ஸ்வீட் சிக்ஸ்டி - ராஜா தேசிங்கு - சுந்தரதாஸ்

.


 தமிழ் திரையுலகில் புகழ்பூத்த தயாரிப்பாளராக திகழ்ந்தவர் கிருஷ்ணா பிக்சர்ஸ் அதிபர்  லேனா செட்டியார். எம்ஜிஆரின் மதுரை வீரன் படத்தை தயாரித்து மாபெரும் வெற்றி கண்டவர், மதுரைவீரன் வெற்றியை தொடர்ந்து எம்ஜிஆரின் நடிப்பில் அவர் தயாரித்த படம் தான் ராஜா தேசிங்கு. 

இந்த படம் இந்து முஸ்லீம் நட்பையும் உறவு முறையையும் அடிப்படையாகக்கொண்ட சரித்திர கதையாகும். இதில் ராஜாதேசிங்காகவும் தாவுத் கானாகவும் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இவருடன் எஸ்எஸ் ராஜேந்திரன், பானுமதி, பத்மினி, என் எஸ் கிருஷ்ணன், டி கே ராமச்சந்திரன், பாலைய்யா, எம் ஜி சக்கரபாணி என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. படத்திற்கான திரைக்கதை வசனத்தை கவிஞர் கண்ணதாசன் எழுதி இருந்தார், ரகுமான் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது கண்ணதாசனின் வீச்சான வசனங்களாகும். 

கர்ண பரம்பரை கதையான  ராஜா தேசிங்கு நாடகமாகவும் தெருக்கூத்தாகவும்  தமிழகமெங்கும் நடிக்கப்பட்ட கலைப் படைப்பாகும். சர்ச்சைக்குரிய இந்த கதையை படமாக்குவதில் எம்ஜிஆருக்கு பெரிய அளவில் ஆர்வம் இருக்கவில்லை . ஆனாலும் லீனாவின் மீதுள்ள மதிப்பினால் நடிக்க உடன்பட்டார், படத்தில் இந்துவாகவும் முஸ்லிமாகவும் எம்ஜிஆர் நடித்தார்.  இந்து எம்ஜிஆர் செஞ்சி மன்னனின் மகனாகவும்,  செஞ்சி மன்னனின் முஸ்லீம் ஆசை நாயகிக்கு பிறந்த எம்ஜிஆர் முஸ்லிமாகவும் நடித்தார்.  இந்த முஸ்லீம் கதாபாத்திரத்தை இலங்கையிலும் மலேசியாவிலும் ரசிகர்கள் ஏற்கவில்லை. இதனால் படம் இலங்கையில் திரையிடப்பட எதிர்ப்பு ஏற்பட்டு படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. 





 தங்கள் தலைவன் இப் படத்தில் இருப்பதை எம்ஜிஆர் ரசிகர்கள் விரும்பவில்லை , ஆனால் இதில் இரட்டை வேடத்தில் வரும் இரண்டு எம்ஜிஆர் படத்தில் இருப்பதை ரசிகர்கள் அடியோடு ஏற்கவில்லை. அதேபோல் செஞ்சி அரசனால் அடக்கமுடியாத டெல்லி பாதுஷாவின் குதிரையை பல ஆண்டுகள் கழித்து தான் சென்று அடக்குவதாக காட்டினால் கிழட்டு குதிரையை அடக்குவது போல் ஆகாதா என்று எம்  ஜி ஆர் லெனாவிடம் வினவினார். இதனால் கதையில் சிறு மாற்றம் செய்யப்பட்டது.

 படத்தில் கிருஷ்ண பகவானின் பத்து அவதாரங்களைக் குறிக்கும் பாற்கடல் அலைமேலே என்ற பாடல் பத்மினியின் நடனத்துடன் படமானது. இப்படத்தில் முஸ்லிம் பெண்ணான பத்மினி கிருஷ்ணரைப் பற்றி பாடி ஆடுவது படத்துக்கு பொருந்தாது என்று எம்ஜிஆர் வாதிட்டார், ஆனால் லேனா விற்கு அந்த நடனத்தை விட்டுவிட விருப்பமில்லை ஆகவே படத்தின் இடைவேளையின் போது அதனை சேர்த்துவிட்டார். 



ஆரம்பத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக பத்மினியும் என்டி ராமராவ் ஜோடியாக பானுமதியும் நடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது ஆனால் கண்ணதாசனின் உணர்ச்சிகரமான வசனங்களுக்கு ராமராவ் இன் நடிப்பு பொருந்துவதால் அவர் படத்தில் இருந்து கடத்தப்பட்டார் ஒப்பந்தமானார் அவருக்கு ஜோடியாக நடிக்க பானுமதி மறக்கவே எம்ஜிஆரின் ஜோடியாக பானுமதி மாற்றப்பட்டு எஸ்எஸ்ஆர் ஜோடியாக பத்மினி நடித்தார் இதுபோன்ற பல காரணங்களினால் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்ட ராஜா தேசிங்கு படம் 1960 இல் திரைக்கு வந்து தோல்வி அடைந்தது டிஆர் ராம்நாத் டைரக்ட் செய்து ஜி ராமநாதன் இசையமைத்த படம் வெற்றியடையவில்லை ஆனாலும் நட்சத்திர நடிகர்களை ஒரே படத்தில் சேர்த்து சாதனை புரிந்து விட்டார் தியாகராஜ நகரில் இருந்த கிருஷ்ணா பிக்சர்ஸ் அலுவலகம் பிற்காலத்தில் கிருஷ்ணர் கோயிலாக உருமாறியது



No comments: