அத்தியாவசியமற்ற செயற்பாடுகளுக்குத் தடை CORONA VAIRUS

.


அவுஸ்திரேலியாவின் NSW, VIC மற்றும் ACT பிராந்தியங்களில் அத்தியாவசியமற்ற செயற்பாடுகளுக்குத் தடை
நாளை திங்கட்கிழமை நண்பகல் முதல் அத்தியாவசியமற்ற தேவைகள் என்று கருதப்படும் செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
இந்தத் தடை எரிப்பொருள் நிரப்பு நிலையங்கள், வங்கித் தொழிற்பாடுகள், மருந்தகங்கள், பொருட்களைக் காவிச் செல்லும் செயற்பாடுகள் (freight and logistics), பொருட்களை வீட்டுக்கு எடுத்து வரும் சேவை (home delivery services) ஆகியவற்றுக்குப் பொருந்தாது என்று அறிவிக்கப்படுகின்றது.
மத வழிபாட்டிடங்கள், களியாட்டச்சாலைகள், மதுபானச்சாலைகள், இருந்து உணவருந்தும் உணவக உள்ளரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள் ஆகியவை பொதுப் பாவனைக்குத் தடை செய்யப்படும் இடங்களில் உள்ளடங்கும். உணவுகளை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் (Takeaway) உணவகச் செயற்பாடுகளுக்குத் தடை இல்லை.
பள்ளிக்கூடங்கள் நாளையும் வழமை போல் இயங்கும் என்றும், ஆனால் பிள்ளைகளை வீட்டில் வைத்திருக்க விரும்பும் பெற்றோருக்கும் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
விக்டோரியா மாநிலத்தின் பள்ளி விடுமுறைகள் முன் கூட்டியே வரும் செவ்வாய் முதல் ஆரம்பிக்கின்றன.
ATBC ஊடகச் செய்தி

No comments: