அரவணைக்கத் தேரேறி வாமுருகா மால்மருகா ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா




தேரேறி வருகின்ற மால்மருகா
               தினமுன்னை தொழுகின்றோம் மால்மருகா
               ஊர்கூடி தேரிழுப்போம் மால்மருகா
                உனதருளை தந்திடுவாய் மால்மருகா
                வேரறுப்பாய் வெவ்வினையை மால்மருகா
                 விரைந்தோடு வருகின்றோம் மால்மருகா
                 நல்லூரைக் கண்டவுடன் மால்மருகா
                 நல்லுணர்வே எழுகிறதே மால்மருகா !


                  ஆடுகிறோம் பாடுகிறோம் மால்மருகா
                  ஆணவத்தை அகற்றிவிடு மால்மருகா
                  ஓடியோடி வருகின்றோம் மால்மருகா
                   உனதுமுகம் காண்பதற்கே மால்மருகா 
                   வேல்கொண்டு வினைகளையும் மால்மருகா 
                   விடிவுவர அருளிடுவாய் மால்மருகா
                   தாழ்தொழுது நிற்கின்றோம் மால்மருகா
                    தர்மமெங்கும் ஓங்கச்செய்வாய் மால்மருகா ! 


                    அசுரகுணம் அழித்திருவாய் மால்மருகா 
                    அன்பைமனம் இருத்திடுவாய் மால்மருகா
                    பொறுமைதனை தந்திடுவாய் மால்மருகா 
                    பொய்மைதனை அகற்றிடுவாய் மால்மருகா 
                     குருவெனவே வந்திடுவாய் மால்மருகா
                     குவலயத்தை காத்திடுவாய் மால்மருகா
                     அருவுருவாய் ஆனவனே மால்மருகா
                     அரவணைக்க தேரேறி வாமுருகா ! 




No comments: