மார்பு கச்சம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்


Image result for lady stachu



.

எமது சமூக சிந்தனையில்  மார்பு கச்சம் (Bra) பற்றி வெளிப்படையாக பேசுவதோ எழுதுவதோ சங்கோசப்  படவேண்டிய  விஷயமாகவே இருந்து வருகிறது. நான் நடனத்தின் பாரம்பரியம்  அது எவ்வாறு நடைபெற்றது என்பதை ஆராயும் பொழுது நர்த்தகிகள் அணிந்த மார்பு கச்சங்கள் பற்றி வெளி நாடுகளில் இருந்து வந்த பயணிகள் எழுதியிருந்தமை  என்னை வியப்பில் ஆழ்த்தியது . இதை பலரும் அறியவேண்டும்  என்ற ஆர்வம் தூண்டப் பட் டமையால்  எழுதுகிறேன்.

12ம்  நூற்றாண்டிலே இந்திய ஆடல் நங்கையர் இடையே இது பரவலாக இருந்தமையை  வெனிஸ் நகரில் இருந்து வந்த மாலுமி தனது The Travel என்ற நூலில் எழுதுகிறார். இவரே இதுபற்றி வெளிநாட் டவருக்கு  வியந்து எழுதியவர். 1298 இல் இவர் தென்னகம் நோக்கி வந்தவர். அவர் எழுதியது எம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்தியது.




ஆடல் நங்கையர்  தமது மார்பகங்களை கிண்ணம் போன்ற ஒரு கவசம் கொண்டு மூடியிருக்கிறார்கள். இந்த வடட வடிவமான மார்புக் கவசம் முன்னோக்கி  இருக்கும் . இது மார்பகங்களை மிருதுவாக தாங்கிக் கொள்கிறது . அதை அலங்கரித்து தங்க வேளை பாடுகள் இருக்கும் . இது சூரிய ஒளியில் பிரகாசிப்பதே தனி அழகு என்கிறார். 57 John Henry Grose A Voyage to the east Indies என்ற நூலில் கிண்ணம் போன்று அமைக்கப்பட்ட மார்புக்கான உடை, மார்பின் அழவுக்கேற்ப பிடிப்பாக அமைக்கப் பட்டிருக்கும் மிக மிருதுவான மரப்பட்டையால் ( வாழை மடலாக இருக்குமோ என எண்ணத்  தோன்றுகின்றது ) அமைக்கப்பட்டு  ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்டிருக்கும் . முத்துக்குப் புறத்தில் ஒரு இணைப்பு (Buckled at the back) இருக்கும். இதன் வெளிப்புறம் மென்மையானது. தங்கத்தினாலோ அல்லது வெள்ளியில் தங்க முலாம் பூசப் பட்டு இருக்கும் . அவரவர் அந்தஸ்துக்கேற்ப  நவரத்தினங்கள் பதிக்கப் பட்டிருக்கும் . இலகுவாக கழட்டக் கூடியதாக இருக்கும்.

டச்சுக் காரரான Jacob Haafaner  1754 முதல் 1809 வரை வாழ்ந்தவர் , இவரோ 13 ஆண்டுகள் தென்னிந்தியாவிலும்  சிறிலங்காவிலும்  வாழ்ந்தவர். ஒரு தாசியை திருமணம் செய்து வாழ்ந்தார். (De Werken   van Jocob Haafiner) என்ற நூலில் மார்பகங்கள் பெருத்து விடாதோ  சிறுத்து விடாதோ இருப்பதற்காக  மார்பகங்கள் ஒரு கவசத்தால் மூடப்பட்டிருக்கும் , இந்த கவசம் மிக மெல்லியதாக ஊடுருவிப் பார்க்கக் கூடியதாக இருக்கும். மென்மையானதும் ரப்பர் போன்று இழுபடும் தன்மை வாய்ந்தது . அவரவர் நிறத்திலேயே அமைக்கப் பட்டிருக்கும். இது அவர்கள் உடலா உடையா என எண்ணும் வண்ணம் உடலுடன் இணைந்திருக்கும் .  இந்த   பயணிகள் மூலம் 1298 முதல் 1809 வரையான 5 நூற்றாண்டுகள்  தென் இந்திய ஆடல் நங்கையரிடையே  இருந்த மார்பகத்திற்கான உடைகளைக் கண்டோம் .
ஆடலைத் தொழிலாக கொண்டவர் தமது மார்பகங்களை அவ்வாறு அலங்கரித்தனர் என அறிய வியப்பாகவே  உள்ளது . 



















No comments: