வட, கிழக்கில் பௌத்த பேரினவாதத்தின் செயற்பாடுகளை அனுமதிக்கக்கூடாது


10/10/2019 வடக்கு, கிழக்கில் பௌத்த பேரி­ன­வாத நட­வ­டிக்­கைகள்  முன்­னெ­டுத்து தமிழர் தாயக கோட்­பா­டு­களை சிதைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மாறி மாறி ஆட்­சிக்கு வரு­கின்ற அர­சாங்­கங்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தமை வர­லா­றாக உள்­ளது.  விடு­த­லைப்­பு­லிகள் பலம்­பெற்­றி­ருந்த காலப்­ப­கு­தியில்   இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை  மேற்­கொள்ள முடி­யாத நிலைமை காணப்­பட்­டது. 
ஆனால் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் முன்­னைய ஆட்சிக் காலத்தில் பௌத்த பேரி­ன­வாத செயற்­பா­டுகள் வடக்கு, கிழக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  அத்­த­கைய நட­வ­டிக்­கைகள் திட்­ட­மிட்­ட ­வகையில் தொடர்ந்து வரு­கின்­ற­மையும் அதற்கு தென்­ப­குதி இன­வாத  கட்­சி­களும் அமைப்­புக்­களும்  ஆத­ரவு தெரி­வித்து வரு­கின்­ற­மையும்  பெரும் கவ­லை­ய­ளிக்கும் செயற்­பா­டாக அமைந்­துள்­ளது.
யுத்தம்  முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து வடக்கு, கிழக்குப் பகு­தி­களில் தமிழ் இளைஞர், யுவ­தி­களின் தமிழ் தேசிய உணர்வை மழுங்­க­டிக்கும் வகையில் ஒரு­புறம் போதைப் பொருள் கலா­சா­ரமும் மது­பா­வனை கலா­சா­ரமும் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தன. மறு­புறம் தமிழ் மக்­களின் இன­வி­கி­தா­சா­ரத்தை  மாற்­றி­ய­மைக்கும் வகை­யிலும்  வடக்கு, கிழக்கு  தாயக கோட்­பா­டு­களை சிதைக்கும் முக­மா­கவும் திட்­ட­மிட்ட  குடி­யேற்­றங்­களும் பௌத்த பேரி­ன­வா­தத்தை ஊக்­கு­விக்கும்  செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.
முல்­லைத்­தீவு, செம்­மலை நீரா­வி­யடி பிள்­ளையார் ஆல­யத்தை  ஆக்­கி­ர­மித்து பௌத்த விகாரை அமைக்கும் பணி ஆரம்­பிக்­கப்­பட்­டது.  இதே­போன்றே பௌத்த மக்கள் வாழாத பகு­தி­களில்  பௌத்த விகா­ரை­களும் புத்தர் சிலை­களும் அமைக்­கப்­பட்­டன.  திரு­கோ­ண­மலை, கன்­னியா வெந்­நீ­ரூற்றுப் பகு­தியில் பிள்­ளையார் ஆலயம் அமைந்த பகு­தியில் விகாரை அமைப்­ப­தற்கும்  முயற்­சிக்­கப்­பட்­டது.
இவ்­வாறு பல இடங்­களில் பௌத்த பேரி­ன­வாத ஆக்­கி­ர­மிப்பை நிறுவும் வகையில் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அதன்  அண்­மைய நிகழ்­வா­கவே முல்­லைத்­தீவு செம்­மலை நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய வளா­கத்­திற்குள் பௌத்த தேரரின் பூத­வுடல் தகனம் செய்­யப்­பட்ட சம்­பவம் அமைந்­துள்­ளது. நீதி­மன்ற உத்­த­ர­வையும் மீறி பௌத்த தேரர்­களின் தலை­மையில் இந்த  சம்­பவம் அரங்­கேற்­றப்­பட்­டி­ருந்­தது.
இந்த விட­ய­மா­னது தமிழ் மக்கள் மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.  இந்த அடாத்­தான நிகழ்வு தொடர்பில்  கடும் கண்­ட­னங்­களும் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  வடக்கு, கிழக்கை சேர்ந்த சட்­டத்­த­ர­ணிகள் பணி­ப்ப­கிஷ்­க­ரிப்­பிலும்  ஈடு­பட்­டி­ருந்­தனர்.  பல்­வேறு ஆர்ப்­பாட்­டங்­களும் போராட்­டங்­களும் நடத்­தப்­பட்­டி­ருந்­தன. ஆனால் இன்­று­வரை நீதி­மன்றத் தீர்ப்பை அவ­ம­தித்து அடா­வ­டித்­த­னத்தில் ஈடு­பட்ட நபர்கள் தொடர்பில் உரிய சட்ட நட­வ­டிக்­கைகள்  எடுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை.  இதே­போன்றே நீதி­மன்றத் தீர்ப்பை அமுல்­ப­டுத்த தவ­றிய பொலிஸார் மீதும் இன்­னமும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட­வில்லை.
இந்த நிலையில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்­றத்தில் விசேட கூற்­றொன்றை முன்­வைத்து  நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய விடயம் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை  வலி­யு­றுத்­தி­யுள்ளார்.  முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றத்தின் தீர்ப்பை அவ­ம­தித்த கல­கொட அத்தே ஞான­சார தேரர் மற்றும்  சம்­ப­வத்தில் தொடர்புபட்ட பௌத்த பிக்­குகள் மீதும்   நீதி­மன்ற உத்­த­ரவை நடை­மு­றைப்­படுத்த தவ­றிய பொலிஸ் அதி­கா­ரிகள் மீதும் உட­னடி நட­வ­டிக்கை  எடுக்­கப்­ப­ட­வேண்­டு­மென சம்­பந்தன்  கோரிக்கை விடுத்­துள்ளார்.  
நீதி­மன்றத் தீர்ப்பை அவ­ம­தித்து செயற்­பட்ட ஞான­சார தேர­ருக்கு எதி­ராக இரண்­டு­வா­ரங்கள் கடந்த நிலை­யிலும் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.  குறித்த பௌத்த தேரரின் இறு­திக்­கி­ரி­யையின் போது அங்கு சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­ட­வேண்­டிய பொலிஸ்  அதி­கா­ரிகள் அதனை செய்­யாமல் மௌனம் காத்­தனர். இந்த செயற்­பா­டு­களின் போது அங்கு சமுக­ம­ளித்­தி­ருந்த சட்­டத்­த­ர­ணிகள் கூட தாக்­கப்­பட்­டுள்­ளனர்.  அங்கு குழு­மி­யி­ருந்த பொலிஸ் அதி­கா­ரிகள் நீதி­மன்ற உத்­த­ரவை மீறி செயற்­பட்­ட­வர்களை தடுக்கத் தவ­றி­விட்­டனர்.  இது இந்து மக்­களின் உரி­மை­யினை மீறும் செயல். இதனை எந்­த­வ­கை­யிலும்  ஏற்­றுக்­கொள்ள முடி­யா­து என்றும் சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் மற்றும் சாந்தி சிறிஸ்­கந்­த­ராஜா  ஆகி­யோரும் சபையில் கருத்­துக்­களை  தெரி­வித்­துள்­ளனர்.  நீரா­வி­யடி பிள்­ளையார் கோவில் விவ­காரம் தொடர்பில் பிர­தான கட்­சி­களின்  ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களின்  நிலைப்­பாடு என்ன என்­பது தொடர்பில் மக்­க­ளுக்கு  தெரி­விக்­க­வேண்டும் என்று  சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் எம்.பி. தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று சாந்தி சிறிஸ்­கந்­த­ராஜா எம்.பி.யும்  வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.  இந்த நிலையில் பொது எதி­ர­ணியின்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஆனந்த அளுத்­க­மகே சபையில்  தெரி­வித்த விட­யங்­க­ளா­னது  பௌத்த பேரி­ன­வாத சக்­தி­களின் செயற்­பா­டுகள் எந்­த­ள­விற்கு  நாட்டில் காலூன்றி உள்­ளன என்­பதை பறை­சாற்­று­வ­தாக அமைந்­தி­ருந்­தது.
இங்கு  கருத்து தெரி­வித்த ஆனந்த அளுத்­க­மகே எம்.பி.  பெளத்த சிங்­கள நாட்டில் தேரர்­களின் கட்­ட­ளை­க­ளுக்கு அமைய செயற்­பட்டால்  நாட்டில் எந்­தப்­பி­ரச்­சி­னையும் ஏற்­ப­டாது.  நீரா­வி­யடி பிள்­ளையார் கோவில் விட­யத்தில்  தமிழர் தரப்பே குழப்­பங்­களை  ஏற்­ப­டுத்தி ஒட்­டு­மொத்த  சிங்­கள பௌத்த மக்­க­ளையும்  வேத­னைக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.  பல சந்­தர்ப்­பங்­களில் தமி­ழர்­களை சிங்­க­ள­வர்கள் பாது­காத்­துள்­ளனர். நீதி­மன்றத் தீர்ப்பு இருக்­கலாம். நீதி­மன்றத் தீர்ப்பு பெரும்­பாலும் பொலி­ஸாரின் தக­வல்­க­ளுக்கு அமை­யவே வழங்­கப்­படும்.  பொலிஸார் கொண்­டு­வரும் தக­வல்கள் சரி­யாக இருக்கும் என்று அர்த்­த­மில்லை.  இந்த நாடு சிங்­கள பௌத்த நாடு. இங்கு தேரர்­களின் தலை­மை­க­ளுக்கு இட­ம­ளிக்­க­வேண்டும் என்று  தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
இவ­ரது கருத்­தா­னது சிங்­கள பேரி­ன­வாத தலை­வர்­களின் நிலைப்­பாடு  எவ்­வா­றா­ன­தாக அமைந்­துள்­ளது என்­பதை எடுத்­துக்­காட்­டு­வ­தாக உள்­ளது. வடக்கு, கிழக்கில்  மேற்­கொள்­ளப்­பட்டு வரும் திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­க­ளையும்  பௌத்த பேரி­ன­வாத ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­க­ளையும் நியா­யப்­ப­டுத்தும் வகை­யி­லேயே தென்­ ப­கு­தியைச் சேர்ந்த பெரும்­பான்­மை­யான அர­சியல் தலை­வர்­களின் நிலைப்­பாடு அமைந்­துள்­ளது.
முல்­லைத்­தீவு செம்­மலை நீரா­வி­யடி ஆலய  விவ­கா­ரத்தில் நீதி­மன்­றத்தின் தீர்ப்பு அவ­ம­திக்­கப்­பட்ட விட­யத்தில் கூட இன்­னமும் நீதி வழங்­கப்­ப­டாமை  ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க செயற்­பா­டல்ல. இந்த விடயம் தொடர்பில் வவு­னியா மனித உரிமை ஆணைக்­குழு அலு­வ­ல­கத்தில் முறைப்­பாடு  தெரி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து நேற்று முன்­தினம் இதற்­கான  விசா­ரணை இடம்­பெற்­றி­ருந்­தது. விசா­ர­ணை­யின்­போது கருத்து தெரி­வித்த முல்­லைத்­தீவு  பொலிஸ் அத்­தி­யட்­சகர் உட்­பட பொலிஸ் அதி­கா­ரிகள் இன முரண்­பாட்டை தடுப்­ப­தற்­கா­கவே  நீதி­மன்றத் தீர்ப்பை கவ­னத்தில் கொள்­ள­வில்லை என்று  தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.  
இன முரண்­பாடு ஏற்­படும் என்­ப­தற்­காக  பௌத்த பேரி­ன­வாத சக்­தி­களின் செயற்­பா­டு­க­ளுக்கு பொலிஸார் அனு­மதி அளித்­துள்­ளமை இதன்­மூலம்  நிரூ­ப­ண­மா­கின்­றது.  எனவே இந்த விட­யத்தில் நீதியை நிலை­நாட்­டு­வ­தற்கு அரசாங்கமானது  நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட  தமிழ் அரசியல் கட்சிகள் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு  அழுத்தங்களை வழங்கி வருகின்ற போதிலும் இன்னமும் இந்த விடயம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவில்லை.  இவ்வாறான நிலைமை தொடர்வதானது தமிழ் மக்கள் மத்தியில் நீதித்துறை மீதான நம்பிக்கையை இல்லாது செய்துவிடும்.
நாட்டில் பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்பதற்காக  பௌத்தர்களே வாழாத பகுதிகளில்  பௌத்த பேரினவாத செயற்பாடுகளுக்கு இடமளிக்கவேண்டும் என்று கோருவது எந்தவகையிலும் நியாயபூர்வமான நடவடிக்கையல்ல. எனவே செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் இடம்பெற்ற  அடாத்தான சம்பவத்துடன்  தொடர்புடையவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும். இதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்கவேண்டியது இன்றியமையாதது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.  நன்றி வீரகேசரி 




No comments: