துநின்றார் அருணகிரி
வேலவனின் வாகனத்தை
வேலவனின் கொடியதனை
வேலவனின் வேலதனை
விருத்தமாய்  எமக்களித்தார்  ! 

தாளமொடு தமிழ்பாட
ஆழநிறை சொல்லமைத்து
நீளமுள்ள கவிதைகளாய்
நெக்கருக  உவந்தளித்தார்
செந்திலவன் திருவடியை
சந்ததும் நினைப்பதற்கு
சந்தமதைத் தமிழாக்கி
தந்துநின்றார் அருணகிரி  !

பக்தியொடு தத்துவத்தை
பாடினின்றார் சந்தத்தில் 
கையாண்ட  சந்தங்கள்
கந்தனருள் பெற்றனவே 
எங்கள் தமிழிலக்கியத்தில்
சந்தமழை சிந்துகவி
அருணகிரிக் கவிமேகம்
அள்ளியே தந்ததுவே  !


இலக்கியத்தில் இசைபுகுத்தி
திருப்புகழை எமக்களித்த
இணையில்லா வரகவியே
எங்களது அருணகிரி 
திருப்புகழைப் பாடிடுவார்
திருமுருகன ருள்பெறுவர் 
அருணகிரி தமிழருந்தி

ஆன்மீகவழி நடப்போம் ! 

No comments: