சைவ மன்றத்தில் வேலை வாய்ப்பு - சைவக்குருக்கள் (இறுதிக்கிரியை செய்பவர்)


சைவமன்றம் தனது சமூகப்பணிகளின் இன்னும் ஒரு பரிமாணமாக இறுதிக்கிரியைகள் செய்யும் காரியத்தை சேவை அடிப்படையில் வழங்க முன்வந்துள்ளது. ஆதலால் சைவமன்றத்தில் சைவக் குருக்களாக பணிபுரியவும் ஏனைய நேரத்தில் சைவமன்றத்தின் பிற பணிகள் செய்வதற்கும் ஒருவருக்கு வாய்ப்புண்டு. தேர்ந்தெடுக்கப்படுபவர் சைவமன்ற வெளியீடான சைவ இறுதிக்கிரியைகள் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளதற்கு அமைய கிரியை செய்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு ஏற்கெனவே இந்த சமூகப்பணியில் ஈடுபட்டு அனுபவம் உடையவர்களால் பயிற்சி அளிக்கப்படும். தொடக்கத்தில் 6 மாத தகுதி அவதானிப்புக் காலத்துடன் இரு வருடங்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை  வழங்கப்படும்.
தகுதி:
அவுஸ்ரேலியாவில் உத்தியோகபூர்வமாக வேலைசெய்யக்கூடிய குடியுரிமை
சைவ இறுதிக்கிரியைகள் பற்றி அறிந்திருத்தல் வேண்டும்
தமிழில் தான் செய்யும் கிரியைபற்றி கூடியிருப்போருக்கு கூறக்கூடிய ஆற்றல்
இதனை ஆங்கிலத்திலும் சுருக்கமாக கூறும் ஆற்றல் விரும்பத்தக்கது
பஞ்சபுராணம,; சிவபுராணம், திருப்பொற்சுண்ணம் முதலியன பாடும் ஆற்றல்

விண்ணப்ப நிறைவு நாள் 12. 12. 2019. மேலதிக விபரங்களுக்கு சைவமன்ற தலைவர் திரு துரைச்சாமி பவராஜா 0415 681 588.
   


No comments: