சினிமா - வந்தா ராஜாவா தான் வருவேன்

.


வந்தா ராஜாவா தான் வருவேன் 100 சதவீதம் சிம்புவிற்கு பொருந்தக்கூடிய டைட்டில். ஏனெனில், அவர் படம் வந்தாலே பல சர்ச்சைகளை கடந்து தான் வரும், அப்படி அண்டாவில் பால் என்ற புதுவகை கான்செப்ட் சர்ச்சையுடன் வெளிவந்துள்ள வந்தா ராஜாவா தான் வருவேன், வாகை சூடினாரா? பார்ப்போம்.

கதைக்களம்

சிம்பு ஸ்பெயினில் பெரிய பிஸினஸ் மேனின் மகனாக இருக்கின்றார். அவருடைய தாத்தா நாசரின் 80வது பிறந்த நாளுக்கு தன் மகளை பார்க்க வேண்டும் என விரும்புகிறார்.
தன் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்த காரணத்தால் தன் மகள் ரம்யா கிருஷ்ணாவை வீட்டை விட்டு வெளியே துறத்துகிறார்.
இதனால் தன் பேரன் சிம்புவிடம் நீ தான் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்று கட்டளையிட சிம்பு தாத்தா நாசரின் விருப்பத்தை நிறைவேற்றினாரா? இது தான் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சிம்பு எப்போது வந்தாலும் ராஜா தான் போல, அவர் என்ன சொன்னாலும் ஆடியன்ஸ் ரசிக்கின்றனர். அந்த அளவிற்கு தன் ரசிகர்கள் மனதை புரிந்து வைத்துள்ளார். என்ன உடல் எடை தான், எப்படி நடனமாடிய சிம்பு ஆடுவதற்கே கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை.
மேகா ஆகாஷ் ஒரு வழியாக தான் ஹீரோயினாக நடித்த படம் ரிலிஸான சந்தோஷத்தில் தான் இருப்பார். தமிழ் சினிமாவிற்கே உரிய ஏமாளி ஹீரோயின் என்றாலும் சுந்தர்.சி படத்திற்கே உண்டான கிளாமரில் குறை வைக்கவில்லை. கேத்ரின், ரோபோ ஷங்கர், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், பிரபு என ஒரு நட்சத்திர பட்டாளமே உள்ளது. சுந்தர்.சி அவர்களை முடிந்த அளவிற்கு ஸ்கிரீனுக்குள் கொண்டு வந்ததே பெரிய விஷயம்.
அதிலும் கிளைமேக்ஸில் யோகி பாபுவை வைத்து செய்யும் கலாட்டா தியேட்டரே ரகளை தான். ஆனால், படத்தின் நீளம் தான் கொஞ்சம் பிரச்சனையாக தெரிகிறது.
என்ன தான் இனிப்பு என்றாலும் திகட்ட திகட்ட சாப்பிட முடியாது அல்லவா, அது போல் தான் இந்த கதையும். சுந்தர்.சியின் பலம் காமெடி, எமோஷ்னல் என்பதால் அதில் செம்ம ஸ்கோர் செய்கின்றார்.
ஹிப்ஹாப் ஆதியின் இசை இன்றைய இளைஞர்களை கவரும் படி இருந்தாலும் இந்த டியூனை எங்கையோ கேட்டது போல் உள்ளதே என்பது போல் உள்ளது. இடையில் காமெடிக்கு தர்மதுரை இசையெல்லாம் வந்து செல்கிறது. ஒளிப்பதிவு படம் முழுவதும் செம்ம கலர்புல் தான்.
ஷுட்டிங் வராதது பற்றி வசனம் மற்றும் அவரை பற்றிய சொந்த விஷயங்களின் விளக்கம் நிறைய வருகிறது. ரசிக்கும் படி இருந்தாலும் சிம்பு இன்னும் எத்தனை படத்தில் தான் நல்லவன், கெட்டவன் வசனம் பற்றி ஓட்டுவார் என்று தெரியவில்லை.

க்ளாப்ஸ்

சிம்பு முடிந்த அளவிற்கு என்ன தன் ரசிகர்களுக்கு தேவையோ அதை சிறப்பாக செய்துள்ளார்.
காமெடி காட்சிகள் குறிப்பாக யோகி பாபு வரும் காட்சிகள்.

பல்ப்ஸ்

படத்தின் நீளம் இன்னும் கூட கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
படத்தின் சண்டைக்காட்சிகள் அநியாயத்திற்கு ஏதோ ரப்பர் பால் அடித்து பறக்க விடுகின்றனர்.
மொத்தத்தில் தெலுங்கில் பார்க்காதவர்களுக்கு இந்த ராஜா ரசிக்க வைப்பார்.

No comments: