உலகச் செய்திகள்

கைவிட்டது அமெரிக்கா- தங்கள் மண்ணை தாங்களே காக்க குர்திஸ் மக்கள் சபதம்- துருக்கி படையினரை எதிர்கொள்ள மனிதகேடயங்களாக மாறுகின்றனர்

துருக்கியின் பொருளாதாரத்தை முற்றாக அழித்துவிடுவேன் - டிரம்ப் எச்சரிக்கை

கைவிட்டது அமெரிக்கா- தங்கள் மண்ணை தாங்களே காக்க குர்திஸ் மக்கள் சபதம்- துருக்கி படையினரை எதிர்கொள்ள மனிதகேடயங்களாக மாறுகின்றனர்

 தாக்குதலை ஆரம்பித்தது துருக்கி- விமான- ஆட்டிலறி தாக்குதல்களால் அதிர்கின்றது வடசிரியா

சென்னை வந்த சீன ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு

சீனா-தமிழகம் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தக தொடர்பு இருந்தது - மோடி

பிரபல சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்

ஈரானின் எண்ணெய் கப்பல் மீது பயங்கரவாத தாக்குதல்? செங்கடலில் தீப்பிடித்து எரிகின்றது

கைவிட்டது அமெரிக்கா- தங்கள் மண்ணை தாங்களே காக்க குர்திஸ் மக்கள் சபதம்- துருக்கி படையினரை எதிர்கொள்ள மனிதகேடயங்களாக மாறுகின்றனர்

08/10/2019 சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள குர்திஸ் இனத்தவர்களின் பகுதிகளை இலக்குவைத்து பாரிய இராணுவநடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக  துருக்கி அறிவித்துள்ளதை தொடர்ந்து  துருக்கி படையினரை எதிர்கொள்வதற்காக எல்லைப்பகுதிகளில் பாரிய மனிதகேடய  போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக குர்திஸ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சிரிய படையினரின் நடவடிக்கையை எதிர்கொள்வதற்காக எல்லையிலுள்ள நகரங்களை நோக்கி  வயது வேறுபாடின்றி குர்திஸ் மக்கள் குவியத்தொடங்கியுள்ளனர்.
துருக்கி படையினரின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக அவர்கள் மனிதகேடயங்களாக மாற விரும்புகின்றனர் என கியுமிசிலி நகரத்தில் உள்ள செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐநா அலுவலகத்தின் முன்னாலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்தில் உள்ள குர்திஸ் இனத்தவர்கள், அராபியர்கள் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் என அனைவரும் துருக்கியின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை எதிர்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
துருக்கி இந்த பகுதியில் காலடி எடுத்துவைத்தால் பாரிய படுகொலைகள் இடம்பெறும் என அஞ்சுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் தாக்குதலிற்கு வழிவிட்டு விலகி நிற்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதை தொடர்ந்தே குர்திஸ் மக்கள் வயதுவேறுபாடின்றி எல்லைகளை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர்.
அமெரிக்கா விலகிநிற்பதன் காரணமாக, துருக்கி எல்லைகளை கடந்து குர்திஸ் தலைமையிலான சிரிய ஜனநாயக படையணி மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன.
ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பாரிய பங்களிப்பை வழங்கிய சிரிய ஜனநாயக படையணி தற்போது அமெரிக்கா தனது படைகளை அப்பகுதியிலிருந்து விலக்கிக்கொள்ள முடிவுசெய்துள்ளதை முதுகில் குத்தும் நடவடிக்கை என வர்ணித்துள்ளது.
எனினும் எங்கள் மண்ணை எப்பாடுபட்டாவது பாதுகாப்போம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
2015 இல் உருவாக்கப்பட்ட சிரிய ஜனநாயக படையணி ரொஜாவா பிராந்தியத்தில் சிரியாவின் வடக்கு எல்லையை அண்மித்த பகுதிகளில் சுயாட்;சி பிராந்தியத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
சிரிய ஜனநாயக படையணியில் பெருமளவிற்கு குர்திஸ் வைஜேபி போராளிகளே இடம்பெற்றுள்ளனர்.

சிரிய ஜனநாயக படையணி தற்போது 480 கிலோமீற்றரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது.
நன்றி வீரகேசரி துருக்கியின் பொருளாதாரத்தை முற்றாக அழித்துவிடுவேன் - டிரம்ப் எச்சரிக்கை

08/10/2019 சிரியாவிற்குள் ஊடுருவது தொடர்பில் துருக்கி அளவுக்குமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் துருக்கியின் பொருளாதாரத்தை முற்றாக அழித்துவிடுவேன் என  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள குர்திஸ் போராளிகளிற்கு எதிராக துருக்கி இராணுவநடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து அப்பகுதியிலிருந்த தனது படைகளை விலக்கிக்கொள்ளப்போவதாக டிரம்ப் முன்னதாக அறிவித்திருந்தார்,
அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பிற்கு கடும் கண்டனங்கள் வெளியாகியிருந்தன.
அமெரிக்கா குர்திஸ் ஆயுத குழுக்களை கைவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே டிரம்ப் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
துருக்கி எல்லை மீறிய நடவடிக்கைகளில ஈடுபடுகின்றது என நான் எனது பெரிய ஒப்பிட முடியாத ஞானத்தின் மூலம் நான் கருதினால் முன்னரை போன்று துருக்கியின் பொருளாதாரத்தை முற்றாக அழித்துவிடுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மத்திய கிழக்கில் உள்ள  நாடுகள் குறிப்பாக செல்வந்த நாடுகள் தங்களை தாங்களே பாதுகாக்கவேண்டிய தருணம்வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி கைவிட்டது அமெரிக்கா- தங்கள் மண்ணை தாங்களே காக்க குர்திஸ் மக்கள் சபதம்- துருக்கி படையினரை எதிர்கொள்ள மனிதகேடயங்களாக மாறுகின்றனர்

08/10/2019 சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள குர்திஸ் இனத்தவர்களின் பகுதிகளை இலக்குவைத்து பாரிய இராணுவநடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக  துருக்கி அறிவித்துள்ளதை தொடர்ந்து  துருக்கி படையினரை எதிர்கொள்வதற்காக எல்லைப்பகுதிகளில் பாரிய மனிதகேடய  போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக குர்திஸ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சிரிய படையினரின் நடவடிக்கையை எதிர்கொள்வதற்காக எல்லையிலுள்ள நகரங்களை நோக்கி  வயது வேறுபாடின்றி குர்திஸ் மக்கள் குவியத்தொடங்கியுள்ளனர்.
துருக்கி படையினரின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக அவர்கள் மனிதகேடயங்களாக மாற விரும்புகின்றனர் என கியுமிசிலி நகரத்தில் உள்ள செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐநா அலுவலகத்தின் முன்னாலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்தில் உள்ள குர்திஸ் இனத்தவர்கள், அராபியர்கள் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் என அனைவரும் துருக்கியின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை எதிர்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
துருக்கி இந்த பகுதியில் காலடி எடுத்துவைத்தால் பாரிய படுகொலைகள் இடம்பெறும் என அஞ்சுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் தாக்குதலிற்கு வழிவிட்டு விலகி நிற்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதை தொடர்ந்தே குர்திஸ் மக்கள் வயதுவேறுபாடின்றி எல்லைகளை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர்.
அமெரிக்கா விலகிநிற்பதன் காரணமாக, துருக்கி எல்லைகளை கடந்து குர்திஸ் தலைமையிலான சிரிய ஜனநாயக படையணி மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன.
ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பாரிய பங்களிப்பை வழங்கிய சிரிய ஜனநாயக படையணி தற்போது அமெரிக்கா தனது படைகளை அப்பகுதியிலிருந்து விலக்கிக்கொள்ள முடிவுசெய்துள்ளதை முதுகில் குத்தும் நடவடிக்கை என வர்ணித்துள்ளது.
எனினும் எங்கள் மண்ணை எப்பாடுபட்டாவது பாதுகாப்போம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
2015 இல் உருவாக்கப்பட்ட சிரிய ஜனநாயக படையணி ரொஜாவா பிராந்தியத்தில் சிரியாவின் வடக்கு எல்லையை அண்மித்த பகுதிகளில் சுயாட்;சி பிராந்தியத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
சிரிய ஜனநாயக படையணியில் பெருமளவிற்கு குர்திஸ் வைஜேபி போராளிகளே இடம்பெற்றுள்ளனர்.

சிரிய ஜனநாயக படையணி தற்போது 480 கிலோமீற்றரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது.
நன்றி வீரகேசரி

தாக்குதலை ஆரம்பித்தது துருக்கி- விமான- ஆட்டிலறி தாக்குதல்களால் அதிர்கின்றது வடசிரியா

09/10/2019 சிரியாவின் வடகிழக்கு பகுதியில் குர்திஸ் போராளிகளிற்கு எதிராக துருக்கி தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
ஒப்பரேசன் பீஸ் ஸ்பிரிங் என்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக துருக்கியின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
துருக்கி விமானதாக்குதல்களுடன் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது எனினும் பின்னர் ஆட்டிலறி தாக்குதல்களும் இடம்பெறுகின்றன.
சிரியாவின் எல்லை நகரான டெல்அப்யாட்டில் பாரிய வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாக ரொய்ட்டர் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியிலிருந்து மக்கள் பெருமளவில் வெளியேறி வருகின்றனர்.
ரஸ் அலி அய்ன் என்ற நகரத்திலும் பாரிய சத்தங்கள் கேட்டதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
விமானங்களின் சத்தங்களை கேட்க முடிகின்றது ரஸ் அலி அய்ன் நகரிலிருந்து கரும்புகைமண்டலம் எழுகின்றது என சிஎன்என் தெரிவித்துள்ளது.
துருக்கியின் விமானதாக்குதல் காரணமாக மிசராவா என்ற கிராமத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என எஸ்டிஎவ் அமைப்பு டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
சிரியாவின் வடபகுதியில் ஆயிரக்கணக்கான மக்களிற்கு நீரினை வழங்கும் அணைக்கட்டு ஒன்றினை இலக்குவைத்து துருக்கி படையினர் ஆட்டிலரி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் எனவும் எஸ்டிஎவ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சிக்காரா என்ற கிராமத்தில் துருக்கியின் தாக்குதல் காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை துருக்கியின் தாக்குதலை தொடர்ந்து வடசிரியாவில் பாரிய குழப்பநிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள சிஎன்என் ஆயிரக்கணக்கில் மக்கள் தப்பியோடிக்கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
தப்பியோடும் மக்களால் வீதிகள் மூச்சுதிணறுகின்றன,மோட்டார் சைக்கிள்களில் ஆறு ஏழு பேரை காணமுடிகின்றது,கார்களில் மெத்தைகள் உட்பட பல பொருட்களை அடுக்கியவாறு மக்கள் வெளியேறுகின்றனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது.
பல பகுதிகளில் இருந்து கரும்புகைமண்டலம் எழுவதை காணமுடிகின்றது எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

ஆறு பகுதிகளில் விமானதாக்குதல்களும் ஆட்டிலறி தாக்குதல்களும் ஆரம்பித்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி 
சென்னை வந்த சீன ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு

12/10/2019  சீன - பீஜிங்கில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த சீன ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வழக்கப்படி அவருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இந்தியா-சீனா இடையே நல்லுறவை மேம்படுத்தக் கடந்த ஆண்டு பிரதமர் மோடி சீனா சென்று அந்நாட்டு ஜனாதிபதி ஜி. ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்தார்.
 இதன் தொடர்ச்சியாகச் சீன ஜனாதிபதி இந்தியா வந்து பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடியும், சீன ஜனாதிபதியும் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச இரு நாட்டு அதிகாரிகளும் முடிவு செய்து கடந்த ஒரு மாதமாக ஏற்பாடுகள் செய்தனர்.
சீன ஜனாதிபதி ஜி. ஜின்பிங் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தார். 
விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வழக்கப்படி அவருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
சீன ஜனாதிபதியை  விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் வரவேற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 
நன்றி வீரகேசரி 
சீனா-தமிழகம் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தக தொடர்பு இருந்தது - மோடி

12/10/2019 சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம் இருந்ததாக இன்று நடைபெற்ற சந்திப்பின்போது மோடி தெரிவித்துள்ளார். 
சீன ஜனாதிபதி ஜி. ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முறைசாரா சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. நேற்று மாலை 5 மணிக்கு அர்ஜுனன் தபசு பகுதிக்கு வந்த சீன ஜனாதிபதியை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் உரையாடியபடி அங்குள்ள சுற்றுலாப் பகுதிகளை பார்த்து ரசித்தனர். கலைநிகழ்ச்சிகளை யும் கண்டுகளித்தனர்.
 பின்னர் இரவு 7.30 மணி அளவில் அங்கேயே சீன ஜனாதிபதி ஜின்பிங்குக்கு இரவு விருந்து விழங்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இன்று காலை பிரதமர் மோடி தங்கி இருக்கும் தாஜ் பிஷர்மேன் கோவ் ஹோட்டலில் மீண்டும் இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். கண்ணாடி அறையில் அமர்ந்து, கடலையும் இயற்கையையும் ரசித்தபடி இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். 
இந்த ஆலோசனையின்போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர். ஆலோசனைக்குப் பிறகு வெளியே வந்த இருவரும் கடற்கரையை ரசித்தனர்.
அதன்பின்னர் மோடி, ஜி. ஜின்பிங் தலைமையில் இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது சீன ஜனாதிபதி வரவேற்று பேசிய மோடி, மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன் என தமிழில் பேசினார். உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழில் நான் பேசுகிறேன் என்றார்.
இந்தியாவும் சீனாவும் பொருளாதார சக்திகளாக இருக்கின்றன என்றும், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே ஆழமான கலாச்சாரம் மற்றும் வணிக உறவு இருந்தது என மோடி தெரிவித்துள்ளார். 
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி. ஜின்பிங்கிற்கு இடையிலான இரண்டுநாட்கள் நடைபெற்ற முறைசாரா பேச்சுவார்த்தை இன்று சனிக்கிழமை நிறைவடைந்துள்ளது.
இதனையடுத்து சீன ஜனாதிபதி சென்னையில் இருந்து நேபாள தலைநகரை நோக்கி புறப்பட்டுச் சென்றார்.  நன்றி வீரகேசரி 

 பிரபல சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்

11/10/2019 இந்தியாவில் பிரபல சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்(69) உடல்நலக்குறைவால் மங்களூரில் உள்ள வைத்தியசாலையில்  உயிரிழந்துள்ளார். இசைத்துறைக்கும் ரசிகர்களுக்கும் நிச்சயம் பேரிழப்பு. ஈடுசெய்யமுடியாத இழப்பு.
மறைந்த கத்ரி கோபால்நாத் கர்நாடக மாநிலம் மங்களூரில் 1949ம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி பிறந்தார். 
கலாநிகேதனாவை சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடம் சாக்சபோன் வாசிப்பை கற்ற இவர், சென்னையில் பிரபல மிருதங்க இசைக்கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் இசைப்பயிற்சி பெற்றார். 
கத்ரி கோபால்நாத் 2004ல் பத்மஸ்ரீ பட்டத்தையும் கலைமாமணி பட்டத்தையும்  பெற்றுள்ளார்.
மேலும் சாக்சபோன் சக்ரவர்த்தி, சாக்சபோன் சாம்ராட், கர்நாடக கலாஸ்ரீ உள்ளிட்ட பட்டங்களை பெற்றுள்ளார்.
கே.பாலசந்தரின் டூயட் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றியிருந்தார் கத்ரி கோபால்நாத். 
டூயட் படத்தின் அனைத்து பாடல்களிலும் கத்ரி கோபால்நாத்தின் சாக்சபோன் இசை பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் ருத்ரேசு மகந்தப்பாவுடன் இணைந்து 2005-ல் கின்ஸ்மென் இசைத்தொகுப்பை வெளியிட்டார்.
கத்ரி கோபால்நாத்தின் 2 மகன்களில் ஒருவரான மணிகாந்த் இசையமைப்பாளராக உள்ளார். மணிகாந்த் கத்ரி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.   நன்றி வீரகேசரி 
ஈரானின் எண்ணெய் கப்பல் மீது பயங்கரவாத தாக்குதல்? செங்கடலில் தீப்பிடித்து எரிகின்றது

11/10/2019 செங்கடல் பகுதியில் ஈரானின் எண்ணெய் கப்பல்மீது பாரிய தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து கப்பல் தீப்பிடித்து எரிவதாக செய்திகள் வெளியாகின்றன.
பயங்கரவாத தாக்குலே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச ஊடகங்கள் சவுதி அரேபிய துறைமுகமான ஜெட்டாவிலிருந்து 120 கிலோமீற்றர் தொலைவில் ஈரானின் எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரிகின்றது என தெரிவித்துள்ளன.
கப்பலிற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது கடலில் எண்ணெய் கசிகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது பயங்கரவாத தாக்குதல் என பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர் என  சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.   நன்றி வீரகேசரி 

No comments: