மாவீரர் நாள் அவுஸ்திரேலியா 2019



தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களைஎழுச்சியுடன் நினைவு கொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2019ம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27ம் நாள் புதன்கிழமை (27 – 11 – 2019) அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில்அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இதுவரை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விபரப்பட்டியலில் இல்லாதமாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்குறிப்பாக அண்மையில் குடிபுகுந்தவர்கள் தயவு செய்து தமது விபரங்களைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் பகிர்ந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
மாவீரர் நாள் நிகழ்வில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரரின் திருவுருவப் படத்திற்கு விளக்கேற்றும் நிகழ்வுக்கான ஒழுங்குபடுத்தல்களைச் செய்யவேஇவ்விபரத் திரட்டு நடைபெறுகின்றது. எனவே இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள், 20 - 11 - 2019 இற்கு முன்பதாக தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 
மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறும் இடங்கள் - அவுஸ்திரேலியா
----------------------------------------------------------------
மெல்பேர்ண் (Melbourne)
Springvale Town Hall
397 Springvale Road Springvale VIC 3171
06.00pm - 08.00pm
Contact: 0433 002 619
சிட்னி (Sydney)
Newington Reserve
Holker St Silverwater
NSW 2128
06.00pm - 08.00pm
Contact: 0424 757 814
கன்பரா (Canberra)
Western Creek Community Centre,
Parkinson St, Weston, ACT 2611
6.00pm – 8.00pm
Contact: 0424 157 366
பேர்த் (Perth)
Madington Community Centre
19 Alcock St Maddington
WA 609
06.00pm - 08.00pm
Contact: 0469 823 269
பிரிஸ்பேன் (Brisbane)
23 Station Avenue
Darra QLD 4076
06.00pm - 08.00pm
Contact: 0450 120 818
அடலேயிட் (Adelaide)
77 Philip Highway
Elizabeth South SA 5112
06.00pm - 08.00pm
Contact: 0470 562 942
குறிப்பு: இம் மாநிலங்களில் நடைபெறும் மாவீரர்நாள் நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வண்ணம்,
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா
=============================================================

மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
அவுஸ்திரேலியா.
தொடர்புகள்:
மின்னஞ்சல்:melbournetamilmedia@gmail.com








No comments: