கசடற்ற உணர்வுதனை காலமெலாம் இருத்திடுவோம் ! - மகாதேவஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா

              சாதிக்க வேண்டுமெனில் சகிப்பங்கு தேவையாகும்
                    போதிக்க வேண்டுமெனில் பொறுமையங்கு முதலாகும்
              வாதிக்க வேண்டுமென்று மனமெண்ணும் எண்ணமதை
                      சாதிக்கும் போதிக்கும் வழிசெலுத்தல் நன்மையன்றோ  !

              வீண்வாதம் விரோதம் வேதனைக்கு வித்தாகும் 
                    வித்ததனை விருட்சமாய் ஆக்கிவிட  முனையாதீர்
              மனமதிலே நல்லெண்ணம் எனும்விதையை ஊன்றிவிடின்
                      மாநிலத்தில் நல்வாழ்வு சோலையங்கு தோன்றிவிடும்  !

              உயர்வுபற்றிப் பேசுகிறோம் தாழ்வுபற்றிப் பேசுகிறோம் 
                      உணர்வுபற்றி நினைப்பதற்கு உணர்வற்றே இருக்கின்றோம் 
               உணர்வுடனே வாழுகிறோம் எனுமுணர்வு உருவாகின் 
                       உலகிலெந்த பிரச்சனையும் உருவாக இடமுண்டோ !

             சன்மார்க்கம்  நன்மார்க்கம்  எனுமுணர்வை  வளர்த்திடுவோம் 
                   சண்டையிடும் பேயுணர்வை தானழித்து  நின்றிடுவோம் 
             களங்கமற்ற அத்தனையும் கருத்திருத்த உணர்ந்திடுவோம் 
                    கசடற்ற உணர்வுதனை காலமெலாம் இருத்திடுவோம் ! 
                     








No comments: