ஜனாதிபதிக்கான மருத்துவ பரிசோதனை நெறிமுறைகளை மீறிய டொனால்ட் ட்ரம்ப்
ஈரானின் போர்ட்டோ அணுசக்தி நிலையத்துக்கான தடைகள் தொடர்பான சலுகைகள் நிறுத்தம் - அமெரிக்கா
முகமூடி அணிவதற்கான தடை அடிப்படை உரிமை மீறலாகும் : ஹொங்கொங் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
ஈரானில் ஆர்ப்பாட்டங்களின் போது 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர் - சர்வதேச மன்னிப்பு சபை
குழந்தைகள் கடத்தல் விவகாரம்: நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் - பொலிஸார் தகவல்
ஹொங்கொங்கிற்கு எதிராக இரு சட்ட மூலங்களை நிறைவேற்றியது அமெரிக்கா!
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள்
ஜனாதிபதிக்கான மருத்துவ பரிசோதனை நெறிமுறைகளை மீறிய டொனால்ட் ட்ரம்ப்
மேரிலான்ட்டில் பெதெஸ்டா எனும் இடத்திலுள்ள வோல்ட்டர் றீட் தேசிய இராணுவ மருத்துவமனைக்கு கடந்த சனிக்கிழமை டொனால்ட் ட்ரம்பால் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயம் தொடர்பான தகவல்கள் நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள்
ஈரானின் போர்ட்டோ அணுசக்தி நிலையத்துக்கான தடைகள் தொடர்பான சலுகைகள் நிறுத்தம் - அமெரிக்கா
முகமூடி அணிவதற்கான தடை அடிப்படை உரிமை மீறலாகும் : ஹொங்கொங் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
ஈரானில் ஆர்ப்பாட்டங்களின் போது 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர் - சர்வதேச மன்னிப்பு சபை
குழந்தைகள் கடத்தல் விவகாரம்: நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் - பொலிஸார் தகவல்
ஹொங்கொங்கிற்கு எதிராக இரு சட்ட மூலங்களை நிறைவேற்றியது அமெரிக்கா!
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள்
ஜனாதிபதிக்கான மருத்துவ பரிசோதனை நெறிமுறைகளை மீறிய டொனால்ட் ட்ரம்ப்
19/11/2019 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது ஜனாதிபதி பதவி நிலைக்கான மருத்துவ பரிசோதனை நெறிமுறைகளைப் பின்பற்றாது இராணுவ மருத்துவமனையொன்றுக்கு நடு இரவு வேளையில் விஜயம் செய்துள்ளார்.
மேற்படி மருத்துவமனையில் நாட்டின் ஜனாதிபதிக்கும் இராணுவ உத்தியோகத்தர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 73 வயதான ட்ரம்ப் எதுவித முன்னறிவிப்புமின்றி அங்கு விஜயம் செய்தமை அவருக்கு ஏதாவது உடல் பிரச்சினை ஏற்பட்டு உடனடி சிகிச்சை பெற நேர்ந்திருக்கலாம் என வதந்தி பரவ வழிவகை செய்துள்ளது.
அவரது விஜயத்தின்போது முக்கிய பிரமுகர் ஒருவர் வருவதாக மட்டும் மருத்துமனை உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏனெனில் முக்கியஸ்தர்கள் வருவதாக அறிவிக்கப்பட்டால் அந்த முக்கியஸ்தரின் பாதுகாப்புக் கருதி அந்த மருத்துவமனையின் சில பகுதிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில் ஜனாதிபதி அங்கு வருவதை அறியாத மருத்துவமனை உத்தியோகத்தர்கள் அவரது மருத்துவபரிசோதனைக்காக பின்பற்றப்படும் விசேட நெறிமுறைகளைப் பின்பற்றாது இருந்துள்ளனர்.
இதனால் அங்கிருந்த சிறிய மருத்துவ குழுவினரால் ட்ரம்புக்கு விரைவான துரித மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த விஜயத்திற்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை இரவு டொனால்ட் ட்ரம்ப் பூரண ஆரோக்கிய நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
மேற்படி மருத்துவ பரிசோதனை குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஸ்ரெபனி கிறிஷ் கூறுகையில், ட்ரம்பிற்கு வருடாந்த உடல் நலப் பரிசோதனையே மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதேசமயம் டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை டுவிட்டர் இணையத்தளத்தில் தன்னால் பதிவேற்றம் செய்யப்பட்டசெய்தியில், தான் கடந்த பெப்ரவரி மாதம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையின்போது தனது உடல் நலம் மிகவும் ஆரோக்கியமாகக் காணப்பட்டதாகவும் தனது நிறை 243 இறாத்தலாகவுள்ள அதேசமயம் தனது இரத்த அழுத்த அளவு 118/80 ஆக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
ஈரானின் போர்ட்டோ அணுசக்தி நிலையத்துக்கான தடைகள் தொடர்பான சலுகைகள் நிறுத்தம் - அமெரிக்கா
20/11/2019 ஈரானின் போர்ட்டோ அணுசக்தி நிலை யம் குறித்து தன்னால் வழங்கப்பட்டிருந்த தடைகள் தொடர்பான சலுகைகளை நிறுத்தப்போவதாக அமெரிக்கா நேற்று முன்தினம் திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
தனது யுரேனிய செறிவூட்டல் நடவடிக்கையை மீள ஆரம்பித்துள்ளதாக ஈரான் அறிவித்ததையடுத்து அந்நாட்டுடன் உலக அதிகார சக்திகளால் செய்து கொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையின் முக்கிய கூறுகளில் ஒன்றை முடிவுக்கு கொண்டு வருவதாக மேற்படி அறிவிப்பு உள்ளது.
போர்ட்டோ அணுசக்தி நிலையத்திலான செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரோஹானி அறிவித்திருந்தமை குறித்து சுட்டிக்காட்டிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, தடைகள் தொடர்பில் சலுகை வழங்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் ஈரான் மிகவும் மோசமான முன்னடியெடுத்து வைப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் அதனால் அமெரிக்கா எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் போர்டோ அணுசக்தி நிலையத்துடன் தொடர்புபட்ட தடைகளிலான சலுகைளை நிறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து வரும் நாடொன்றுக்கு யுரேனியத்தை செறிவாக்கம் செய்வதற்கு உரிமையாகவுள்ள அளவு பூஜ்ஜியமாகவுள்ளதாக தெரிவித்த அவர், ''இந்நிலையில் ஈரான் இதற்கு முன் இரகசியமானதாகவிருந்த அணுசக்தி நிலையத்தில் செறிவாக்கத்தை மீள ஆரம்பிப்பதற்கு எதுவித காரணமும் கிடையாது. அதனால் அந்நாடு உடனடியாக தனது செயற்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வருடம் ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து தனது நாட்டை வாபஸ் பெற்றுக்கொண்டது முதல் ஈரானுக்கு எதிரான தடைகள் மீள நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும் அணுசக்தி உடன்படிக்கையில் தற்போதும் உள்ள ஏனைய நாடுகளுக்கு அந்த உடன்படிக்கையை முன்னெடுக்க அனுமதிக்கும் வகையில் சில தடைகள் தொடர்பான சலுகைகளை அமெரிக்கா தொடர்ந்து பேணி வருகிறது. நன்றி வீரகேசரி
முகமூடி அணிவதற்கான தடை அடிப்படை உரிமை மீறலாகும் : ஹொங்கொங் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
19/11/2019 ஹொங்கொங்கில் புதிய கைதி பறிமாற்ற சட்டமூலகத்தை முற்றிலும் கைவிடுவதாக ஹொங்கொங் நிர்வாகம் அறிவித்திருந்த போதும், சீனாவிடம் இருந்து சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையுடன் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றும் கலகமடக்கும் பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டது.
பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த ஹொங்கொங் பல்கலைக்கழகத்திலிருந்து பலர் கயிற்றின் மூலம் வெளியில் இறங்கி இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனர்.
போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொலிடெக்னிக் பல்கலைக்கழகத்தைவிட்டு தப்பிக்க முயன்ற சுமார் 100 பேர் பொலிஸாரின் கண்ணீர் புகைகுண்டு மற்றும் இறப்பர் குண்டுகளால் தாக்கப்பட்டனர். அவர்களில் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹொங்கொங்கில் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்துக்கான அண்மைய களமாக குறித்த பல்கலைக்கழகம் மாறியுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த வன்முறையில் 116 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது அண்மைக் காலங்களில் நடைபெற்ற மிக மோசமானதொரு வன்முறை சம்பவமாக கருதப்படுகின்றது.
சர்ச்சைக்குரிய சட்டமூலத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தற்போது அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் போராட்டமாக வளர்ந்துள்ளது.
அதேவேளை, போராட்டக்காரர்கள் முகமூடி அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை, அரசமைப்புக்கு எதிரானது என ஹொங்கொங் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நன்றி வீரகேசரி
ஈரானில் ஆர்ப்பாட்டங்களின் போது 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர் - சர்வதேச மன்னிப்பு சபை
21/11/2019 ஈரானில் எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நசுக்க அந் நாட்டு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 106 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவிக்கிறது.
இது தொடர்பில் பிரித்தானியாவை அடிப்படையாகக் கொண்ட உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தொண்டு ஸ்தாபனமான மேற்படி சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஈரானிய பாதுகாப்புப் படையினர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நசுக்க அளவுக்கு மீறிய படை பலத்தைப் பயன்படுத்தியுள்ளதாகவும் இதன்போது 21 நகர்களில் 106 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேற்படி அறி க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்கள் இடம்பெற்ற போது சம்பவ இடத்தில் இருந்தவர்கள், ஈரானுக்குள் செயற்படும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நம்பகமான வட்டாரங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே பலியானவர்களின் தொகை கணிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களை நசுக்க மேற் கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது கொல்லப்பட்டவர்களின் உண்மையான தொகை இந்தத் தொகையிலும் அதிகம் எனவும் இதன்போது 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக கருதுவதாகவும் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் ஈரானிய அரசாங்கம் எதுவித விமர்சனத்தை யும் இதுவரை வெளியிடவில்லை. நன்றி வீரகேசரி
குழந்தைகள் கடத்தல் விவகாரம்: நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் - பொலிஸார் தகவல்
22/11/2019 குழந்தைகளை கடத்தி, அடைத்து வைத்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலம்- ஹிராபூரிலுள்ள கிளையின் சார்பில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து, 4 குழந்தைகளை தங்க வைத்து இருந்ததாகவும், நன்கொடை வசூலிக்க வைத்து அவர்களை சித்ரவதை செய்ததாகவும் நித்யானந்தா மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
குறித்த முறைப்பாடு தொடர்பாக நித்யானந்தா, அவரது பெண் சீடர்களும், ஆசிரம நிர்வாகிகளுமான சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் உள்ளிட்டோர் மீது ஆமதாபாத் பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
அவர்களில் சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன் 4 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். அவர்களில் இருவர் பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் குழந்தைகள் ஆவர். அவர்கள் இருவரும் ஜனார்த்தன சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஜனார்த்தன சர்மாவின் மூத்த மகள்களான 21 வயதான லோக முத்ரா , 18 வயதான இ நந்திதா சர்மா ஆகியோர் இன்னும் ஆமதாபாத் ஆசிரமத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவரது மகள்களை சந்திக்க ஆசிரம நிர்வாகிகள் அனுமதி வழங்க மறுத்ததால், ஜனார்த்தன சர்மா குஜராத் உதவியை நாடினார். இதைத்தொடர்ந்துதான் அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆமதாபாத் பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, “நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார் என்றும், தேவைப்பட்டால் வெளிநாட்டில் இருக்கும் அவரை உரிய வழியில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்வார்கள் என்றும் இந்தியா திரும்பினால் அவரை நாங்கள் நிச்சயமாக கைது செய்வோம் என்றும்” தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே,நித்யானந்தா ஹிராபூர் கிராமத்தில் ஆசிரமம் நடத்தும் நிலம் டெல்லி பப்ளிக் பள்ளிக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
சட்ட விதிமுறைகளை மீறி அந்த நிலத்தை ஆசிரமம் நடத்த குத்தகைக்கு கொடுத்ததாக டெல்லி பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஹிதேஷ் புரியை கைது செய்ததாகவும் பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் ஆமதாபாத் புறநகர் துணை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
ஹொங்கொங்கிற்கு எதிராக இரு சட்ட மூலங்களை நிறைவேற்றியது அமெரிக்கா!
21/11/2019 ஹொங்கொங் போராட்டத்தில் தொடர் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் ஹொங்கொங் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் சட்ட மூலங்களை நிறைவேற்றி உள்ளது.
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹொங்கொங் 1997 ஆம் ஆண்டு, ஜூலை முதலாம் திகதி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாடு, இரண்டு அமைப்புகள் என்ற வகையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹொங்கொங் உள்ளது.
ஆனால் சீனாவில் உள்ள சுதந்திரம், ஹொங்கொங் கிடையாது. கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சுதந்திரத்தைத்தான் ஹொங்கொங் மக்கள் அனுபவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நீதித்துறை சுதந்திரத்திலும் சீனாவின் தலையீடு இருக்கிறது.
இந்நிலையில், குற்றவாளிகளை சீனாவுக்கும் தைவானுக்கும் நாடு கடத்தி விசாரிக்கும் சட்டமூலத்தை ஹொங்கொங் அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் கொண்டு வந்தது.
எனினும் இந்த சட்டமூலத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ஹொங்காங்கில் ஆதிக்கம் செலுத்த சீனா மேற்கொள்ளும் மறைமுக முயற்சி இது எனக் கூறியும், இந்த சட்டமூலத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ஹொங்காங் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
ஜனநாயக ஆர்வலர்களின் போராட்டத்துக்கு அடிபணிந்த அரசு சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை கடந்த மாதம் திரும்பப்பெற்றது. ஆனாலும் போராட்டம் ஓயவில்லை.
சீனாவிடம் இருந்து கூடுதல் ஜனநாயக உரிமைகள், ஹொங்கொங் குற்றவழக்குகளில் சிக்குபவர்கள் மீது வெளிப்படையான விசாரணை உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தை விரிவுபடுத்தி உள்ளனர்.
தொடர்ந்து 6 மாதங்களாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் வன்முறை தாண்டவமாடி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த போராட்டம் தொடங்கிய நாள் முதலே அமெரிக்கா, ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறது. போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவதாக சீனா மற்றும் ஹொங்கொங் அரசை அமெரிக்கா ஏற்கனவே கண்டித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் ஹொங்கொங் போராட்டம் தொடர்பாக 2 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
இதில் முதல் மசோதா ஹொங்கொங் மீது தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்கவும், பொருளாதார தடைகளை விதிக்கவும் வழிவகுக்கும்.
அதேபோல் ஹொங்கொங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் 2019 என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றொரு சட்டமூலம் ஹொங்கொங் பொலிஸ் படையினருக்கு அமெரிக்க நிறுவனங்கள் சில ஆயுதங்களை வணிக ரீதியாக ஏற்றுமதி செய்வதை தடைசெய்யும்.
அத்துடன் இந்த சட்டமூலம் ஹொங்கொங் மனித உரிமை மீறல்களுக்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும். நன்றி வீரகேசரி
23/11/2019 சீனாவில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள் பாதுகாப்பு பணியில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளன.
சீனாவின் பீஜிங் நகராட்சியின் பாதுகாப்பு குழுவில் இணைப்பதற்காக அந்நாட்டு விஞ்ஞானிகள் இரண்டு நாய்களின் மரபணுக்களை கொண்டு குளோனிங் முறையில் 6 நாய்களை உருவாக்கி உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிறந்த இந்த நாய்க்குட்டிகளுக்கு தற்போது 4 மாதங்கள் வயது ஆகும் நிலையில், அவை 6 மாதங்கள் வயது கொண்ட நாய்களுக்கு உண்டான திறமையுடனும், நினைவாற்றலுடனும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த 6 நாய்களும் இலட்சனை, கழுத்துப்பட்டி, மற்றும் சீருடை அணிவிக்கப்பட்டு பீஜிங்கில் பாதுகாப்பு பணியில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த நாய்களுக்கு கூடுதல் பயிற்சி அளித்து, அதன் மூலம் மேலும் திறமையான நாய்களை உருவாக்க விஞ்ஞானிகள் திட்டுமிட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment