தமிழ் சினிமா - 100% காதல் திரைவிமர்சனம்


சினிமாவில் இந்த வாரம் சரியான போட்டி எனலாம். சயீரா நரசிம்ம ரெட்டி, அசுரன், ஜோக்கர் ஆகிய படங்களுடன் 100 சதவீதம் காதல் படமும் வெளியாகியுள்ளது. தெலுங்கிலிருந்து ரீமேக் ஆகியுள்ள இப்படம் எப்படியிருக்கிறது என பார்க்கலாம்.

கதைகளம்

கதையின் ஹீரோ ஜி.வி.பிரகாஷ் எதிலும் நான் தான் முதலிடத்தில் இருக்க வேண்டும் என நினைப்பவர். கல்லூரியில் எப்போதும் முதலிடம் பிடிக்கும் அவருக்கு சவலாக அஜய் என்பவர் இருக்கிறார்.
இதற்கிடையில் கிராமத்தில் இருந்து படிக்க வந்துள்ள அவரின் முறைப்பெண் ஹீரோயின் ஷாலினி பாண்டே மாமா மாமா என ஜீ.வி.பிரகாஷையே சுற்றி வருகிறார்.

ஒரு கட்டத்தில் ஹீரோயின் மீது ஹீரோவுக்கு ஈர்ப்பு ஏற்பட பின்னர் அது வெளியே தெரியாத காதலாக இருந்து வருகிறது. கல்லூரியில் முதலிடம் பிடிப்பது கவுரவப் போட்டி போல பார்க்கப்படுகிறது. எதிர்பாராமல் ஹீரோயின் முதலிடத்தை பிடிக்கிறார். பின்னர் ஜி.வி.பிரகாஷின் நடவடிக்கைகள் எல்லாம் மாறுகிறது.
இதற்கிடையில் இருவருக்கும் அடிக்கடி ஈகோ சண்டைகள் வருகிறது. இறுதியில் கல்லூரியில் ஹீரோ ஜெயித்தாரா, இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே இந்த 100% காதல்.

படத்தை பற்றிய அலசல்

ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் அவருக்கு சிவப்பு மஞ்சள் பச்சை நல்ல பெயர் வாங்கிகொடுத்தது. ஆனால் அதை இந்த 100% காதல் தக்க வைக்கும் என்றால் கேள்விக்குறியாக தான் இருக்கிறது.
நல்ல திறமை இருக்கிற ஜி.வி ஏன் இந்த கதையை தேர்வு செய்தார் என அவரின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல பலருக்கு தோன்றலாம். படத்தில் அவர் ஹீரோவாக தன் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
சிறுபிள்ளை தனமாக சண்டை போடும் அவரின் கேரக்டரும் காதலர்களுக்கு ரியாலிட்டியான ஒரு ஃபீல் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரியல் லைஃப் லவ் அட்ராசிட்டிஸ் என கூட சொல்லலாம்.
ஹீரோயின் ஷாலினி பாண்டே அர்ஜூன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர். தற்போது 100% காதல் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். அவரும் நடிப்பில் திறமையை வெளிப்படுத்துகிறார். ஹீரோவுக்கு இணையாக அவரும் இடம் பிடிக்கிறார். மேலும் கிளாமர் ஹீரோயினாக தன்னை காட்டியுள்ளார்.
ஹீரோயின் ஜி.வி.பிரகாஷ்க்கு ஆபத்தான நேரத்தில் ஒரு நண்பராக உதவ நினைப்பதும், காதலியாக எதிர்பார்ப்புடன் பிடிவாத சண்டை போடுவதையும் காண்கையில் காதல் ஜோடிகளுக்கு தங்கள் வாழ்வின் கடந்த கால நினைவுகளை வரச்செய்திருக்கும்.
தெலுங்கில் நாக சைதன்யா, தமன்னா ஜோடி நடிப்பில் கடந்த 2011 ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 100 % லவ் படத்தின் இந்த தமிழ் ரீமேக்கிற்கு இயக்குனர் சந்திரமௌலி இன்னும் கதையில் அழுத்தம் கொடுத்திருக்கலாம். எல்லாம் இருந்து ஏதோ மிஸ் ஆனது போல ஒரு ஃபீல்.
ஹீரோவுக்கு அப்பாவாக தலைவாசல் விஜய், அம்மாவாக ரேகா, பாட்டியாக ஜெயப்பிரதா, தாத்தாவாக நாசர், வேலையாளாக அப்புக்குட்டி, ஹீரோயின் அப்பாவாக இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், தம்பி ராமையாக ஆகியோரின் நடிப்பும் எதார்த்தமானது.

படத்தின் ஒளிப்பதிவு காட்சிகள் படத்திற்கு ஏற்ற நல்ல முயற்சி. எடிட்டிங் வேலைகள் நைஸ் ஃபீலிங்.
படத்தில் பாடல், பின்னணி இசையென ஹீரோ ஜி.வி.பிரகாசே செய்திருக்கிறார். லவ் ஃபீல் உணர்வுகளுக்கு அவரை பற்றி உங்களுக்கே தெரியும்.

கிளாப்ஸ்

ஃபேமிலி செண்டிமெண்டாக எல்லோரின் நடிப்பும் ஓகே.
ஹீரோ, ஹீரோயினுடனே சுற்றும் குழந்தைகளால் ஃபன் ஃபீல்.
தம்பிராமையாவின் காமெடி கொஞ்சம் சிரிப்பூட்டும் ரகம்.

பல்பஸ்

எதிர்பார்க்கும் பல விசயங்கள் இடம் பெறவில்லையோ என்ற ஃபீல்.
மொத்தத்தில் 100%காதல் கல்லூரி காதல் ஜோடிகளுக்கு ஓகே. டைம் பாஸிங். ஆனால் மற்றவர்களுக்கு??
நன்றி  CineUlagam




No comments: