திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம்; நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு
லண்டன் விமான நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது
"நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம்: ஞானசார தேரர் உள்ளிட்டோரை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்"
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவன்
திருமலை கன்சைட் நிலத்தடி சித்திரவதை கூடத்தில் இளைஞர், யுவதிகள் சுட்டு படுகொலை - சி.ஐ.டி.
காணாமல் போன குடும்பஸ்தர் கண்டுபிடிப்பு - கண்களை கட்டி கடத்தி சென்று தாக்கியதாக தெரிவிப்பு !
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுக்க முயற்சி- மலேசியாவில் ஏழு பேர் கைது- தூதரகத்தை தாக்க திட்டமிட்டதாகவும் குற்றச்சாட்டு
காணாமற்போன இளம் குடும்பஸ்தர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு
படையினர் தாங்கள் நினைத்ததையெல்லாம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோத்தாபய தெரிவிக்கின்றாரா? மகிந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி- அச்சம்
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம்; நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு
08/10/2019 திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியிலுள்ள தொல்பொருள் திணைக்களம் உரிமை கோரும் பிள்ளை யார் கோயில் அமைந்துள்ள பிரதேசத்தில் கோயில் அல்லது பெளத்த விகாரை அமைப்பதற்கோ அல்லது திருத்த வேலைகள் செய்வதற்கோ வழக்கின் தீர்ப்பு கிடைக்கும் வரை தடை உத்தரவை திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணை முடிவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வெந்நீர் ஊற்று பகுதிக்கு விஜயம் செய்பவர்களுக்கு மட்டும் டிக்கட் விற்பனை செய்யவும் தொல்பொருள் திணைக்களத்துக்கு அனுமதியும் நீதிபதி யால் வழங்கப்பட்டது.
மேலும் இம்மாதம் 22ஆம் திகதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
08/10/2019 தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் லண்டன், லூட்டன் விமான நிலையத்தில் வைத்து பெண்ணொருவர் உட்பட இலங்கை பிரஜைகள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் லண்டன் லூட்டன் விமான நிலையத்திற்கு வந்த பின்னர் அந் நாட்டின் பயங்கரவாத சட்டத்தின் 11 ஆவது பிரிவின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
35 வயது பெண், 39,35 மற்றும் 41 வயதுகளுடைய ஆண்கள் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு 'ERSOU' இன் பயங்கரவாத தடுப்பு காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதுடன், குறித்த ஆண்கள் மூவரும் லண்டனில் உள்ள சிறைச்சாலையொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கைதான மேற்படி பெண் நவம்பர் மாதம் பிணையில் செல்வதற்கு அனுமதி எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
"நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம்: ஞானசார தேரர் உள்ளிட்டோரை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்"
07/10/2019 சர்ச்சைக்குரிய நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் ஞானசார தேரரையும், நீதிமன்ற உத்தரவைமீறி செயற்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன்நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் எச்சரித்திருக்கிறது.
அத்துடன் இத் தருணத்தில் உரிய நடவடிக்கையை எடுக்காமலிருப்பதென்பது, தவறான நடத்தையை அங்கீகரிப்பதாகவும், தண்டனைகளிலிருந்து விலக்களிக்கும் கலாசாரத்தை ஊக்குவிப்பதாகவும் அமையும். அது எதிர்கால முரண்பாடுகளுக்கான அடிப்படையாக அமைவதுடன், இலங்கையில் இனத்துவ உறவுகளை மேலும் இடர்ப்பாடுகளுக்கு உட்படுத்தும் என்றும் குறித்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
07/10/2019 கடந்த கால யுத்தத்தின் போது தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து புலமைப்பரிசில் 183 புள்ளிகள் பெற்று சாதித்த மாணவன் கோபிநாத் கோபிதன் தான் ஒரு வைத்தியராக வந்து இந்தப் போரில் துன்பங்களை அனுபவித்த மக்களுக்காக வைத்திய சேவையை ஆற்ற வேண்டும் என்பதே தனது இலட்சியம் என தெரிவித்திருக்கிறார்.
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற செல் வீச்சு தாக்குதலில் தந்தையை இழந்த நிலையில் தந்தையின் முகத்தை கூட தெரியாது தாயின் அரவணைப்பில் வாழ்ந்து சிறப்பாக கல்விகற்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார் கோபிநாத் கோபிதன்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு மேற்கு பகுதியில் வசித்து வருகின்ற கோபிநாத் கோபிதன் என்ற மாணவன் கடந்த 2009 ஆம் ஆண்டு தாயின் கருவறையில் இருந்த வேளையிலேயே மாத்தளன் பகுதியில், எறிகணை தாக்குதலில் தன்னுடைய தந்தையை பறிகொடுத்த நிலையில் பிறந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்த சிறுவன் விசுவமடு விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றி நேற்று வெளியாகிய யாகிய பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 183 புள்ளிகளை பெற்று பாடசாலையில் இரண்டாம் நிலையில் சித்தியடைந்த மாணவனாக சாதித்திருக்கிறார்.
தனது கணவனை 2009 இல் பறிகொடுத்த கோபிநாத் கோபிதனுடைய தாயாரான கோபிநாத் சாரதா, 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கணவனை பறிகொடுத்த நிலையில் குறித்த மகனை பிரசவித்து சொல்லொணாத் துன்பங்களுக்கு மத்தியில் கூலித்தொழில் செய்து தனது மகனை கற்பித்த நிலையில் தனது மகன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமையினை இட்டு மனமகிழ்வு அடைவதோடு அவனது எதிர்கால இலட்சியம் நிறைவேற தனது பூரண ஆதரவை வழங்குவதாக தெரிவித்து இருக்கிறார்
அதேபோன்று குறித்த மாணவன் தான் ஒரு வைத்தியராக வந்து இந்தப் போரில் துன்பங்களை அனுபவித்த மக்களுக்காக வைத்திய சேவையை ஆற்ற வேண்டும் என்பதே தனது இலட்சியம் என தெரிவித்திருக்கிறார் நன்றி வீரகேசரி
திருமலை கன்சைட் நிலத்தடி சித்திரவதை கூடத்தில் இளைஞர், யுவதிகள் சுட்டு படுகொலை - சி.ஐ.டி.
காணாமல் போன குடும்பஸ்தர் கண்டுபிடிப்பு - கண்களை கட்டி கடத்தி சென்று தாக்கியதாக தெரிவிப்பு !
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுக்க முயற்சி- மலேசியாவில் ஏழு பேர் கைது- தூதரகத்தை தாக்க திட்டமிட்டதாகவும் குற்றச்சாட்டு
காணாமற்போன இளம் குடும்பஸ்தர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு
படையினர் தாங்கள் நினைத்ததையெல்லாம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோத்தாபய தெரிவிக்கின்றாரா? மகிந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி- அச்சம்
10/10/2019 திருகோணமலை கடற்படை முகாமுக்குள் உள்ள கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை கூட வளாகத்தில் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் பலர் அழைத்துவரப்பட்டு சுட்டு படுகொலை செய்யப்பட்டதாக, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாகநாதன் எனும் மாணவன், அச்சித்திரவதை கூடத்தில் இருக்கும் போது தனது தாய்க்கு தொலைபேசியில் தெரிவித்த விடயம் உண்மையே என நம்புவதற்கான சான்றுகள் உள்ளதாக சி.ஐ.டி. கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனயவுப் பிரிவின் சமூககொள்ளை விசாரணை அறை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா இதனை விஷேட விசாரணை அறிக்கை ஊடாக கோட்டை நீதிவானுக்கு அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளில், கொழும்பு - சைத்திய வீதியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் சட்டவிரோத சிறைச்சாலையாக ஒரு வதை முகாமும், திருமலை கடற்படை முகாமுக்குள் கன்சைட் எனும் நிலத்தட்சி சட்ட விரோத சிரை எனும் வதை முகாமும் செயற்பட்டுளமையை சுட்டிக்கடடியுள்ள சி.ஐ.டி. இவை அப்போது கடற்படை தளபதி அட்மிரால் ஒப் த பிலீட் வசந்த கரன்னாகொட அறிந்து அல்லது அவரது ஆலோசனை பிரகாரம் செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகம் எழுவதாக சி.ஐ.டி. விசாரணை அறிக்கை குறிப்பிடுகின்றது. நன்றி வீரகேசரி
காணாமல் போன குடும்பஸ்தர் கண்டுபிடிப்பு - கண்களை கட்டி கடத்தி சென்று தாக்கியதாக தெரிவிப்பு !
11/10/2019 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளம்குடும்பஸ்தர் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் நேற்று இரவு (9)கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த தனுஷன் என்பவர் தற்காப்பு கலை ஆசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான இளம்குடும்பஸ்தரை காணவில்லை என தெரிவித்து அவரது மனைவியால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த நபர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கூழாமுறிப்பு எனும் இடத்தில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வாகனம் ஒன்றில் ஏற்றி வரப்பட்டு தள்ளி வீழ்த்தப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய குடுபத்தினர் ஒட்டுசுட்டான் பொலிசாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த நபர் மீட்கபட்டு ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கபட்டு வீடு சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த நபரை இன்றையத்தினம் நடந்த சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துள்ளனர்.
அதன்படி சம்பவம் இடம்பெற்ற 7ஆம் திகதி இரவு உணவு வாங்கிக்கொண்டு வீடு செல்லும் வழியில் வாகனம் ஒன்றில் வந்த இனம்தெரியாத நபர்கள் தன்னிடம் வவுனியா செல்வதற்கான வழியை கேட்டு விட்டு தன்னை இழுத்து வாகனத்தின் உள்ளே போட்டு கண்களை கட்டி கொண்டு சென்றதாகவும் 45 நிமிடங்கள் வளைந்து வளைந்து சென்ற வாகனம் இறுதியில் ஒரு காட்டு பகுதியை போன்ற இடத்தில் உள்ள வீட்டு அறையொன்றில் தன்னை விட்டு அடைத்து விட்டு அடுத்தநாள் காலை அதாவது 8 ஆம் திகதி முதல் ஒருவர் தன்னை விசாரித்ததாகவும் நீ புலம்பெயர் புலிகளிடம் இருந்து நிதி பெறுகின்றாய் . நீ விடுதலை புலி ஆதரவாளர் என்று தாக்கியதாகவும் உண்மையை கூறு எவ்வாறு பணம் வருகின்றது என கேட்டு தொடர்ந்து இரண்டு நாட்களாக தாக்கியதாக குறித்த குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக நேற்று இரவு மீண்டும் வேன் ஒன்றில் ஏற்றி கண்களை கட்டி மீண்டும் 30 நிமிடங்கள் பயணித்து வீதி ஒன்றில் வானிலிருந்து உதைந்து வீழ்த்தி விட்டு சென்றுவிட்டாதகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருக்கின்றனர். நன்றி வீரகேசரி
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுக்க முயற்சி- மலேசியாவில் ஏழு பேர் கைது- தூதரகத்தை தாக்க திட்டமிட்டதாகவும் குற்றச்சாட்டு
10/10/2019 விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுப்பதற்கும் மலேசியாவிற்கான இலங்கை தூதரகத்தை தாக்குவதற்கும் திட்டமிட்டவர்களை கைதுசெய்துள்ளதாக மலேசியாவின்; பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவர் அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்துள்ளார்.
மலேசிய பிரஜைகளே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்தே விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயுர் கொடுப்பதற்கான முயற்சிகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளை தொடர்ந்து ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் முதல் இவர்களை கண்காணித்து வந்ததாக அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்,குணசேகரன் என்பவர் விடுதலைப்புலிகளை நினைவுகூறும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்,மற்றொருவர் அந்த அமைப்பிற்கு ஆதரவான பிரசுரங்களை விநியோகித்தார் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆதரவான உரையாற்றிய குற்றத்திற்காகவும் ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர மலேசிய தலைநகரில் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவளிக்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்த நபரையும், கைதுசெய்துள்ளதாகவும் அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்துள்ளார்.
இதேவேளை மலேசிய தலைநகரில் உள்ள இலங்கை தூதரகத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் காப்புறுதி முகவர் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்துள்ளார்.
மலேசியாவிற்கு வெளியே உள்ள சக்திகள் எங்கள் நாட்டில் விடுதலைப்புலிகளிற்கு புத்துயுர் அளிக்க முற்படுகின்றன என தெரிவித்துள்ள அயோப் கான் மைடின் பிட்சைஇதனை தடுத்து நிறுத்துவதற்காகவே நாங்கள் இவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யபட்டவர்களில் இருவர் டீஏபி கட்சியின் உறுப்பினர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
காணாமற்போன இளம் குடும்பஸ்தர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு
10/10/2019 வவுனியாவில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் நேற்றையதினம் காணாமற்போன நிலையில் அவரது சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் உள்ள காட்டில் முச்சக்கர வண்டி ஒன்று தனிமையில் நின்றிருந்த நிலையில், அதனை அவ்வீதியூடாக சென்ற இளைஞர்கள் அவதானித்துள்ளனர்.
அதன் பின்னர் பற்றைக்குள்ளிலிருந்து அவர் இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த சுகந்தன் (வயது-27) என்ற இளம் குடும்பத்தலைவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
கோவில்குளம் சந்தியில் நின்று முச்சக்கரவண்டி வாடகைக்குச் செலுத்தி வந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் வவுனியா நகருக்கு பயணித்த நிலையிலேயே காணாமற்போனார் என்று உறவினர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இளம் குடும்பத்தலைவர் இறுதியாக வவுனியா கள்ளிகுளம் பகுதியில் நின்றுள்ளதாக அவரது தொலைபேசி தரவுகள் (ஜிபிஎஸ்) வெளிக்காட்டியுள்ளன.
அதனடிப்படையில் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள், பொலிஸார் முன்னெடுத்த தேடுதலின் அடிப்படையில் கள்ளிக்காடு பகுதியிலிருந்து இளம் குடும்பத்தலைவர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக காணப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் வவுனியா தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நன்றி வீரகேசரி
படையினர் தாங்கள் நினைத்ததையெல்லாம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோத்தாபய தெரிவிக்கின்றாரா? மகிந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி- அச்சம்
13/10/2019 நவம்பர் 17 ம் திகதி சிறையிலுள்ள படைவீரர்கள் அனைவரையும் உடனடியா விடுதலை செய்வேன் என பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தனது அனுராதபுர பிரச்சாரக்கூட்டத்தில் தெரிவித்துள்ளமை குறித்து மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் பாதிக்கப்பட்டு நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கவலையும் அச்சமும் வெளியிட்டுள்ளனர்.
கோத்தாபய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் தனது கணவர் குறித்த விசாரணைகள் முற்றாக கைவிடப்படலாம் என காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட சண்டே ஒப்சேவரிற்கு தெரிவித்துள்ளார்.
நான் நேரடியாக ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராகவே போராடுகின்றேன் என்பதால் எனக்கும் எனது குழந்தைகளிற்கும் ஆபத்து என தெரிவித்துள்ள அவர் படையினர் எந்த குற்றத்தையும் செய்யலாம் அதற்கான தண்டனையை அனுபவிக்கவேண்டியதில்லை என்ற அபிப்பிராயத்தை கோத்தபாய ராஜபக்ச உருவாக்குகின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட டிலான் ஜலாம்டீனின் தாய் ஜெனீபர் வீரசிங்கவும் கோத்தபாய ராஜபக்சவின் பிரச்சார அறிவிப்பு குறித்து அச்சம் வெளியிட்டுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச விடுதலை செய்ய முயல்பவர்களே எனது மகனை கடத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவின் அறிவிப்பு இலங்கையின் உண்மையான படைவீரர்களை அவமதிக்கும் ஒரு நடவடிக்கை எனவும் குறிப்பிட்டுள்ள ஜெனீபர் வீரசிங்க கோத்தபாய ராஜபக்ச தனது தேர்தல் அறிவிப்பின் மூலம் படையினர் தாங்கள் நினைத்ததையெல்லாம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கூறவருகின்றாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் வாக்குறுதி அவர் நீதித்துறையை மதிக்கவில்லை அதற்கு அஞ்சவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது எனவும் ஜெனிவர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
படையினரை சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாக்ககூடிய பாதுகாவலர் ஒருவர் இருப்பதால் படையினர் ஆள்கடத்தலில் கொலைகளில் ஈடுபடலாம் என கோத்தபாய ராஜபக்ச தெரிவிக்க முயல்கின்றாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது மகனை கடத்தியவர்கள் குறித்து சிஐடியினரிடம் தான் வெளிப்படையாக தகவல்களை வெளியிட்டுள்ளதால் எதிர்காலத்தில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்னால் இந்த நாட்டில் தொடர்ந்தும் வாழ முடியுமா என தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் தான் சட்டத்தையும் நீதித்துறையின் நடவடிக்கைகளையும் தனது கரங்களில் எடுத்துக்கொள்வேன் என்பதையே கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார் என வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரின் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியொருவர் நீதித்துறையின் நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது,இது மிகவும் ஆபத்தான அறிக்கை,இதன் மூலம் ஜனாதிபதியானால் தான் எப்படி நாட்டை ஆளுவேன் என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார் எனவும் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment