28/08/2019 திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு தொடக் கம் வடக்கின் யாழ்ப்­பாணம் வரை­யான பிர­தே­சங்­களின் நிலக்கீழ் கனிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு என்­ப­னவற்றைக் கண்­ட­றியும் செயற்­திட்­டத்­திற்­கான இரு­த­ரப்பு ஒப்­பந்தம் நெடுஞ்­சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி மற்றும் பெற்­றோ­லி­ய­வள அபி­வி­ருத்தி அமைச்­சிற்கும் பிரான்ஸ் மற்றும் நோர்வே ஆகிய நாடு­களின் தனியார் கம்­ப­னி­க­ளுக்கும் இடையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கைச்­சாத்­தி­டப்­பட்­டது.
கொழும்பு பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள நெடுஞ்­ சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி மற்றும் பெற்­றோ­லி­ய­வள அபி­வி­ருத்தி அமைச்சில் நேற்­றைய தினம் அமைச்சர் கபீர் ஹாசீமுக்கும் பிரான்ஸை தள­மாகக் கொண்­டி­யங்கும் டோடல் ஈ அன்ட் பீ மற்றும் நோர்­வேயை தள­மாகக் கொண்­டி­யங்கும் எகுனோர் என்ற தனியார் நிறு­வ­னங்­களின் பிரதி தலை­வர்­க­ளுக்கும் இடையில் இவ்­வி­ரு­த­ரப்பு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.


ஒப்­பந்­தத்தின் பிர­காரம் திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு உள்­ளிட்ட கிழக்கு மாகா­ணத்தின் பல்­வேறு பிர­தே­சங்­க­ளிலும் கனிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு என்­பன­வற்றைக் கண்­ட­றியும் பணியை இவ்­விரு நிறு­வ­னங்­களும் மேற்­கொள்ளும். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டோடல் ஈ அன்ட் பீ என்ற நிறு­வ­னமே இச்­செ­யற்­றிட்­டத்தின் பிர­தான ஒப்­பந்­த­தாரர் எனும் அதே­வேளை, நோர்வே நாட்டு நிறு­வனம் வளங்­களைக் கண்­ட­றியும் பணி­களில் தொழில்­நுட்ப உத­வி­களை வழங்­கு­வ­துடன், அதற்­கான மொத்த செலவில் 30 சத­வீ­தத்தை ஏற்­றுக்­கொள்ளும். இரு­த­ரப்பு ஒப்­பந்தம் கைச்­சாத்­திட்ட பின்னர் அது­கு­றித்துக் கருத்து வெளி­யிட்ட நெடுஞ்­சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி மற்றும் பெற்­றோ­லி­ய­வள அபி­வி­ருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் கூறி­ய­தா­வது,
இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் இது மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒப்­பந்­த­மாகும். ஏற்­க­னவே மன்னார் நிலப்­ப­ரப்பில் காணப்­படும் கனிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு என்­ப­னவற்றைக் கண்­ட­றிந்து அகழும் பணி­க­ளுக்­கான இரு­வா­ரங்­க­ளுக்கு முன்னர் பெல்­ஜியோ என்ற வேறொரு தனியார் நிறு­வ­னத்­துடன் ஒப்­பந்­த­மொன்றில் கைச்­சாத்­திட்­டி­ருந்தோம். 

அதன் தொடர்ச்­சி­யாக தற்­போது பல்­வேறு வகை­யிலும் முக்­கி­யத்­துவம் பெற்ற பிரான்ஸ் மற்றும் நோர்வே ஆகிய நாடு­க­ளுடன் ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­தி­டு­கின்றோம்.

இது கடந்த 30 வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஆரம்­பித்­தி­ருக்க வேண்­டிய செயற்­திட்டம் என்­றாலும்கூட, தற்­போ­தேனும் நாம் அதனை நடை­மு­றைப்­ப­டுத்தும் மட்­டத்­திற்கு வந்­த­மை­யை­யிட்டு மகிழ்ச்சி அடை­கின்றோம். இந்த ஒப்­பந்­தத்தின் பிர­காரம் தொழில்­நுட்ப வச­தி­களைக் கொண்டு கனிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு என்­பன காணப்­படும் பிர­தே­சங்கள் கண்­ட­றி­யப்­படும். 

அதன் பின்னர் அவற்றை அகழ்ந்­தெ­டுத்தல் மற்றும் உற்­பத்தி நட­வ­டிக்­கைகள் தொடர்பிலும், இருதரப்பும் அதனை எதனடிப்படையில் பகிர்வது என்பது குறித்து பின்னர் கலந்தாலோசித்து இணக்கப்பாடு எட்டப்படும். 

எதுஎவ்வாறெனினும் எதிர் வரும் 2022ஆம் ஆண்டளவில் இலங்கை கனிய எண்ணெய், இயற்கை வாயு என்ப னவற்றை சுயமாக உற்பத்தி செய்யும் ஒரு நாடாக மாறியிருக்கும்.  நன்றி வீரகேசரி