.
படித்திடுவார் பல பேர்கள்
படித்திடுவார் பல பேர்கள்
பட்டந்தனை குவித்து நிற்பார்
பட்டம் பெற்ற பின்னாலே
பண்பதனை விட்டு நிற்பார்
பட்டம் யாவும் அவருக்கு
பணம் உழைக்க வழிசமைக்கும்
பண்பதனை வாழ்வில் அவர்
பறக்க விட்டே இருந்திடுவார்
அன்பு பாசம் நேசமெலாம்
அவர் படிப்பில் அடங்கிருக்கும்
ஆனாலும் அவர் மனமோ
அதன் பக்கம் அணுகாது
அதிகாரம் அகங் காரம்
அவரிடத்தே அமர்ந்து விடும்
அவர் படித்த படிப்பெல்லாம்
அழுதபடி பார்த்து நிற்கும்
கற்றவற்றை மனம் இருத்தி
கசடுதனை அகற்ற வேண்டும்
கற்றவற்றில் வரும் பொருளை
நற்றுணையாய் கொள்ள வேண்டும்
கற்றவற்றால் காசு தேடும்
கருத்தினையே மாற்ற வேண்டும்
கற்ற கல்வி சிறப்படைய
கண்ணியத்தை ஏற்க வேண்டும்
No comments:
Post a Comment